மகாதீர்-முகாபே வித்தியாசத்தைக் கண்டு பிடியுங்கள்

umno‘முகாபே தமது வலுவான எதிர்ப்பாளர் மோர்கன் ஸவாங்கிரைக்கும் அவரது  ஜனநாயக மாற்றக் கட்சிக்கும் ஒற்றுமை அரசாங்கத்தில் இடம் கொடுத்து  அவர்களை புதைத்து விட்டார்’

நஜிப் ஒற்றுமை அரசாங்கத்தை நாடுவதை அன்வார் உறுதிப்படுத்துகிறார்

நியாயமானவன்: நாடு முன்னேற ஒற்றுமை அரசாங்கம் தான் வழி என்றால்  அதற்கு ஏன் வாய்ப்புக் கொடுக்கக் கூடாது ? அரசாங்கத்தில் ஒரு பகுதியாக  இருந்து கொண்டு பக்காத்தான் ராக்யாட் மக்களுக்காக போராடலாமே ? அதே  வேளையில் அத்துமீறல்களையும் கண்காணிக்கலாமே ?

முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட்-உடன் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்  சதுரங்க ஆட்டம் ஆடுகிறாரா ? ஒற்றுமை அரசாங்கம் வழி கட்டுப்பாட்டை  இழக்காமல் அம்னோவைத் திருத்த முடியும்.

நல்ல நாள்: ஒற்றுமை அரசாங்கம் பற்றிய செய்தியை நான் அவநம்பிக்கையுடன்  தான் வாசித்தேன். என்றாலும் அரசியல் என்பது முடியாததை முடிக்கும் கலை  எனச் சொல்வார்கள்.

உண்மையான மாற்றங்கள் ஏற்படுமானால் நம்மில் பலர் ஒற்றுமை அரசாங்கத்துக்கு  ஆதரவு அளிப்பது நிச்சயம்.

ஆனால் அதிகாரத்தைத் தக்க வைத்துக் கொள்ளும் அரசியல் நாடகமாக அது  இருந்தால் மக்கள் நிச்சயம் 14வது தேர்தலில் பதிலடி கொடுப்பர்.

கலா: அம்னோ வழி நடத்தும் பிஎன் மாற்றத்துக்கு தயாராக இல்லை என்பதை  அதன் அரசியல்வாதிகள் நடந்து கொள்ளும் முறையிலிருந்து அறியலாம். அந்த  சூழ்நிலையில் பக்காத்தான் அந்த அழைப்பை ஏற்கும் என நீங்கள் எப்படி  எதிர்ப்பார்க்கலாம் ?

நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் உதவுவது இந்த ஆட்சியின் அடையாளங்கள்.  மாற்றம் இப்போது வேண்டும் எனச் சொல்லும் பக்காத்தானுடன் அது எப்படி  ஒத்துப் போகும். கறுப்பு வெள்ளையுடன் கலக்குமா ? ‘பிசாசு’ ‘தேவதையுடன்  நட்புக் கொள்ளுமா ?

நஜிப் யோசனைக்கு அன்வார் இணங்கினால் அவருக்கு வாக்களித்த 51
விழுக்காட்டினருக்கு அவர் என்ன பதில் சொல்லப் போகிறார் ?

சீரழிவைத் தடுக்க வேண்டும்: அன்வார், எச்சரிக்கை தேவை. மகாதீர் கூட அந்த  யோசனையை வடிவமைத்திருக்கலாம்.

அவரது நல்ல நண்பரான ரோபர்ட் முகாபே தமது வலுவான எதிர்ப்பாளர்
மோர்கன் ஸவாங்கிரைக்கும் அவரது ஜனநாயக மாற்றக் கட்சிக்கும் ஒற்றுமை அரசாங்கத்தில் இடம் கொடுத்து அவர்களை புதைத்து விட்டார்.

ஸவாங்கிரைக்கு அதிகாரம் இல்லாத பிரதமர் பதவியும் அவரது கட்சி
உறுப்பினர்களுக்கு பயனற்ற பதவிகளும் கொடுக்கப்பட்டன. நாட்டை ஒரு  தவணைக் காலம் ஆண்ட பின்னர் ஜனநாயக மாற்றக் கட்சி மோசமாக தோல்வி  கண்டு விட்டது.

முகாபே வலுவான ஒர் எதிர்க்கட்சியை ஆளும் கட்சியாக்கி ஆனால் சேவகர்  கட்சியாக மாற்றி விட்டார். அண்மைய சிம்பாப்வே தேர்தல்களில் ஜனநாயக  மாற்றக் கட்சி படு தோல்வி அடைந்ததால் அரசாங்கத்தில் அதனைச் சேர்த்துக்  கொள்ள வேண்டிய அவசியமே எழவில்லை.

மலேசியா சிம்பாப்வேக்கு இடையிலும் மகாதீர் முகாபேக்கு இடையிலும் யும் பல  ஒற்றுமைகள் உள்ளன.

பேஸ்: நடப்பு சூழ்நிலையில் ஒற்றுமை அரசாங்கம் தேவை இல்லை. எந்த  நேரத்திலும் விழக் கூடிய மரத்துக்கு முட்டுக் கொடுக்க வேண்டியதில்லை.

ஒற்றுமை அரசாங்கம் அம்னோ பாரு-பிஎன் -னுக்கு திருப்பு முனையாக
அமையலாம். அது மீண்டும் வலுப் பெற்றதும் அது பக்காத்தானை புதைத்து  விடும். பல ஆண்டுகளுக்கு பிஎன் பாஸ் கட்சிக்கு அதனைத் தானே செய்தது.

பக்காத்தான் பொறுமையாக இருக்க வேண்டும். அதன் இரண்டாம் நிலைத்  தலைவர்கள் அம்னோ பாரு-பிஎன் தலைவர்களை விட எவ்வளவோ சிறந்தவர்கள்.

 

TAGS: