தயவு செய்து ஒரே மலேசியா பிரதமர் எழுந்து நிற்க வேண்டும்

najib“நமது பொருளாதாரமும் இன இணக்கமும் படு வேகமாக சரியும் வேளையில்  அவர் மிக மிக அமைதியாக இருக்கிறார்”

இஸ்லாமிய அறிஞர்கள்: சூராவ் விஷயத்தை விவேகமாகக் கையாளுங்கள்

டபிள்யூஜி321: ஒரே மலேசியா பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் ஏதாவது சொல்ல  வேண்டும். முன்னாள் பிரதமர் அப்துல்லா அகமட் படாவியை அவருடைய உடல்  ஆரோக்கிய நிலையை அறியாமல் மக்கள் ‘தூங்கும் பிரதமர்’ என  சிறுமைப்படுத்துவது உண்டு.

பிற்காலத்தில் நஜிப்பை வாய் பேசாத காது கேளாத பிரதமர் என மக்கள்  கேலி செய்ய அவர் அனுமதிக்க மாட்டார் என நான் நம்புகிறேன். அமைதியாக  இருப்பது சிறந்த தேர்வு அல்ல.

அடையாளம் இல்லாதவன்#49857050: இந்த நாடு சென்று கொண்டிருக்கும் பாதை  மீது நான் மிகவும் கவலை அடைந்துள்ளேன். பல இன மக்களும்  கலந்துறவாடுவதற்கு உதவியாக 60களில் ‘muhibah’ என்ற சொல் பெரிதும்  வலியுறுத்தப்பட்டது.

இப்போது முஸ்லிம் அல்லாதாராகிய நாங்கள் இஸ்லாம் குறித்து எதுவும்  சொல்வதற்கு முன்னர் கவனமாக சிந்திக்க வேண்டியிருக்கிறது. இல்லை என்றால்  எங்கள் மீது தேச நிந்தனைக் குற்றச்சாட்டு சுமத்தப்படலாம்.

எல்லாவற்றுக்கும் மேலாக அனைத்து மலேசியர்களுக்கும் பிரதமராக இருக்க  வேண்டிய ஒருவர், தாம் மலேசியப் பிரதமர் என்பதைக் காட்டவே இல்லை.

நமது பொருளாதாரமும் இன இணக்கமும் படு வேகமாக சரியும் வேளையில்  அவர் மிக மிக அமைதியாக இருக்கிறார்.

துனார்மி: இஸ்லாம், கிறிஸ்துவம், பௌத்தம். இந்து ஆகிய எந்த மதங்களையும்  குறை கூற வேண்டிய அவசியமே இல்லை. நல்ல கண்ணோட்டத்தை நாம் நிலை  நிறுத்துவோம்.

எல்லா தீங்குகளுக்கும் மூல காரணம் அம்னோவாகும். சமயப் போதனையிலிருந்து போதவிலகிச் செல்வது அம்னோவாகும். மக்களிடையே ஆபத்தான இன, சமய  ஆட்டத்தை அது நடத்திக் கொண்டிருக்கிறது.

ஸ்விபெண்டர்: மலேசியாவில் முஸ்லிம்களை இழிவுபடுத்தும் நோக்கம் யாருக்கும்  இல்லை. சூராவில் அந்த பௌத்தர்கள் மேற்கொண்ட நடவடிக்கைக்கு உயர் நிலை  பௌத்த பிக்கு கூட மன்னிப்புக் கேட்டுக் கொண்டு விட்டார்.

அல்லிஸ்: அடுத்த 15 ஆண்டுகளில் பெட்ரோனாஸ் பணம் தீர்ந்து போனதும்  சிரியா, ஈராக், ஈரான், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் போன்ற தோல்வி கண்ட  திவாலான இஸ்லாமிய நாடாக மலேசியா மாறப் போகிறது.

அரசாங்க வருமானத்தில் 40 விழுக்காட்டை பெட்ரோனாஸ் கொடுக்கிறது.  இப்போது சிறந்த பெட்ரோனாஸ் மூளை யாருக்கு வேலை செய்கின்றது என்பது  உங்களுக்குத் தெரியுமா ? ஆம் ஹசான் மரைக்கான் என்ற அந்த மனிதர்  இப்போது சிங்கப்பூரில் இருக்கிறார். அவர் செய்தது நல்ல முடிவு.

சிறந்த மலேசிய மூளைகள் அன்றாடம் நாட்டிலிருந்து வெளியேறிக் கொண்டிருப்பது உங்களுக்குத் தெரியுமா ? உண்மையில் அந்த எண்ணிக்கை  உங்களுக்கு அதிர்ச்சி அளிக்கும். விரைவில் மலேசியாவில் தரம் குறைந்த  மனிதர்கள் மட்டுமே மிஞ்சியிருப்பர்.

லாபிஸ் மனிதன்: அந்த இஸ்லாமிய அறிஞர்களைப் போல அனைவரும்  சிந்தித்தால் மலேசியா வாழ்வதற்குச் சிறந்த நாடாக இருக்கும். சமய  விவகாரங்களில் நேர்மையாக நடந்து கொள்ளுங்கள். அனைவரையும் மதிக்க  வேண்டும்.

 

TAGS: