மகாதீர் முகமட் வில்லனாகிறார்

mahathir“மகாதீர் அவர்களே பிஎன் அரசாங்கமும் போலீஸும் நன்றாக வேலை  செய்யாததால் எங்களுடைய புனிதமான சிவில் சுதந்திரங்களை நீங்கள் பறித்துக்  கொள்வதற்கு நாங்கள் அனுமதிக்க மாட்டோம்.”

“சுதந்திரங்களின் விலை அதிகமான துப்பாக்கிச் சூடுகள் என எச்சரிக்கிறார்  மகாதீர்”

பார்வையாளன்: மலேசியாவில் குற்றச் செயல்கள் பெருகி விட்டதற்கு முன்னாள்  பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் முக்கியக் காரணமாகும்.

பெரும்பான்மை மலாய்க்காரர்களுடைய வாக்குகளைப் பெற்று ஆட்சியில்  நிலைத்திருந்து பில்லியன் கணக்கில் திருடுவதற்காக அவர் சீனர்களுக்கும்  இந்தியர்களுக்கும் எதிராக இனவாத, பாகுபாடான கொள்கைகளை அவர்  அமலாக்கினார்.

வேலைக்கு ஆள் சேர்ப்பதற்கு தகுதிக்குப் பதில் இனமும் சமயமும் தகுதிகளாகக்  கருதப்பட்டதால் போலீஸ் படை உட்பட முழு பொதுச் சேவையின் தரமும்  சரிந்தது.

இந்த நாட்டில் பிறந்த சில நூறாயிரக்கணக்கான இந்தியர்களுக்கு குடியுரிமை  மறுக்கப்பட்டது. அதனால் சட்டப்பூர்வமாக அவர்கள் வேலை செய்ய முடியாத  நிலையும் ஏற்பட்டது. அதனால் அவர்களில் பலர் உயிர் வாழ்வதற்கு குற்றச்  செயல்களில் ஈடுபடத் தொடங்கினர்.

தேர்தல்களில் வெற்றி பெறுவதற்காக நூறாயிரக்கணக்கான அந்நியர்களுக்குச்  சட்டவிரோதமாகக் குடியுரிமையை வழங்கியதின் மூலம் மகாதீர் தேசத்  துரோகத்தையும் செய்துள்ளார்.

மகாதீர் போலீஸ் படையின் உயரிய தரத்தை நிலை நிறுத்தி, அந்நியர்களுக்குப்  பதில் உள்ளூர் மக்களுக்கு வேலை வாய்ப்புக்களைக் கொடுத்திருந்தால்  பெரும்பாலான உள்ளூர் மக்களுக்கு வேலை கிடைத்திருக்கும். அப்போது  கிரிமினல்கள் குறைவாகவே இருப்பார். கிரிமினல்கள் எண்ணிக்கை குறைவாக  இருந்தால் அவர்களை திறமையான போலீஸ் படை எளிதாகக் கட்டுப்படுத்தி விட
முடியும்.

ஏரியஸ்46: மகாதீர் மக்களுடைய சுதந்திரத்தை துப்பாக்கிச் சூட்டுச்
சம்பவங்களுடன் அவர் பிணைத்துப் பேசியிருப்பது அவருடைய வினோதமான  எண்ணத்தையும் குறுகலான கோணல் புத்தியையும் காட்டுகின்றது.

விசாரணை இல்லாமல் தடுத்து வைக்க வகை செய்யும் கொடூரமான சட்டங்கள்  தொடர வேண்டும் என மகாதீர் வலியுறுத்துவதை நாம் அறிவோம். அந்தச்  சட்டங்கள் இரு பக்கமும் கூர்மையானவை. நிர்வாகத்தை எதிர்க்கின்றவர்களை  மௌனமாக இருக்கச் செய்வதற்கும் அதனைப் பயன்படுத்த முடியும். அவருடைய
அபத்தமான வாதங்களை பொருட்படுத்தக் கூடாது.

பெர்ட் தான்: 22 ஆண்டுகள் பிரதமராக இருந்த ஒருவர் இப்படியா பேசுவது ?  அவருக்கு வயதாகி விட்டதால் எந்த அடிப்படையும் உருப்படியான ஆதாரமும்  இல்லாமல் அவர் பேசலாமா ?

போலீசார் நடப்புச் சட்டங்களைப் பயன்படுத்தி மலிந்து விட்ட குற்றங்களை  ஒடுக்க முடியாமல் போனால் அவர்கள் அனைவரும் ராஜினாமா செய்து, அந்த  வேலையைச் செய்யக் கூடியவர்களுக்கு வழி விட வேண்டும்.

மகாதீர் அவர்களே பிஎன் அரசாங்கமும் போலீஸும் நன்றாக வேலை
செய்யாததால் எங்களுடைய புனிதமான சிவில் சுதந்திரங்களை நீங்கள் பறித்துக்  கொள்வதற்கு நாங்கள் அனுமதிக்க மாட்டோம்.

தேஹாசாப்பி: துன் மகாதீர் அவர்களே நீங்கள் சொல்வது உங்களுக்குப் புரிகிறதா  அல்லது கவனத்தை ஈர்ப்பதற்காக அவ்வாறு பேசுகின்றீர்களா ? அதிகமான  சுதந்திரத்தையும் அதிகமான துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களை நீங்கள்  இணைத்துப் பேசியுள்ளது மிகத் தவறு.

இது முட்டாள்தனமான அறிக்கை. இது போன்ற அபத்தங்களை நிறுத்திக்
கொள்ளுங்கள். நவீன சாதனங்களை வாக்குவதற்குப் பெரும்பணம்
செலவிடப்பட்டும் சம்பள உயர்வு கொடுக்கப்பட்டும் நமது போலீஸ் படை  தோல்வி கண்டுள்ளது. பொது மக்களுடைய பாதுகாப்புக்கு மருட்டல்  ஏற்பட்டுள்ளது.

ஏற்கனவே பல முறை கூறப்பட்டுள்ள ஊழலின் விளைவாக அது இருக்கலாமே ?  அதனை ஒப்புக்கொண்டு சரியான ஆய்வு செய்யப்படா விட்டால் போலீஸ்  தோல்விக்கான மூல காரணத்தை அறியவும் முடியாது. சரி செய்வதற்கான  நடவடிக்கையையும் எடுக்க முடியாது.

கொஹிட்டோ எர்கோ சம்: மகாதீர் மீண்டும் அபத்தமாக பேசுகிறார். துப்பாக்கிச்  சூட்டுச் சம்பவங்களுக்கும் கொலைகளுக்கும் சுதந்திரத்துக்கும் என்ன சம்பந்தம் ?  டாக்டர் அம்னோ என அறியப்பட்ட அவர் இப்போது வில்லனாக மாறுகிறார்.

 

TAGS: