தமிழ்ப்பள்ளிகளின் முதல் எதிரி அம்னோதான்

-மு. குலசேகரன், நாடாளுமன்ற உறுப்பினர், ஆகஸ்ட் 17, 2013.

kula2008ல் மக்கள், குறிப்பாக இந்தியர்கள், பாரிசான்  மீது கொண்ட அதிருப்தியால் பேரா அரசு கவிழ்ந்தது. அதன் பின்னர் பதவி ஏற்ற மக்கள் கூட்டணி அரசு சீனப் பள்ளிகளுக்காக 2,500 ஏக்கர் நிலத்தை ஒதுக்கியத்து . அந்த நிலத்தை .சீ. கௌரமாகவும் நேர்மையாகவும் சீனப்பள்ளிகளின் அறாவாரியத்திடம் ஒப்படைத்து.

 

 இப்பொழுது அந்த வாரியத்தின் கீழ் அந்த நிலம் மேம்பாடு கண்டு வருகிறது. தமிழ்ப் பள்ளிகளுக்கென்று ஒரு வாரியமோ அமைப்போ இல்லாத காரணத்தினால், அக்கால கட்டத்தில் இது போன்ற நிலத்தை தமிழ்ப்பள்ளிகளுக்கென்று பதிவு செய்ய முடியவில்லை.

 

இருந்தாலும் அன்று இருந்த கூட்டணி அரசு நானும் சிவநேசனும் விடுத்த வேண்டுகோளுக்கிணங்க மாநில நில விவகாரத்துறை கொள்கை அளவில் 2000 ஏக்கர் நிலத்தை ஒதுக்குவதாக ஒப்புக்கொண்டது. ஆட்சிக் கவிழ்க்கப்பட்டு மீண்டும் பாரிசான் ஆட்சிக்கு வந்த பின்னர் கூட்டணி அரசு செய்ய இருந்ததை பாரிசன் அரசு செய்தது. இதுதான் உண்மை.

 

எங்கள் ஆட்சி காலத்தில் ஏன் நிலம் ஒதுக்கவில்லை என்று கேள்வி எழுப்பிய பேராக் மந்திரி புசாருக்கு இது தெரிந்திருந்தும் தெரியாதது போல  உண்மைக்கு புறம்பான செய்திகளை வெளியிடுகிறார்.

 

தமிழ்ப்பள்ளிகளின் முதல் எதிரி அம்னோதான்

 

அப்படி ஒதுக்கிய நிலத்தை பாரிசான் அரசங்கத்தால் கடந்த 5 வருடங்களாக செயல் வடிவம் கொடுக்க முடியாத போது, வெறும் 11 மாதங்கள் மட்டுமே ஆட்சி செய்த மக்கள் கூட்டணியால் எப்படிச்  அதனைச் செய்யமுடியும் என்பதனை அவர் சிந்தித்தாரா? ஆகவே உண்மையை மறைக்க வேண்டாம் என்று மந்திரி புசாரைக் கேட்டுக்கொள்கிறேன்.

 

நிலம் பள்ளிகளுக்கு கொடுக்க வேண்டும் என்ற திட்டத்தைக் கொண்டு வந்ததே கூட்டணி அரசுதான் என்பதை அவருக்கு நினைவூட்டுகிறேன். இது தன்னுடைய யோசனையில் உத்தித்தத் திட்டம் என்று அவர் கூறுவது அறியாமையால் வந்தது என்றுதான் சொல்லவேண்டும்.  

 

52 வருட ஆட்சியில் நில ஒதுக்கீடு பற்றி மூச்சுக்கூட விடாத பாரிசான் அரசு திடீர் ஞானோதயம் வந்தது போல மக்கள் கூட்டணி அரசாங்கத்தின் திட்டத்தை காப்பியடித்துவிட்டு புதிய சாதனை செய்தது போல் பேசுவது வேடிக்கையாக உள்ளது.  

 

அவ்வாறே முஸ்லீம் அல்லாதவர்கள் துறை என்று ஒன்றை ஏற்படுத்தியதே கூட்டணி அரசாங்கத்தின் ஆட்சியில்தான் என்பதனை மந்திரி புசார் அறிவாரா?

 

தமிழ்ப் பள்ளிகள் கடந்த 58 வருடங்களில்  எவ்வளவு கேவலமாக நடத்தப்பட்டுள்ளன என்பதனை இந்நாட்டில் உள்ள ஒவ்வொவொரு இந்தியனும் அறிவான், உங்களுக்கு ஆமாம் சாமி போடும் வீரா போன்றவர்களத் தவிர. அதோடு தமிழ்ப்பள்ளிகளின் முதல் எதிரி அம்னோதான் என்பதும் உண்மையே.

 

சமுதாயமும் எதிர்கட்சிகளும் கொடுத்த அழுத்தத்தின் பேரில்தான் அந்த நிலம் இப்பொழுது தமிழ்ப் பள்ளிகளுக்கு ஒதுக்கப்படுகிறது என்பதுதான் உண்மை.

 

மந்திரி புசார் 2008க்கு முன்பு மாநிலக் கல்விக் குழுவின் தலைவராக இருந்து எத்தனை தமிழ்ப்பள்ளிகளுக்கு உதவினார் என்று பட்டியலிடமுடியுமா ? அந்தக் காலக்கட்டத்தில் ஏன் தமிழ்ப் பள்ளிகளுக்கு நிலம் ஒதுக்க வேண்டும் என்று பாரிசான் அரசுக்கு தோன்றவில்லை ?

 

உங்கள் தொகுதியான  பங்கோரில் உள்ள தமிழ்ப் பள்ளிக்கு 3 ஏக்கர் நிலம் கொடுக்கப்பட வேண்டும் என்று  சிவநேசன் கோரியபோது அதற்கு எதிர்ப்பு தெரிவித்தவர் நீங்கள்தான் என்பதனை இந்த சமுதாயம் மறக்கவில்லை. இப்பொழுது தமிழ்ப் பள்ளிகளை வளப்படுத்தஹீரோவாக நீங்கள் செயல் பட முனையும் போது எங்களைஹீரொஎன்று கிண்டல் செய்வது எவ்வகையில் ஞாயம் ?

 

இந்தியர்களே நம்பிக்கை இழந்த விட்ட வீரசிங்கத்தின் அறவாரித்திடம் இந்த நிலம் ஒப்படைக்கப்பட்டது ஏன் என்பதுதான் என் கேள்வி.

 

அது அவரின் பெயரிலேயே பதிவு செய்யப்பட்டுள்ளதா அல்லது அந்த அறவாரியத்தின் பெயரில் பதிவுசெய்யப்பட்டுள்ளதா? 70 வயதான வீராவிற்குப் பிறது அந்தச் சொத்து தமிழ்ப்பள்ளிகளின் வளர்ச்சிக்கு பயன்படுத்தப்படும் என்பதற்கு என்ன உத்தரவாதம்

 

சீனப்பள்ளிகளைப் போல் அறவாரியம் அமைந்தால் அந்த நிலம் ஒப்படைக்கப்படும் என்று கூறிய வீரா இன்று அவர் கீழ் உள்ள அறவாரியத்திடம் அந்த நிலத்தைப் கொண்டு சென்றதைக் கடத்தல் என்று சொல்லாமல் வேறு எப்படி அர்த்தம் கொள்வது? தமிழ்ப்பள்ளிகளைச் சார்ந்த அறவாரியம் அமைக்கப்பட்டு இருந்தும் அதனிடம் ஒப்படைக்காமல்  ஏன் இந்த தில்லு முல்லு?

 

 

 

TAGS: