அம்னோ இளைஞர் தலைவர் கைரி ஜமாலுடின், எதிர்வரும் கட்சித் தேர்தலில் தம் பதவியைத் தக்க வைத்துக்கொள்ள போட்டியிடப்போவதாக அறிவித்துள்ளார்.
“அம்னோ இளைஞர் சகாக்களுடன் கலந்து பேசிய பின்னர், மேலும் ஒரு தவணைக்கு இருக்க விரும்புகிறேன். இன்னும் செய்ய வேண்டிய வேலை இருக்கிறது. என் போராட்டம் இன்னும் முழுமை அடையவில்லை”, என்றாரவர்.
கைரி,37, 2008-இல் அம்னோ இளைஞர் தலைவர் ஆனார்.