பேராக் மாநில தமிழ்ப்பள்ளிக்கான இந்த 2000 ஏக்கர் நிலம் தேசிய நில நிதி கூட்டுறவு சங்கத்தினால் மேம்படுத்தப்பட்டு, நிருவாகமும் செய்யப்படும் என்று தொடக்கத்தில் சோமசுந்தரம் கூறினார்.
மேலும், இதனால் வரும் செலவுகள் போக மீதமுள்ள பணம் புதிதாக தோற்றுவிக்கப்படும் அறவாரியத்திடம் சேர்க்கப்படும் என்றும் கூறி இருந்தார்.
இப்போது இந்த நிலம் தேநிகூ சங்கத்தால் மேம்படுத்தப்படும். ஆனால், நிருவகிக்கப்போவது இந்த புதிய அறாவாரியம் மட்டுமே என்று பத்திரிகை வழி அறிகிறோம்.
தேநிகூ சங்கமானது தோட்டங்கள் அனைத்தையும் தானே மேம்படுத்தியும் நிருவகித்தும் பல வருட அனுபவங்களை தன்னகத்தே கொண்டிருக்கும் வேளையில் இப்போது மட்டும் அவர்கள் பங்கு வெறும் மேம்படுத்துவது மட்டுமே என்றால் இதன் பின்னனியில் கோளாறு இருப்பதாகத் தெரிகிறது. எந்த அனுபவத்தைக் கொண்டு இந்த புதிய அறவாரியம் அந்த நிலத்தை நிருவகிக்கப் போகிறது?
இப்போதுள்ள அறவாரியத்தில் எத்தனை பேருக்கு தோட்ட நிருவாகம் என்பது என்னவென்று தெரியும்? எதற்கு இந்த அனுபவமில்லாதத் துறையில் மூக்கை நுழைக்க வேண்டும்?
10.6 கோடி ரிங்கிட்டை ரொக்கமாக இந்தியர்கள் ம.இ.காவை நம்பி கொடுத்து , அதை நிருவகிக்க தெரியாத வீரசிங்கம் போன்றவர்கள், தோட்டத் தொழிற்துறைப் பற்றி ஒன்றுமே தெரியாமல் எந்த அனுபவத்தையும் திறமையையும் வைத்து இந்த 2000 ஏக்கர் நிலத்தை நிருவகிக்க போகிறார்கள்?
இந்த நிலத்தை மேம்படுத்த இரண்டு தனி குழுக்கள் ஈடுபடுவதால் கூடுதல் செலவீனங்கள் ஏற்பட்டு அதனால் நிகர லாபம் குறையும். அப்படியென்றால் தமிழ்ப் பள்ளிகளுக்கு போய் சேர வேண்டிய நிதியும் குறையும் என்பதனையும் வீரா அறிவாரா?
இந்த முறையில் வரும் இலாபங்கள் அதன் இறுதி இலக்ககை அடையுமுன்னரே சிறுக சிறுக இடையிலேயே பிடுங்கப்பட்டு இறுதியில் அது நட்டத்தை கண்டாலும் ஆச்சரியப் படுவதிற்கில்லை.
தங்கள் இலாபத்தைக் குறைத்துக் காண்பிப்பதற்காகவும் இயக்குனர்களின் பாக்கெட்டுக்களை நிறப்புவதற்காகவும் கையாளும் எல்லோருக்கும் தெரிந்த ஒரு தொழில் ரகசியம். இரண்டு குழுக்கள் ஒரு நிலத்தை ஆளும் போது இரண்டு வகையான செலவீனங்கள் தன்னிச்சையாகவே ஏற்படும். வருமானத்தில் பங்கு போட்ட பின்னரே மீதப் பணம் இலாபமாகக் காட்டப்படும்.
வீரசிங்கம் இன்னொறு கேள்விக்கும் பதில் சொல்ல வேண்டும். புதிய அறவாரியத்தின் இயக்குனர்கள் இந்த அறவாரியத்திற்கு தங்களின் சேவையை இலவசமாக வழங்கப் போகிறார்களா அல்லது சம்பளத்தோடு வேலை செய்யப்போகிறார்களா?
.
வீரா, இந்த நிலத்தை மேம்பாடு செய்வதன் வழி எவ்வளவு வருமானம் வரும் என்று கணித்து கூறவில்லை?
சீனப்பள்ளிகள் அது போன்று செய்து நமக்கு முன்னோடியாக விளங்கும் போது, நாம் ஏன் அதனைப் பின்பற்றக் கூடாது?
சீனப்பள்ளிகளுக்கு ஒதுக்கப்பட்ட 2500 ஏக்கர் நிலத்திலிருந்து 3.6 மில்லியன் ரிங்கிடை இலாபமாக சீனப்பள்ளிகளுக்கு ஒதுக்கப்படும் என்று முன்கூட்டியே அறிவித்தது போல் ஏன் வீரசிங்கத்தால் தமிழ்ப் பள்ளிகளுக்கும் இந்திய மாணவர்களுக்கும் இவ்வளவு பணம் ஒதுக்கப்படும் என்று கணித்து கூற இயலவில்லை?
தி நியு ஸ்ட்ரேட்ஸ் டைம்ஸ் அதன் 8-3-2012 வெளியீட்டிலும் தி ஸ்டார் அதன் 16-7-2012 வெளியீட்டிலும் இது பற்றி விரிவாக செய்திகள் வெளிட்டிருந்தன . நிலம் மேம்படுத்துவதற்கு முன்பாகவே வருடத்திற்கு 11 இலட்சமும் அறுவடைக்குப் பிறகு வருடத்திற்கு 36 இலட்சமும் அச்சீனப்பள்ளிகளுக்கு வழங்கப்படும் என்று மிகவும் தெளிவாகவும் நேர்மையாகவும் முறையாகவும் அறிவிக்கப்பட்டிருந்தன.
இந்த நேர்மை உங்களுக்கு இல்லாமல் எங்கே போனது? சீனர்களின் கணக்குப்படி ஓர் ஏக்கருக்கு வருடத்திற்கு 1440 ரிங்கிட் என்ற அடிப்படையில் பார்த்தாலும் 2 ஆயிரம் ஏக்கருக்கு நமக்கு வருட இலாபமாக 28.80 லட்சம் ரிங்கிட் கிடைக்க வேண்டும். தோட்டப் புறத்தில் இருந்து வந்ததினால் இந்தக் கணக்கை நான் உங்களுக்குச் சொல்கிறேன். உங்கள் அந்தஸ்துக்கு ஏற்றவாறு பதிவியிலிருக்கும் போது ம.இ.கா வழி நிலத்தைப் பெற்று, பதவி போனவுடன் அந்த நிலத்தை உங்கள் தலைமையிலேயே ஒரு வாரியம் அமைத்து, அதை மேம்பாடு செய்து, அதில் வரும் வருமானத்தில் சுகம் காண நினைக்கிறீர்!
நீங்கள் வாரியம் ஆரம்பித்த விதம், அதற்கு ஆள் சேர்க்க எடுத்துக்கொண்ட காலம், அதில் யார் யார் அங்கத்தினர்கள் என்பதன் இரகசியம் இவைற்றையெல்லாம் பார்க்கும் பொழுது இந்த நிலத்தையும் மைக்கா ஹோல்டிங்ஸின் நிலைமைக்கு இட்டுச் செல்வீர்கள் போல் தோன்றுகிறது.
அது போன்றதொரு நிலைமை இந்த 2000 ஏக்கர் நிலத்திற்கு வரக்கூடதென்றால் உடனடியாக எல்ல சந்தேகங்களையும் தீர்க்கும் வகையில் வீரா கீழ்க்கண்டவாறு இந்த வாரியம் செயல் பட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
• தே.நி. கூ சங்கம் நில மேம்பட்டையும் நிர்வாகத்தையும் ஒருங்கே செய்ய வேண்டும்.
• தே.நி. கூ சங்கம் செலவுக்கு பின் எவ்வளவு பணத்தை இந்த புதிய அமைப்பிடம் கொடுக்க முடியும் என்று வருட வாரியாக பட்டியலிடவேண்டும். (சீனப்பள்ளிகளைப் போல).
• நில நிருவாகத்தில் புதிய அறவாரியம் தலையிடக்கூடாது. தே.நி.கூ சங்கம் கொடுக்கும் நிகர இலாபத்தை மட்டுமே நிருவகிக்கும் அமைப்பாக அது இருக்க வேண்டும்.
• தமிழ்ப்பள்ளிகளுக்கு எவ்வளவு, இந்திய மாணவர்களுக்கு எவ்வளவு என்று வருட வாரியாக இந்த புதிய வாரியம் மதிப்பீடு செய்து வெளியிடவேண்டும்.
• அந்த வாரியக் குழுவினர்கள் யார் யார் என்பதனை உடனடியாக வெளியிட்டு, அவர்கள் தமிழ்ப் பள்ளிகளுக்கும் இந்திய மாணவர்களின் முன்னேற்றத்திற்கும் எவ்வாறு தொடர்பு உடையவர்கள் என்பதனை வெளியிட வேண்டும்.
• இந்த நிலத்திற்கும் ம.இ.காவிற்கும் தொடர்பு இல்லை என்று வீரசிங்கம் சொன்னதிலிருந்து, இது அரசியல் சார்பற்றது என்று தெரிகிறது. அப்படி என்றால் இந்தியர்கள் என்ற முறையில் எதிர்க்கட்சியைச் சார்ந்தவர்கள், அவர்கள் இந்தியர் நலன் பேணுபவர் என்ற அடிப்படையில் மட்டுமே தேர்வு செய்யப்ப்பட்டு இந்த வாரியத்தில் சேர்க்கப்பட்டுள்ளனரா?
இவை அனைத்திற்கும் திருப்தி அளிக்கும் வகையில் வீரசிங்கம் நடவடிக்கை எடுக்கவில்லையென்றால் மீண்டும் குரல் எழுப்புவேன்.
சரியான கேள்விகள் YB .. செலவுக்கு பிந்திய லாபம் என்பது நஷ்ட்டம் தான் என்பதை இபோதே எழுதி வைப்போம். நாட்டில் எஸ்டேட் பிளன்டேசென் மேனசெமன் என்ற நிர்வாகம் உள்ளது அதனிடம் முதலில் நிலத்தை வாடகை விட்டு பிறகு செம்பனை காய்க்கும் போது ஒரு டன்னுக்கு சந்தை படி குறிப்பிட்ட தொகையை பெறுவதில் அதிக இலாபம் பெறுவது தான் நடை முறை ….இதில் இந்த மூன்றாம் நான்காம் தரகர்கள் கொட்டம் அடங்கி தமிழ் பள்ளிகள் பயன் பெறும்.கவனிக்கவும் .
குத்துங்க எஜமான் குத்துங்க… இவனுங்க திருந்த மாட்டானுங்க.. சீனன் தான் ஏற்கனவே போய்டிருக்கானே.. அவன் பின்னாலேயே போனாகூட உருப்பட்ருவோம்.. ஆனா இவனுங்க விட மாட்டானுங்களே..