முஸ்லிம்களும் கூட ஒடுக்குமுறையிலிருந்து விலக்கப்படவில்லை

surau“அம்னோ அரசியல் ஆதாயம் பெறவும் முஸ்லிம்களையும் முஸ்லிம்  அல்லாதாரையும் மேலும் மேலும் பிளவுபடுத்தவும் அம்னோ இஸ்லாத்தை ‘புதிய’  கூடின பட்ச அளவுக்குப் பயன்படுத்தி வருகின்றது.”

அரசாங்கம் பௌத்த சூராவ் உரிமையாளருடைய நிரந்தர வசிப்பிடத் தகுதியை  (பிஆர்) ரத்துச் செய்தது

ஜெரோனிமோ: மத்திய கிழக்கில் ‘அல்லாஹ்’ என்ற சொல்லை கிறிஸ்துவர்களும்  முஸ்லிம்களும் பயன்படுத்துகின்றனர். ஆனால் இங்கு அந்த சொல்லை கிறிஸ்துவ  சமூகம் பயன்படுத்துவதற்கு அம்னோ பாரு தடை விதிக்கின்றது.

உலகம் முழுவதும் முஸ்லிம்கள் நாய்களை வளர்ப்பதை நாம் அறிவோம். ஆனால்  இங்கு முஸ்லிம்கள் அந்த விலங்குகளை வளர்க்கக் கூடாது. அவற்றுக்குக்  கருணையும் காட்டக் கூடாது.

தென் தாய்லாந்தில் முஸ்லிம்கள் பள்ளிவாசல்களில் பௌத்த பிக்குகளுடன்  பள்ளிவாசல்களில் கூட்டாக தொழுகை நடத்துவது வழக்கமாகும். ஆனால் இங்கு  முஸ்லிம் என்பதால் அது இயற்கைக்கு எதிரானதாகும்.

இங்கு அம்னோபாரு பின்பற்றும் இஸ்லாம்- சுயநலமானது, ஆணவமானது,  சிறுபிள்ளைத்தனமானது. அது கருணை இல்லாதது. அறியாமையானது.

திரு கேஜே ஜான்: அந்த ஜோகூர் ஒய்வுத் தல உரிமையாளருக்கு முதலில் பிஆர்  தகுதியை கொடுத்த முட்டாள்கள் நீங்கள் தானே ? ஏன் இப்போது பெரிய கூச்சல்  போடுகின்றீர்கள் ? அவருக்கு அதற்குத் தகுதி இல்லை என்றால் அதனை மீட்டுக்  கொள்ளுங்கள். ஆனால் நாம் நியாயமாக நடந்து கொள்ள வேண்டும்.

அது அவருடைய தனிப்பட்ட சொத்து. அந்த சூராவ்-வை இடிப்பதற்கு ‘மாநில  அரசுக்கு’ எப்படி அதிகாரம் வந்தது ? முஸ்லிம் அல்லாதார் பிரார்த்தனைக்கு  அதனைப் பயன்படுத்தியதால் அது சூராவ்-ஆக இல்லாமல் போய் விட்டதா ?

அந்தப் போதனை எங்கிருந்து வந்தது ? எனக்குத் தெரிந்த வரை அது திருக்குர்  ஆன் -னிலிருந்து வரவில்லை.

ஸ்விபெண்டர்: இது ஒடுக்குமுறையே தவிர வேறு ஒன்றுமில்லை. அம்னோ  அரசியல் ஆதாயம் பெறவும் முஸ்லிம்களையும் முஸ்லிம் அல்லாதாரையும் மேலும்  மேலும் பிளவுபடுத்தவும் அம்னோ இஸ்லாத்தை ‘புதிய’ கூடின பட்ச அளவுக்குப்  பயன்படுத்தி வருகின்றது.

இனவாதம் இப்போது எடுபடாமல் இருப்பதால் நாட்டை பிளவுபடுத்துவதற்கு  இஸ்லாம் மட்டுமே இப்போது அம்னோவுக்கு உள்ள ஒரே ஆயுதமாகும்.

பிடிஎன்: அம்னோ தலைவர்கள் உள்ளத்தில் மன்னிப்பது என்ற சொல்லே  கிடையாது. தங்களைச் சாராதவர்கள் செய்யும் எந்தத் தவறுக்கும் அம்னோ  அனுதாபம் காட்டவே காட்டாது.

மன்னிப்பு என்ற சொல்லே இல்லாத இரக்கமற்ற குணத்தையா நமக்கு சமயம்  போதிக்கிறது ? அத்தகைய நிலை ஏற்பட்டால் உலகம் என்னவாகும் ?

மனுக்குல நீதியை போதிக்காத மலேசியா போலே நடைமுறை நிறுத்தப்பட  வேண்டும். இல்லை என்றால் நாடு அழிவுப் பாதையில் செல்லும்.

ஒஎம்ஜி!!: இது ஒடுக்குமுறை ஆட்சியின் அவசரமான நடவடிக்கை ஆகும்.  உரிமையாளர் சம்பந்தப்பட்ட அந்த விவகாரம் இன்னும் புலனாய்வு  செய்யப்படுகின்றது. தீர்ப்பு வழங்கப்படும் வரையில் அவர் நிரபராதியே.

பெர்க்காசாவைக் காட்டிலும் தாம் தீவிர வலச்சாரி என்பதைக் காட்டுவதற்காக  உள்துறை அமைச்சர் அரசாங்க வழ்க்குரைஞராகவும் நீதிபதியாகவும் தண்டனையை  நிறைவேற்றுகின்றவராகவும் நடந்து கொண்டுள்ளார்.

பிரி மலேசியா: ” சமய உணர்வுகளைத் தொட்டதால் அந்தக் கடுமையான  நடவடிக்கை எடுக்கப்பட்டது. அவ்வளவு தான். மற்ற சமயங்கள்  இழிவுபடுத்தப்பட்டாலும் இது போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படும்,” என  உள்துறை அமைச்சர் ஸாஹிட் ஹமிடி சொல்கிறார்.

அது கேட்பதற்கு நன்றாகத் தான் இருக்கிறது. பெர்க்காசா தலைவர்களான  இப்ராஹிம் அலி, சுல்கிப்லி நூர்டின் போன்றவர்கள் மீது எப்போது நடவடிக்கை  எடுக்கப்படும் ?

TAGS: