மலேசியா தன் போக்கில் செல்லவில்லை. முற்றாக வழிகாட்டுதலே இல்லை

 najibதன் போக்கிற்காவது பாதை வகுக்கப்பட்டிருக்கும். ஆனால் நஜிப் தலைமைத்துவத்தில் நாடு வழிகாட்டல் இல்லாமல் தத்தளித்துக் கொண்டிருக்கிறது.

பிகேஆர்: நஜிப் இலக்கைத் தொலைத்துவிட்டார், தன்போக்கில் சென்று கொண்டிருக்கிறது மலேசியா

ஒங் குவான் சின்: பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் இரண்டாவது தவணைக்
காலத்துக்கு பொறுப்பேற்ற 100 நாள் குறித்து பாயான் பாரு எம்பி சிம் சூ சின் நல்ல ஆய்வு செய்துள்ளார். ஆனால் தன்போக்கில் (autopilot) நாடு செல்வதாக நீங்கள் சொல்வது உங்கள் அனுதாபத்தைக் காட்டுகின்றது.

கடந்த 100 நாட்களில் எழுந்துள்ள பல பிரச்னைகள் மீது நஜிப் மௌனம்
சாதிப்பதைப் பார்க்கும் போது மலேசியா இலக்கு இல்லாமல் சென்று
கொண்டிருப்பதாகத் தெரிகிறது. அவசரமாகத் தரை இறங்கினால் தான் நாம் அனைவரும் விழித்துக் கொள்ள முடியும்.

ஸ்பாஞ்ச்பாப்: 100 நாட்களில் பல துறைகளில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
நிலைமையைச் சரி செய்ய அமலாக்கப்பட்ட கொள்கைகளும் பலன் தரவில்லை.

சில அமைச்சர்கள் நஜிப்பின் தோற்றத்துக்குக் களங்கத்தை ஏற்படுத்தும்
காரியங்களில் ஈடுபட்டுள்ளனர். என்னைப் பொறுத்த வரையில் எதிர்காலம் மங்கலாக உள்ளது.

லூயிஸ்: சுருக்கமாகச் சொன்னால் முன்னாள் பிரதமர் அப்துல்லா அகமட் படாவி சிறந்த பிரதமராக இருந்தார். அவர் தமது வேலையில் தூங்கினாலும் அவ்வப்போது விழித்துக் கொண்டு கடமைகளை செவ்வனே செய்தார். கோணலான பாலத் திட்டத்தைக் கைவிட்டதும் அதில் அடங்கும்.

நஜிப் படு மோசம். அவர் தமது வேலையை செய்யவில்லை. நஸ்ரி அஜிஸ், அகமட் ஸாஹிட் ஹமிடி போன்றவர்கள் ஆணைகளைப் பிறப்பிக்கின்றனர்.

மலேசியா தன் போக்கில் செல்லவில்லை. தன் போக்கிற்காவது பாதை
வகுக்கப்பட்டிருக்கும். ஆனால் நஜிப் தலைமைத்துவத்தில் நாடு வழிகாட்டல் இல்லாமல் தத்தளித்துக் கொண்டிருக்கிறது.

அனாக் ஜேபி: நஜிப்பின் சாதனைகள் என்ன ? ரிங்கிட் மதிப்பு சரிகின்றது. நமது கடன் அளவு தென் கிழக்காசியாவில் மிக அதிகமாகும். வரவு செலவுப் பற்றாக்குறை, பெருத்துப் போன அரசாங்கச் சேவை.

வேலையில்லாத் திண்டாட்டம் அதிகமாக உள்ளது, குற்றச் செயல்கள் மலிந்து விட்டன, போலீஸ் படை திறமையாக இயங்காததால் குற்றங்கள் பெருகி விட்டன. போட்டி இல்லாததால் விருப்பம் போல் செலவு செய்வது, கட்டுப்பாடு இல்லாத ஊழல், பொதுவான திறமைக் குறைவு எனச் சொல்லிக் கொண்டே போகலாம்.

மலேசிய மக்கள்: அவர் அம்னோ பொதுப் பேரவைக்கு ஆயத்தமாவதில் சுறுசுறுப்பாக ஈடுபட்டுள்ளார். அந்த பெரிய காட்சிக்காக அவரது பிரதமர் பதவி பின்னுக்குச் சென்று விட்டது.

Wg321: ‘அல்லாஹ்’ என்ற சொல்லைப் பயன்படுத்துவது மீது அறிக்கை விடுவதற்கு மலேசியாவுக்கு பிரதமர் யார் ? நஜிப்பா அல்லது உள்துறை அமைச்சர் அகமட் ஸாஹிட் ஹமிடியா ?

‘அல்லாஹ்’ என்ற சொல்லை கிறிஸ்துவர்கள் பயன்படுத்துவதற்கு அமைச்சரவை அனுமதித்த 10 அம்சத் தீர்வில் 2011 ஏப்ரல் 11ல் கையெழுத்திட்டது நஜிப் ஆகும். அது தொடர்பான கடிதம் மலேசியக் கிறிஸ்துவ சம்மேளனத் தலைவர் இங் மூன் ஹிங்-கிற்கு அனுப்பப்பட்டுள்ளது.

நஜிப் அமைதியாக இருந்து தமக்கு ஏதும் தெரியாதது போல் இருக்கிறார்.
மலேசியாவுக்கு தாம் தான் பிரதமர் என்பதைப் போல அகமட் ஸாஹிட்
முஸ்லிம்கள் மட்டுமே அந்த சொல்லைப் பயன்படுத்த முடியும் என அறிக்கை விடுகிறார். என்ன தான் நடக்கிறது ?

கம்டிராப்ஸ்: அன்புள்ள மாண்பு மிகு சிம் அவர்களே ஆணவம் வேண்டாம். சட்டமன்ற உறுப்பினர் என்ற முறையில் உங்கள் அடைவு நிலை நன்றாக இல்லை. கோலாலம்பூரில் வசித்துக் கொண்டு மாதத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை மட்டுமே உங்கள் தொகுதிக்குச் சென்றீர்கள். இப்போது நீங்கள் ஒர் எம்பி. நீங்கள்
பாயான் பாருவில் தென்படுவதே அரிதாக உள்ளது.

மற்றவர்களைப் பற்றி விமர்சனம் செய்வதற்கு முன்னர் உங்கள் முகத்தைக் கண்ணாடியில் பார்த்துக் கொள்ளுங்கள். உங்கள் 100 நாட்கள் நன்றாக இல்லை. ஆகவே மற்றவர்களைச் சுட்டிக் காட்ட வேண்டாம். ஏனெனில் மூன்று விரல்கள் உங்களையே சுட்டிக் காட்டுகின்றன.

சமுராய்: இரண்டு தவறுகள் ஒன்றை சரி செய்யாது. சிம் அடைவு நிலை மோசமாக இருப்பதால் பிரதமரிடம் தலைமைத்துவ பண்புகள் இல்லாமல் இருப்பதைச் சகித்துக் கொள்ள வேண்டிய அவசியமில்லை. அத்துடன் நாம், வேலை செய்வதற்கு நஜிப்புக்குச் சம்பளம் கொடுக்கிறோம்.

 

TAGS: