எம்ஏஎஸ் விற்கப்படாது: நஜிப் திட்டவட்டம்

1 masபிரதமர் நஜிப் அப்துல் ரசாக்,  தேசிய விமான நிறுவனமான  மலேசியன் ஏர்லைன்சைத்  தனியார்மயமாக்க வேண்டும் என்று கூறப்படுவதற்கு மறுப்புத் தெரிவித்துள்ளார்.

“எம்ஏஎஸ் தனியார்மயமாகாது.   பங்குச் சந்தையில்  பதிவுபெற்றதும்  பொதுநலனைக் கொண்டதுமான  அந்நிறுவனம்  கருவூலத்துக்குச் சொந்தமானது”,  என புத்ரா ஜெயாவில் செய்தியாளர்களிடம் பேசியபோது நஜிப் தெரிவித்தார்.

நேற்று, முன்னாள்  பிரதமர்  டாக்டர் மகாதிர்கூட  பல இடர்பாடுகளை  எதிர்நோக்கும்  அந்நிறுவனத்தை  அரசாங்கம்  விற்றுவிடுவதே  மேல்  எனக் கூறி இருந்தார்..