அம்னோ மகளிர் தலைவர் ஷரிசாட் அப்துல் ஜலில் மகளிர் விவகார சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்படுவார் என்று கூறப்படுவது பற்றி வினவியதற்குப் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் சரியாகப் பதிலளிக்கவில்லை.
“அதன் தொடர்பில் எதுவும் அறிவிப்பதற்கில்லை. அதை அப்படியே விட்டு விடுங்கள்”, என்றார்.
ஷரிசாட், மகளிர் விவகாரங்களைக் கவனித்துக்கொள்ளும் நஜிப்பின் சிறப்பு அதிகாரியாக விரைவில் நியமிக்கப்படுவார் என த ஸ்டார் நாளேடு இன்று செய்தி வெளியிட்டிருந்தது.