நஜிப் மகாதீருடன் கருத்து வேறுபாடு சுற்று 1

MAS“எம்ஏஎஸ்-ஸுக்குத் தேவைப்படுவது அரசியல் தலையீட்டிலிருந்து விடுபட்ட சிறந்த  நிர்வாகக் குழுவாகும்- ஆனால் அது கிடைக்காது”

நஜிப்: எம்ஏஎஸ் தனியார் மயமாக்கப்பட மாட்டாது

உங்கள் அடிச்சுவட்டில்: எம்ஏஎஸ் (மலேசியன் ஏர்லைன்ஸ்) பற்றிய
விவாதங்களில் நாம் முக்கியமான விஷயத்தை மறந்து விடுகிறோம். அது தனியார்  மயமாக்கப்பட வேண்டுமா இல்லையா என்பது பிரச்னையே அல்ல. சிறந்த  நிர்வாகத் திறனைக் கொண்டவர்களுடைய கரங்களில் அது இருக்கிறதா என்பதே  பிரச்னை.

எஸ்ஐஏ (சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்), பிஎஸ்ஏ (சிங்கப்பூர் துறைமுக வாரியம்)  ஆகியவை அரசாங்கத்துக்குச் சொந்தமானவை தான். ஆனால் அவை மிகச் சிறந்த  முறையில் இயங்குகின்றன. எம்ஏஎஸ் தனியார் மயமானது, அரசாங்க வசமானது.  ஆனால் அதன் அடைவு நிலையில் எந்த மாற்றமும் இல்லை.

சேவகர்கள் பணம் பண்ணுவதற்கான வழியாக அந்த விமான நிறுவனம் இருக்கும்  வரையில் திறமையானவர்கள் பொறுப்பேற்றாலும் அதன் அடைவு நிலை  மந்தமாகத் தான் இருக்கும்.

எம்ஏஎஸ் எதிர்நோக்கும் போட்டியைப் பற்றிப் பேச வேண்டாம். எஸ்ஐஏ உலகில்  மற்ற எந்த விமான நிறுவனங்களைக் காட்டிலும் கடுமையான போட்டியை  எதிர்நோக்குகிறது.

அடையாளம் இல்லாதவன்_4031: எம்ஏஎஸ்-ஸும் மற்ற விமான நிறுவனங்களைப் போல  சிரமமான சூழ்நிலைகளை எதிர்நோக்குவது உண்மை தாந் குறிப்பாக எண்ணெய்  விலை உயர்வு போன்றவை அதன் கட்டுக்குள் இல்லை. சில அதன் கட்டுக்குள்  உள்ளன.

மற்ற விமான நிறுவனங்கள் தங்கள் நிர்வாகிகளைச் சுயமாகத் தேர்வு செய்கின்றன.  இட்ரிஸ் ஜாலா தலைமைப் பொறுப்பில் இருந்த போது எம்ஏஎஸ் எப்படி  ஆதாயத்தை ஈட்டியது ?

அவர் ஷெல் என்ற பிரபலமான நிறுவனத்திலிருந்து வந்தவர். அவர் தமது  திறமையால் எம்ஏஎஸ்-ஸை குறுகிய காலத்தில் ஆதாயத்தை அடைய வைத்தார்.  இப்போது ஏன் அதன் நிலை சரிந்து பங்கு விலை 31 சென் -ஆக குறைந்தது ஏன்  ?

ஏர் ஏசியா பங்கு விலை இப்போது 3 ரிங்கிட்டுக்கு மேல் உள்ளது. அதன் விலை  ஒரு ரிங்கிட்டாக இருந்த போது எம்ஏஎஸ் பங்கு விலை 4 ரிங்கிட்டாக இருந்தது.  அதற்கு என்ன காரணம் அதன் திறமையான எஜமானர் டோனி பெர்னாண்டஸ்  தான்.

இப்போது அரசாங்கத்துக்கு இரண்டு தேர்வுகள் தான் உள்ளன. அரசாங்கம்  அதனை விற்கக் கூடும் என பெமாண்டு தலைமை நிர்வாகி இட்ரிஸ் ஜாலா  வெடிகுண்டைப் போட்டுள்ளார். ஆனால் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் மாற்றுக்  கருத்தைக் கொண்டுள்ளார்.

மேலும் இழப்புக்களை தடுக்க அதனை விற்பதற்குத் தான் நல்ல நிர்வாகி முடிவு  செய்வார்.

அப்பும்: எம்ஏஎஸ்-ஸுக்குத் தேவைப்படுவது அரசியல் தலையீட்டிலிருந்து  விடுபட்ட சிறந்த நிர்வாகக் குழுவாகும்- ஆனால் அது கிடைக்காது.

அபாசிர்: ஒரு வழியாக நஜிப் துணிச்சலைக் காட்டியுள்ளார். அம்னோ சார்புள்ள  தொழிற்சங்கங்களைக் களையெடுக்கவும் அவர் அரசியல் ரீதியில் துணிச்சலைப் பெற  வேண்டும். அடுத்து விமான நிறுவனங்களை நடத்துவதில் தேர்ச்சி பெற்றவர்களை எம்ஏஎஸ்-ஸுக்கு நியமிக்க வேண்டும். அம்னோ ஒய்வூதியக்காரர்களையோ முன்னாள் Bina Fiki ஆலோசகர்களையோ அல்ல.

AngryBird: குறைந்த விலையில் அதனை மீண்டும் செல்வந்தர் தாஜுடின் ராம்லி-யிடம் விற்கவும். அவர் அதனை மேலும் உறிஞ்சிய பின்னர் அதிக விலைக்கு அவரிடமிருந்து வாங்கிக் கொள்ளுங்கள். மலேசியா போலே.

அமல்காம்: நஜிப் மகாதீருடன் கருத்து வேறுபாடு  சுற்று 1. ஆண் மகனாக மகாதீருக்கு முடியாது எனச் சொல்லுங்கள். சேவகர்களுக்கு ரகசியமாக டெண்டர்கள் கொடுக்கப்படாமல் இருந்தால் எம்ஏஎஸ் ஆதாயத்தை ஈட்ட முடியும்.

மலேசியப் பிரதமர் அவர்களே உங்களை நாங்கள் கவனித்துக் கொண்டிருக்கிறோம்.  நாங்கள் உங்களுக்கு வாக்களிக்காமல் இருக்கலாம். நாங்கள் அதனை செய்திருக்க  வேண்டும் என்பதை எங்களுக்கு நிரூபித்துக் காட்டுங்கள்.

TAGS: