நீங்கள் ஒடலாம் ஆனால் நீங்கள் பதுங்க முடியாது- பினாங்கில் இவ்வாண்டுத் தொடக்கத்திலிருந்து நிகழ்ந்த 11 துப்பாக்கி சூட்டுச் சம்பவங்கள் தொடர்புடைய குண்டர் கும்பல் ஒன்றுக்கு போலீசார் அனுப்பியுள்ள செய்தி இது தான் எனத் தோன்றுகிறது.
சுங்கை நிபோங்கில் ஆடம்பர அடுக்கு மாடி வீடு ஒன்றில் கூலிக்கு அமர்த்தப்படும் கொலைக்காரர்கள் என சந்தேகிக்கப்படும் ஐவர் கொல்லப்பட்ட பின்னர் அந்தக் கும்பலைச் சேர்ந்த மற்றவர்களைப் போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
அவர்களுடைய அடையாளம் தங்களுக்குத் தெரியும் எனப் போலீசார் கூறினர்.
விசாரணைகளுக்கு உதவும் தகவல்களும் தங்களிடம் உள்ளதாகவும் பினாங்கு மாநிலப் போலீஸ் தலைவர் அப்துல் ரஹ்மான் ஹனாபி சொன்னார்.
“ஐந்து குண்டர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதின் வழி நாங்கள் ஐந்து துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களுக்கு தீர்வு கண்டுள்ளோம். இன்னும் 11 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களை போலீசார் விசாரிக்கின்றனர்,” என அவர் நேற்று ஜார்ஜ் டவுனில் Ops Selamat 3/2013 அதிகாரிகளைச் சந்தித்த பின்னர் நிருபர்களிடம் கூறினார்.
கலை எடுத்தாதான் நாட்டில் மக்கள் பாதுகாப்பாகவும் மகிழ்ச்சியாக வாழ முடியும்.
இந்த குண்டர் கும்பல்களை போலீசார் தயவு தாட்சனை இன்றி விரட்டி விரட்டி வேட்டையாட வேண்டும்.
சபாஷ் போலீஸ்
இவ்வளவு நாள் அமைதியாய் இருந்த போலிஸ் ஏன் இப்பொழுது இவர்கள்தான் நாட்டில் பல குற்றங்களை செய்திருக்கிறார்கள் என்று திட்டவட்டமாக கூறுகிறார்கள். இறந்தவர்கள் அனைவரும் வயது குறைவானவர்கள். இவர்களுக்கு மேல் யார் யார் எல்லாம் இருக்கிறார்கள் என்று கண்டுபிடிக்க வேண்டுமானால் இவர்கள் அனைவரையும் திறமையாக கைது எய்திருக்க வேண்டும். பிறகு விசாரித்து பெரிய தலைகளை வளைத்து பிடிதிருக்க வேண்டும். குண்டர் கும்பல் அடியோடு ஒழிக்க வேண்டும் என்றால் போலிஸ் திறமையாக செயல்பட வேண்டும்..