இறந்த மனிதர்கள் கதை சொல்ல முடியாது

guns‘சுட்டுக் கொல்லும்’ கொள்கை கவலை அளிக்கின்றது. அந்த மனிதர்கள்  அருகிலிருந்து சுடப்பட்டதை காயங்கள் காட்டினால் என்ன சொல்வது ?’

சந்தேகத்துக்குரிய நபர்கள் கொல்லப்பட்ட விதம் குறித்து வேதமூர்த்தி கேள்வி  எழுப்புகிறார்

அரோவானா: தங்கள் நடவடிக்கை நியாயமானது சரியானது எனப் போலீசார்  எப்போதும் கூறிக் கொள்கின்றனர். அவர்கள் அந்த முழுச் சம்பவத்தையும்  தொடக்கத்திலிருந்து இறுதி வரை வீடியோவில் பதிவு செய்திருக்க வேண்டும். அவர்கள் சரணடைவதற்குப் போதுமான எச்சரிக்கை கொடுக்கப்பட்டதா  துப்பாக்கிச் சண்டை நிகழ்ந்ததா போலீஸ் அதிகாரிகள் நின்று கொண்டிருந்த  இடத்தில் துப்பாக்கிக் குண்டுகள் ஏற்படுத்திய துவாரங்கள் இருக்கின்றனவா என்ற
விவரங்களை அது தரக் கூடும்.

இறுதியில் அரசாங்கத்தின் மீது தான் பழி விழும். எல்லா ரோந்துக் கார்களிலும்  காணொளி-ஒலிபதிவு  சாதனங்கள் பொருத்தப்பட்டிருக்க வேண்டும்.

சரியான நடைமுறைகள் பின்பற்றதா என்பதை நாம் அறிய அது உதவும். நாங்கள்  ஆதாரத்தைப் பார்க்கவும் செவிமடுக்கவும் விரும்புகிறோம். அப்போது தான்  சம்பந்தப்பட்ட குடும்பங்கள் நிலைமையைப் புரிந்து கொண்டு அரசாங்கத்தின் மீது
பழி போட மாட்டார்கள்.

ஹோல்டன்: சுட்டுக் கொல்லும்’ கொள்கை கவலை அளிக்கின்றது. அந்த மனிதர்கள்  அருகிலிருந்து சுடப்பட்டதை காயங்கள் காட்டினால் என்ன சொல்வது ?. எந்த  ஆதாரத்தின் அடிப்படையில் அந்த துப்பாக்கிச் சூடுகள் மேற்கொள்ளப்பட்டன ?

அந்த முறை உண்மையில் குற்றங்கள் தொடர்பான மூலப் பிரச்னைகளைத் தீர்க்கப்  போகிறதா ?

கமால்19: குண்டர்தனம் அதிகமாகி உள்ளது. குண்டர்களுக்கு துணிச்சல்
அதிகமாவதோடு ஈவிரக்கமற்றவர்களாகவும் உள்ளனர். அதில் நம்மில்
பெரும்பாலோருக்கு நேரடி அனுபவம் உண்டு. சுடப்பட்ட ஐவரில் நால்வருக்கு  குற்றப்பதிவுகள் உள்ளன.

வன்முறைகளை ஒடுக்க நடவடிக்கை தேவை எனப் பொது மக்கள்
வலியுறுத்துகின்றனர். சந்தேகத்துக்குரிய அந்த நபர்களை போலீசார்
உதாரணத்துக்குக் காட்டியுள்ளனர். இப்போது தங்கள் வேலையைச் செய்த  போலீசாரை நாம் சாடுகிறோம். (உங்கள் தகவலுக்கு நான் போலீஸ் விசிறி அல்ல)

அடையாளம் இல்லாதவன்#02382443: போலீசாருக்கு ஒர் இடைவெளி கொடுங்கள்.  ஆய்வுகள் வேறு விதமாக காட்டாத வரையில் அவர்கள் செய்த வேலைக்காக  அவர்களைப் பாராட்டுங்கள்.

கொல்லப்பட்டவர்கள் அபாயகரமான கிரிமினல்கள். போலீசாருக்கு தெரியும் என  நாம் நம்புவோம்.

ஜோக்கர்: இந்தியப் பிரச்னைகள் மீது கவனம் செலுத்தப்படுவதற்காகத் தாம்  அமைச்சரவையில் இருப்பதாக துணை அமைச்சர் பி வேதமூர்த்தி சொல்கிறார்.

அவர் இப்போது சந்தோஷமாக இருக்க வேண்டும். காரணம் இந்தியர்கள்
இப்போது போலீசாரின் அதிகமான ‘கவனத்தை’ பெற்றுள்ளனர்.

மாமாடியாஸ்: பொது மக்கள் பாதுகாப்பு வேண்டும் எனக் கோருகின்றனர்.  போலீசாருக்கு வேறு வழி இல்லை. தாங்கள் செய்ய வேண்டியதை அவர்கள்  செய்கின்றனர்.

நாடு முழுவதும் மற்றவர்களை கொலை செய்யும் குண்டர்களை எதிர்நோக்கும்  போது போலீசார் என்ன செய்ய வேண்டும் என நீங்கள் எதிர்பார்க்கின்றீர்கள் ?

இப்போது பெரும்பாலான குண்டர் கும்பல் உறுப்பினர்கள் இந்தியர்களாக
இருப்பது துரதிர்ஷ்டமாகும். ஒரு காலத்தில் சீனர்கள் இருந்தார்கள்.

வேதா அவர்களே நீங்கள் துணை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளதால் இந்திய  சமூகம் எதிர்நோக்கும் சமூக பிரச்னைகளைத் தீர்க்க முயலுங்கள். போலீசார்  அவர்கள் வேலையச் செய்யட்டும்.

போலீசார் தங்கள் வேலையை எப்படிச் செய்கின்றனர் என்பதைப் பற்றி
எங்களுக்குக் கவலையில்லை. பெரும்பாலான மக்களை அந்த குண்டர்களிடமிருந்து  மக்கள் பாதுகாக்கப்பட வேண்டும்.

நல்ல நாள்: ஒருவர் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்படும் வரையில் நிரபராதி  என்ற கோட்பாட்டின் அடிப்படையில் நமது கிரிமினல் நீதி முறை இயங்குகிறது.

ஆனால் அந்தச் சம்பவத்தில் போலீசார் குற்றம் செய்யப்பட்டுள்ளதாக கருதி  நடவடிக்கை எடுத்துள்ளனர். அதனால் சுட்டுக் கொல்லப்பட்டவர்கள் உண்மையில்  போலீசாருடன் துப்பாக்கிச் சண்டையில் ஈடுபட்டனரா என்ற சந்தேகம்  எழுகின்றது.

இறந்த மனிதர்கள் தங்களைத் தற்காத்துக் கொள்ள முடியாது. ஆனால் நமது  போலீஸ் படையின் வருத்தமளிக்கும் நிலை, நிகழ்வுகள் குறித்து அவர்கள்  சொல்வது மீது சந்தேகத்தை ஏற்படுத்துகின்றது.

 

TAGS: