“பஸ் நிறுவனங்கள் தொடர்ந்து விதிமுறைகளை மீறுகின்றன. ஒட்டுநர்கள் வேலை செய்வதற்கு அனுமதிக்கப்பட்ட நேரத்தைக் காட்டிலும் கூடுதல் நேரம் வேலை செய்ய அவை அனுமதிக்கின்றன”
கெந்திங் பள்ளத்தில் பஸ் விழுந்தது 37 பேர் உயிரிழந்தனர்
சாதாரண மலேசியன்: அந்தத் துயரச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களுடைய குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள். அவர்களுடைய ஆன்மாவை இறைவன் ஆசீர்வதிக்கட்டும்.
காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய நான் பிரார்த்திக்கிறேன்.
மருத்துவமனைகளில் உள்ள மருத்துவர்களும் தாதியரும் அவர்களுக்கு சிறந்த சிகிச்சை அளிப்பர் என்பது நிச்சயம்.
மீட்புப் பணியில் ஈடுபட்ட தொண்டர்களும் போலீசாரும் தீயணைப்பு மீட்பு ஊழியர்களும் சிறந்த முறையில் பணியாற்றியுள்ளனர். உங்களை இறைவன் ஆசீர்வதிக்கட்டும்.
ஸ்விபெண்டர்: நமது நாட்டுக்கு அது சோகமான நாளாகும்.
உயிரிழந்தவர்களுடைய குடும்பங்களுக்கு என் அனுதாபங்கள். மீட்புப் பணியில் ஈடுபட்டவர்களுக்கும் என் நன்றி.
கெந்திங் பெர்ஹாட் அந்த மலை ஒய்வுத் தலம் வரையில் நல்ல சாலைகளை அமைத்து பராமரித்து வருகின்றது. நாம் வாகனமோட்டும் முறைகளும் பொதுப் போக்குவரத்துப் பராமரிப்பும் நன்றாக இல்லை என்பதும் நம்மில் பலருக்குத்
தெரியும்.
அடையாளம் இல்லாதவன்#78379017: 44 பேர் மட்டுமே செல்லக் கூடிய அந்தப் பஸ்ஸில் எப்படி 53 பயணிகள் இருந்தனர் என்பதை பஸ் நிறுவனம் விளக்க வேண்டும். அதிகமான சுமை விபத்துக்குக் காரணமாகவும் இருக்கலாம்.
ஜென் காப் டிராக்: இதற்கும் மற்ற பல விபத்துக்களுக்கும் கெந்திங் நிர்வாகமே பொறுப்பேற்க வேண்டும். அவர்கள் சூதாட்டக்காரர்களிடமிருந்து பில்லியன் கணக்கில் வருமானம் பெறுகிறது. என்றாலும் பல இடங்களில் சாலைகள் மிகவும்
ஆபத்தாக உள்ளன.
வாகன ஒட்டுநர்களையும் குற்றம் சொல்லத் தான் வேண்டும். ஆனால்
பாதுகாப்பான சாலைகளைக் கட்டுவதின் மூலம் கெந்திங் நிர்வாகமும் உதவலாம்.
சிவிக்: கெந்திங் நிர்வாகத்தை குறை கூறுவது எனக்கு வருத்தமளிக்கிறது. கேமிரன் மலைக்குச் செல்வதைப் போன்றது தான் கெந்திங் சாலையும்.
பாதுகாப்பை உறுதிப்படுத்த கெந்திங் சாலைகளுக்கும் அடித்தளத்தை
வலுப்படுத்தவும் மில்லியன் கணக்கில் செலவு செய்கின்றது. அந்த ஒய்வுத் தலம் அவற்றை நம்பியிருப்பதை மறக்க வேண்டாம். எதுவும் முற்றிலும் பாதுகாப்பானதாக இல்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள். ஆகவே நீங்கள் குறை சொல்வதற்கு முன்னர் சிந்தியுங்கள்.
லவர் பாய்: பந்தயத்தில் பங்கு கொள்கின்றவர்களைப் போல வேகமாக பஸ்களையும் வாகனங்களையும் ஒட்டும் ஒட்டுநர்களை கெந்திங்-கிற்குச் சென்று வந்தவர்கள், பார்த்திருக்கலாம்.
குழப்பம் இல்லாதவன்: பஸ் நிறுவனங்கள் தொடர்ந்து விதிமுறைகளை மீறுகின்றன. ஒட்டுநர்கள் வேலை செய்வதற்கு அனுமதிக்கப்பட்ட நேரத்தைக் காட்டிலும் கூடுதல் நேரம் வேலை செய்ய அவை அனுமதிக்கின்றன.
பஸ் பராமரிப்பும் முக்கியமான அம்சமாகும். போக்குவர்த்து நிறுவனங்கள் செலவுகளைக் குறைப்பதற்காக புதுப்பிக்கப்பட்ட பழைய டயர்களை தொடர்ந்து பயன்படுத்துகின்றன.
மலேசியா உண்மையில் இது போன்ற விபத்துக்கள் என வரும் போது மூன்றாம் உலக நாடாகும். இந்த விபத்துக்குப் பின்னர் அமைச்சர்களும் பஸ் நிறுவன நிர்வாகிகளும் கைகளை பிசைந்து கொண்டு ஒருவர் மீது பழி போட்டுக் கொள்வர். அடுத்த விபத்து வரை ஒன்றும் நடக்காது.
மோசமான ஆளுமை, அதை விட மோசமான நிறுவன நிர்வாகம் அது தான் நமது துயரங்கள்.
2zzzxxx: நாளேடுகளில் அந்த விபத்து தலைப்புச் செய்திகளாக இடம் பெறும். சோகமான கதைகள் வெளியிடப்படும். அடுத்த சில நாட்களில் எல்லாம் மறக்கப்பட்டு விடும். இந்த நாட்டின் வரலாற்றில் மிகவும் மோசமான இன்னொரு பஸ் விபத்து நிகழும் வரை ‘காத்திருப்போம்’.
உண்மையான குற்றவாலி யார் இங்கே???இந்த மரணத்திற்கு யார் காரணம்???யார் பொறுப்பு ???போக்குவர்த துறை என்ன பதில் கூர போகிறது…நீதி கிடைக்குமா ???