மங்கோலிய பெண்மணி அல்டான்துயா ஷாரிபுவைக் கொலை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டிருந்த போலீஸ் சிறப்பு நடவடிக்கை பிரிவைச் சேர்ந்த தலைமை இன்ஸ்பெக்டர் அஸிலா ஹட்ரி, கார்ப்பரல் சிருல் அஸ்ஹார் உமர் ஆகிய இருவரையும் முறையீட்டு நீதிமன்றம் இன்று விடுவித்தது.
நீதிபதி முகம்மட் அபாண்டி அலி தலைமையில் மூவரடங்கிய நீதிபதிகள் குழு அவர்களின் மேல்முறையீட்டை விசாரித்து உயர் நீதிமன்றம் அவர்களைக் குற்றவாளிகள் என முடிவு செய்தது தவறு என்று தீர்ப்பளித்தது.
இன்றைய தீர்ப்புக்கு எதிராக கூட்டரசு நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்போவதாக அரசுத் தரப்பு வழக்குரைஞர் துன் அப்துல் மஜிட் குறுஞ் செய்தி ஒன்றை அனுப்பியுள்ளார்.
எதிர்ப்பார்த்த ஒன்றுதான்!
எவ்வளவு பண விரயம் ? போலீசு ,விசாரணை , கோர்ட்டு ,வழக்கு , தீர்ப்பு ! கீழ் கோர்ட்டு , மேல் கோர்ட்டு , உயர் கோர்ட்டு , அப்பீல் கோர்ட்டு . கூட்டரசு மேல் கோர்ட்டு இதையும் தாண்டி அரச மன்னிப்பு !!!! நேரம் காலம் பணம் ,அத்தனையும் விரயமே ! கொடூர கொலை குற்றவாளிகளை ஏன் நேரடியாக கூட்டரசு மேல் கோர்ட்டுக்கு கொண்டுபோக கூடாது ? ஒரே வேலையாக முடிந்துவிடும் அல்லவே ? சட்டத்தில் பல ஓட்டைகள் என்பது இதுதானோ ??
உண்மையான கயவன் யார் என்று ஊர் அறிந்த விஷயம். இதில் நீதிக்கு என்ன இடம்? தலைவன் என்று சொல்பவன் நீதிக்கு வணங்குபவனாக இருக்க வேண்டும். அவனே அநீதிக்கு பல்கலைகழகமாக இருந்தால் …? மக்கள் சிரிக்கிறார்கள் உலகம் எள்ளி நகையாடுகிறது… இதுதான் எங்கள் மலேசியா…
இந்த வழக்கில் அரசு தரப்பு தலமை வழக்கறிஞராக கோபின் சிங் டியோவை நியமிக்கலாம் அல்லவா???
கர்ப்பால் மீதான வழக்கில் அரசு சார்பாக டத்தோ ஸ்ரீ ஷாபியை நியமித்திருப்பதுபோல் இவ்வழக்கில் கோபின் சிங் டியோவை நியமிக்கலாம் அல்லவா???
இவர் துன் மஜிட்டுடன் சேர்ந்து இவ்வழக்கை கூட்டரசு நீதிமன்றத்தில் வாதாடலாம் அல்லவா???
நடக்குமா இந்த மலேசியா பொலெஹ் மண்ணில்????
வேதனைக்குரிய சம்பவம் ….இப்பொழுதான் நமது வீர தீர இளைஞர்கள் தங்களின் வீரத்தை கட்ட வேணும் ….இவனுங்க ரெண்டு பேரையும் சுட்டுட்டு வாங்கடா……