‘எழுதப்பட்ட வசனத்திற்கு ஏற்ப அல்தான்துயா முடிவு அமைந்துள்ளது’

altan‘ஆகவே அல்தான்துயா சுயமாகவே பூஞ்சாக் அலாமுக்கு சென்று நெற்றியில் சுட்டுக் கொண்ட பின்னர் தம்மை வெடி வைத்துத் தகர்த்துக் கொண்டார்’

நீதிமன்றம் கொலைக் குற்றச்சாட்டிலிருந்து அஸிலாவையும் சிருலையும் விடுவித்தது

கிண்டல்: உயர் நீதிமன்றம் தவறாக வழி நடத்தியுள்ளதால் தொழில்நுட்பப்  பிரச்னை அடிப்படையில் அந்த முழு விசாரணையும் நீதிக்குப் புறம்பானதாகி விட  முடியாது.

இறுதி முடிவு இது தான்: அல்தான்துயா ஷாரிபுவை யாரும் கொலை
செய்யவில்லை. நம் நாட்டில் கூலிக்கு அமர்த்தப்படும் கொலைகாரர்களும்  துப்பாக்கிகளும் மலிந்துள்ள வேளையில் யாராவது ஒருவர் துப்பாக்கிச் சூட்டுக்கு  இலக்காகும் சாத்தியம் உள்ளது.

ஆர்கேஆர்: ஆகவே அல்தான்துயா சுயமாகவே பூஞ்சாக் அலாமுக்கு சென்று  நெற்றியில் சுட்டுக் கொண்ட பின்னர் தமது உடம்பில் சி4ஐ வெடிகுண்டை வைத்துக் கொண்டு  தம்மையே தகர்த்துக் கொண்டார்.

இறைவன் அல்ல: அல்தான்துயா கொலை செய்யப்பட வேண்டும் என இருவர்  மட்டுமே ஆணையிட்டிருக்க முடியும். அது உங்களுக்கும் எனக்கும் தெரியும்.  அம்னோ ஜமீன்தார்களும் அறிவர்.

அதில் ஒருவர் இல்லை என்றால் இன்னொருவர். அந்த முழு வழக்கும் போலீசும்  நீதித் துறையும் நடத்திய நாடகம்.

நியாயம்&நீதி: அல்தான்துயாவை யார் தான் கொலை செய்தார்கள் ?
உடற்குறையுடைய புதல்வன் மங்கோலியாவில் தாயார் இல்லாமல் வளருகிறான்.  துயரமான கதை. நியாயமற்றதும் கூட.

கெடாவில் நிகழ்ந்த நில நடுக்கம் இறைவனை விழிக்க செய்யும் என நம்புவோம்.  இறைவன் தண்டனை கொடுப்பான் என்பதே நமக்கு உள்ள ஒரே ஆறுதலாகும்.

நீங்கள் மட்டும் தனித்தல்ல: இது வரையில் தலைமை இன்ஸ்பெக்டர் அஸிலா  ஹாட்ரி, கார்ப்பரல் சிருல் அஸ்ஹார் ஒமார் ஆகியோரது முகங்கள் பொது  மக்களுக்குக் காட்டப்படவே இல்லை. இது நன்கு திட்டமிடப்பட்ட நாடகமாகும்.

மேல் நீதிமன்றங்களில் முறையீடு மீதான விசாரணை தொடங்கும் போது அவர்கள்  ஒடி விட்டதால் அவர்களைக் கண்டு பிடிக்க முடியவில்லை என அரச மலேசியப்  போலீஸ் படை சொல்லும். உண்மையான குற்றவாளிகளை அவர்களது  எஜமானர்கள் ‘கொன்றிருக்க வேண்டும்’ அல்லது உலகின் இன்னொரு பகுதியில்
தங்களுக்கு கிடைத்த செல்வத்துடன் அவர்கள் வாழ்க்கையை அனுபவித்துக் கொண்டிருக்க  வேண்டும்.

லாங் ஜாபார்: முன்னாள் துணைப் பிரதமர் அன்வார் இப்ராஹிம் தமது முகத்தில்  சுயமாகக் குத்திக் கொண்டார் என சில காலத்திற்கு முன்பு யாரோ ஒருவர்  சொன்னார். அதே நிலை தான் இங்கும்-அல்தான்துயா சொந்தமாகவே வெடிகுண்டு
வைத்துக் கொண்டார் !

அடையாளம் இல்லாதவன்_3e86: எல்லோரும் எழுதப்பட்ட வசனத்தை  தொடருகின்றனர். எல்லாம் சந்தோஷமாக முடிவதை அது காட்டுகிறது.

1. அந்த இரண்டு போலீஸ் அதிகாரிகளுடைய முகங்களும் பொது மக்களுக்குக்  காட்டப்படவே இல்லை. அவர்கள் சிறைச்சாலைக்குள் நுழைந்தனரா என்பது கூட  நிச்சயமில்லை. யாருக்கும் அது தெரியாது.

2. அரசாங்கத் தரப்பும் பிரதிவாதித் தரப்பும் பிஎன் அரசாங்கம் நியமித்தவை.  அவை ஒரே படகில் பயணம் செய்கின்றன.

3. அந்தக் கொலைக்கான நோக்கத்தை கண்டு பிடிக்க அரசாங்கத் தரப்பும்
பிரதிவாதித் தரப்பும் முயல்வே இல்லை. நேற்றைய முடிவு வியப்பளிக்கவில்லை.  உண்மையில் எதிர்பார்க்கப்பட்டதே.

 

TAGS: