வேதமூர்த்தி இப்போது திரிசங்கு நிலையில்

your say“நீங்கள் அந்த முறையை மாற்ற இயலும் என எண்ணியிருந்ததால் நீங்கள் சரியான  முட்டாள். நீங்கள் மாற வேண்டும் என அந்த முறை சொல்கிறது”

அரசாங்கம் வகுத்த பாதையில் செல்லுமாறு ஸாஹிட் வேதமூர்த்திக்கு அறிவுரை

ரஹ்மான் பூத்தே: பிஎன் நிர்வாகத்துக்குள் பிரதமர் துறை துணை அமைச்சர் பி  வேதமூர்த்தி வழக்கத்திற்கு மாறான நிலையைப் பின்பற்றுவதைக் காண ஆறுதலாக  இருக்கிறது.

இவ்வாண்டு ஏப்ரல் மாதம் தொடக்கம் நிகழ்ந்துள்ள சந்தேகத்துக்குரிய 22  மரணங்கள் மீது மேலோட்டாமான விளக்கத்தையே அரச மலேசிய போலீஸ் படை  தந்து வருகின்றது.

போலீஸ் படையின் ஈவிரக்கமற்ற போக்கு எனக் கூறிக் கொண்டிருப்பதை விடுத்து  பாகுபாடு இல்லாத நிலையை உறுதிப்படுத்த விசாரணை தேவை என வலியுறுத்த  வேண்டும்.

கிங்பிஷர்: தமது நிர்வாகத்தில் இணைந்து கொள்ளுமாறு வேதமூர்த்தியை பிரதமர்  நஜிப் ரசாக் அழைத்ததற்கு நல்ல காரணம் இருந்திருக்க வேண்டும்.

துரதிர்ஷ்டமான அந்தச் சம்பவம் பற்றி வேதமூர்த்தி மிகவும் எச்சரிக்கையுடன்  விடுத்த அறிக்கை அரசாங்கக் கொள்கைக்குச் சவால் விடுவதாக அமையவில்லை.  மாறாக போலீஸ் நடவடிக்கை முறை குறித்தே அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

அந்தச் சம்பவத்தில் போலீசார் சீரான நடவடிக்கை முறைகளைப் பின்பற்றியதாக  தேசிய போலீஸ் படைத் தலைவர் விளக்கியுள்ளார்.

அவர் சொல்வதை நம்மில் சிலர் ஏற்றுக் கொள்கிறோம். வேதமூர்த்தி இந்த  விஷயத்தில் சற்று சிந்திக்காமல் பேசியிருக்கலாம். மற்ற பிரமுகர்களுடைய  நடவடிக்கைகளையும் சற்று கவனியுங்கள்.

ஆனால் ஸாஹிட் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள சகாவை ‘மிரட்டுவதின்’ வழி தமது  வலிமையைக் காட்ட முயலுகிறார். அவர் பரபரப்பாக தெரிகிறாரா தவிர  நேர்மையாக இல்லை. வேதமூர்த்தி தமது பொறுப்பிலிருந்து திடீரென விலகினால்  பிரதமருக்கு அது முட்டாளைப் போன்ற தோற்றத்தைத் தந்து விடும்.

ரூபன்: வேதமூர்த்தி உங்களுக்கு இதுவும் வேண்டும். உங்கள் அம்னோ
எஜமானர்களுக்குப் பிடிக்காத எதனையும் சொன்னால் நீங்கள் வாயை மூடிக்  கொண்டிருக்க வேண்டும்.

எல்லாவற்றுக்கும் மேலாக நீங்கள் அவர்களுக்கு சேவகம் செய்ய முடிவு செய்து  விட்டீர்கள். ஆகவே நீங்கள் வாலைச் சுருட்டிக் கொண்டு நல்ல பையனாக நடந்து  கொள்ளுங்கள்.

சிலாங்கூர் வாக்காளர்: நீங்கள் அந்த முறையை மாற்ற இயலும் என
எண்ணியிருந்ததால் நீங்கள் சரியான முட்டாள். நீங்கள் மாற வேண்டும் என அந்த  முறை சொல்கிறது. நஜிப்புக்கு மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையைக்  கொடுக்குமாறு நீங்கள் கேட்டுக் கொண்டதை நினைத்துப் பாருங்கள்.

எஸ்எஸ் டாலிவால்: வேதமூர்த்தியையும் ஹிண்ட்ராப்-பையும் மௌனமாக இருக்கச்  செய்வதற்காக வேதமூர்த்தி அமைச்சரவைக்குள் கொண்டு வரப்பட்டார் என்பதை  நீங்கள் ஒப்புக் கொள்கின்றீர்களா ?

வேதா: நான் வெறும் பார்வையாளராக மட்டும் இருக்க முடியாது

ஷானாண்டோ: இந்திய சமூகத்துக்கு அரசாங்கம் உண்மையில் உதவ விரும்பினால் புதிய பொருளாதாரக் கொள்கையைப் போன்று இந்தியர் பொருளாதாரக்  கொள்கையை வகுக்க வேண்டும். அந்த விஷயத்தைக் கவனிக்கும் பொறுப்பை  இந்திய சமூகத்திடம் விட்டு விட வேண்டும்.

அந்த சமூகம் நீண்ட காலமாக ஒதுக்கப்பட்டு விட்டது. அதன் விளைவுகளையே  நாம் இப்போது காண்கிறோம். பழுது பார்க்க முடியாத அளவுக்கு அந்த சமூகம்  நாசமடைந்து விட்டது.

ரோப்ர்ட் லிம்: நம்பிக்கை உணர்வுடைய உண்மையான தலைவர் வேதமூர்த்தி.  அவர் எதிர்ப்பாளர் அல்ல. இந்திய சமூகத்துக்கு அவரைப் போன்றவர்கள்  தலைமை தாங்கும் போது இந்திய சமூகம் மீண்டும் எழுச்சி பெறுவதை நாம் காண  முடியும்.

மாமாடியாஸ்: அது மஇகா-வோ அல்லது வேதா-வோ சம்பந்தப்பட்ட விஷயமல்ல.  இந்திய சமூகத்துக்குள் நீண்ட கால அடிப்படையில் உதவி தேவைப்படும் ஒரு  பிரிவே அதுவாகும். இளம் இந்தியர்கள் ஒதுக்கப்படாமல் இருப்பதை உறுதி  செய்யவும் வறுமைப் பிடியில் அவர்கள் சிக்காமல் இருக்கவும் அது வகை செய்யும்.

உங்கள் அடிச்சுவட்டில்: வேதா அவர்கள் வெறுமனே பேசிக் கொண்டிருக்க  வேண்டாம். நீங்கள் இனிமேல் ஏழைகளின் தலைவரோ ஒதுக்கப்பட்ட இந்திய  சமூகத்தின் தலைவரோ அல்ல. நீங்கள் தீவிரமான பார்வையாளரும் அல்ல. நீங்கள்  தொடர்ச்சி இல்லாத பார்வையாளர்.

நீங்கள் இப்போது ராஜினாமா செய்யலாம். அது ஏதாவது சலசலப்பை
ஏற்படுத்துகிறதா எனப் பார்ப்போம்.

 

TAGS: