மலேசியரிடையே 1மலேசியா கோட்பாட்டைப் பதிய வைக்கும் அரசாங்கத்தின் முயற்சி எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது என்கிறார் ஜனநாயக, பொருளாதார விவகாரக் கழக தலைமை செயல் அதிகாரி சைபுல் வான் ஜான்.
ஒற்றுமையை வலுப்படுத்தி இருக்க வேண்டிய 1மலேசியா கோட்பாடு அன்பளிப்புகளை வழங்கும் நிகழ்வாக மாறியுள்ளது என்றாரவர்.
“அப்படித்தான் அது மாறிவிட்டது. அது வாக்காளர்களுக்கு கையூட்டு கொடுக்கும் வழிமுறையாக மாறி இருப்பது அவப்பேறானது.
“அது 1மலேசியா என்ற பெயரில் அரசாங்கம் கொடுக்கும் இலவசங்களை நம்பி இருக்கும் சமுதாயமாக மலேசியர்களை மாற்றி இருக்கிறது”, என சைபுல், மலேசிய மாணவத் தலைவர்களின் 7-வது உச்சநிலை மாநாட்டில் கூறினார்.
ஐயா, தயவு செய்து 1 மலேசியா கொள்கையை கை விட்டு விடாதீர்கள். அப்புறம் இந்தியர்களுக்கு கொஞ்சமாவது கிடைக்கும் இலவசம் நின்று விடும். கால காலம் நம்மவர்கள் BN அரசாங்கத்திடம் பிச்சை எடுத்துக் கொண்டிருக்க இந்த 1 மலேசியா திட்டத்தை தொடர்ந்து நடத்திக் கொண்டாடுவோம்!
ஆமாம். 1 மலேசியா முனியாண்டி கோயிலில் ஆடு வெட்டி சோறு போடும் அளவுக்கு வளர்ந்திருக்கிறது. தழிழன் ஆட்டு எலும்பு கடிப்பதற்கு ஆப்பு வைத்து விடாதீர்கள் ஐயா..
சொப்பன சுந்தரி,
சூப்பரோ சூப்பர் !!!!!! ஆட்டு எலும்பு கடிப்பதற்கு 1 மலேசியாவின் முன்னோக்கம் புரிகிறது….!!!!