இந்திய மலேசியர்களிடையே குண்டர்தனம் பெரும் பிரச்னையாக உருவாகி வருகிறது என்று கூறிய பிரதமர்துறை துணை அமைச்சர் பி.வேதமூர்த்தி, வன்முறையைக் கையாண்டு அதற்குத் தீர்வுகாண முடியாது என்றார்.
பினாங்கில் ஐந்து இளைஞர்கள் சுட்டுக்கொல்லப்பட்டதைக் கண்டித்திருந்த அவரைக் குறைகூறுவோருக்குப் பதிலளிக்கும் வகையில் அறிக்கை வெளியிட்டிருக்கும் வேதமூர்த்தி, “நிலைகெட்டுப்போன இளைஞர்களைச் சுட்டுத்தள்ளுவதுதான் இதற்குத் தீர்வு என்று சொல்கிறார்களா?”, என வினவியுள்ளார்.
இப்பிரச்னையால் இந்தியர்களிடையே ஏற்பட்டுள்ள சரிவைத் தடுக்க ஆக்ககரமான வழிமுறைகள் தேவை என்றாரவர்.
அடிப்படை பிரச்சனைக்கு காரணம் அறிந்து அதற்க்கு தீர்வுக்கான முயலுங்கள்…
சரி. கேட்க நல்ல இருக்கு. அதுக்கு இப்பவே அச்சாரமா கைகொள்ள வேண்டிய வழிவகைகளையும் இங்கு பதிவு செய்திருக்கலாமே…!!! அவனவனா திருந்தனும். அதுதான் வழி. அவன் பசிக்கு நாம் புசித்தால் அவனுக்கு பசி ஆறுமா? சுடுங்க…. சுட்டு தள்ளுங்க. அதை பார்த்தோ அல்லது அந்த செய்தி கேட்டு குண்டர்கள் வயிற்றிலே “புளியை” கரைக்கட்டும்.உயிருக்கு பயந்து திருந்தினால் உண்டு.இல்லாவிடில் இந்த குண்டர்கள் “குண்டுக்கே” இரையாக வேண்டியதுதான்.’ துப்பாக்கி எடுத்தவனுக்கு துப்பாக்கியாலே சாவும் நிச்சயம்” , எதனை பேர் சாபத்தை வாங்கி இருப்பார்கள். வேதமூர்த்தி ” நாயை குளிப்பாட்டி நடு மனையில் வைக்கிறேன் என்கிறார்.பார்ப்போம் காலம் என்ன செய்யப் போகிறது…..???
நல்லதோ,கேட்டதோ, வேதமூர்த்தி வாயைத் திறந்திருப்பது நல்லதுதான். இது எதில் போய் முடிகிறது என்று பார்ப்போமே! இரண்டு காலி டப்பாக்களான சாஹிட் ஹமிடியும், ஹிஷாமுடினும் கிழட்டு சிங்கமான கர்பால் சிங்கும், வேதாவை பதவி விலகச்சொல்வது அறிவுடைமையாகாது
வேதா, நீங்கள் சொல்லுவது சரி தான். ஆனால் இப்போதைக்கு அவர்களைச் சுட்டுத் தள்ளுவதை விட வேறு வழிகள் இருப்பதாகத் தெரியவில்லை. அடிப்படைப் பிரச்சனை நமக்குத் தெரியும். அரசாங்கம் ஒத்து உழைக்க வேண்டும். ம.இ.கா காரன் அரசாங்கத்தைக் கண்டாலே நடுங்குகிறான். நீங்கள் தான் இந்தப் பிரச்சனையை முன்னெடுக்க வேண்டும்.
வேதமூர்த்தி சார் வாழ்க.
சரியாகச் சொன்னீர்கள் ரிஷி. இரக்கமே இல்லாத பஞ்சமாபாதகர்களான குண்டர்களை அறிவுரை மூலம் எல்லாம் திருத்த முடியாது. இவர்கள் மற்றவர்களை வெட்டியும் சுட்டும் கொல்லும் போது இந்த வேதமூர்த்தி வாய் திறக்கவில்லை. அவர்களை கண்டிக்கவில்லை. ஆனால் குண்டர்களுக்கு ஏதாவது நேர்ந்து விட்டால் மட்டும் குதிக்கிறார். இந்த நாட்டில் அப்பாவி ஜனங்களைப் பற்றி எவனும் கவலைப்படா மாட்டேன் என்கிறான். ஆனால் ரவுடிகளுக்கு ஏதாவது நேர்ந்தால் உடனே பொங்கி எழுகிறான். இவன்களை முதலில் ஓட விட்டுச் சுட வேண்டும்.
வணக்கம் , எது உண்மை எதுபொய், சட்டம் என்னும் பெயரில் இப்படியா செயல்படுவது , திரு வேதமூர்த்தி அவர்களே சமுதயம் காக்க வாழும் உங்களை நாங்கள் எப்பொழுதும் மறக்க மாட்டம்.
திரு வேதமூர்த்தி நாங்களும் உங்களை ஒரு போதும் மறக்க மாட்டோம் ,எங்களை நடு ரோட்டில் வைத்து அடிவாங்க வைத்ததையும் மறக்க மாட்டோம் ,நீங்கள் நிம்மதியாய் லண்டனில் இருந்ததையும் மறக்க மாட்டோம் .திரும்பி வந்து உண்ணாவிருதம் நாடகத்தையும் மறக்க மாட்டோம் ,அம்நோகாரன் குடுத்த துணை குடுத்த துணை அமைச்சர் பதவியை ஏற்றத்தையும் மறக்க மாட்டோம் .தமிழனின் முதல் எதிரி அம்னோதான் சொன்னதையும் மறக்க மாட்டோம் .அவன் குடுத்த பிச்சை பதவியை வாங்கி கொண்டு துரோகம் செய்ததையும் மறக்க மாட்டோம் .மறக்க மாட்டோம் ,மறக்க மாட்டோம் …………
வேலு பச்சை கை பிள்ளை !
அம்னோவின் இன வாத அரசியலால் இந்திய சமூகம் பல்வேறு சமூகப் பிரச்சனைகளால் அல்லல் படுகிறது.நஜிப் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவதன் வழி இந்தியர்களுக்கு விடிவு பிறக்கும்.உங்களுக்கு துணை இருப்போம் வேதா!
இனிமேலும் இந்த குண்டர்களை சொல்லி திருத்த முடியாது.. முடிந்தவரை களை எடுங்கள்…. அதில் சில நல்ல பயிர்களையும் தியாகம் செய்ய வேண்டி வரும்….. ஆனால் போலிசார் களை எடுப்பதாக கூறிக்கொண்டு பெரிய பெரிய தலைகளை விட்டு விட்டு, சின்ன சின்ன பயிர்களை பிடுங்கி விட்டு, சாதித்து விட்டதாக நாடகமாட கூடாது. ….முடியுமா உங்களால்….
வஞ்சிக்க பட்ட ஓரங்கட்ட பட்ட சமுதாயத்தின் நிலை இன்று .
அரசாங்கமும் mic யும் முதல் காரணம்
ACP அமர் சிங் சித்து அவர்களின் “மலேசியாவில் அதிகரிக்கும் குற்றங்கள்” என்ற ஆய்விலிருந்து ஒரு மேற்கோள் காட்ட விரும்புகிறேன்:-
“வன்முறை குற்றங்களுக்கும் , குண்டர் கும்பல் நடவடிக்கைகளுக்கும் மூல காரணம்நகர்புற ஏழ்மையின் வெளிப்பாடேயாகும்…. மலேசிய நகர்புறங்களில் நிலவும் ஏழ்மைக்கு காரணம் வருமானமோ அல்லது வேலை வாய்ப்போ இல்லாததால் நிகழ்ந்தது அல்ல மாறாக தேசிய முன்னேற்ற நீரோட்டத்தில் வாய்ப்பு வழங்கப்படாமல் ஒதுக்கிவைக்கப்பட்ட செயலால் நிகழ்ந்ததாகும். நகர்புற இந்தியர்கள் பெரும்பான்மை இனத்தவரிடமிருந்து தனிமை படுத்தப் பட்டு ஒரு பரிதாபமான கட்டுப்பட்டிற்குள் தங்களை ஐக்கியப் படுத்திகொண்டார்கள். முற்றிலும் நம்பிக்கை , சுய மரியாதை , கவுரவம் அனைத்தையும் இழந்து , அரிதான கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளை சார்ந்திருக்க வேண்டிய கட்டாயத்தினால் அவர்கள் பரிதாபமான நிலைக்கு தள்ளப்பட்டார்கள்.”
30 ஆண்டுகளுக்கு முன்னர் புள்ளிவிவரங்கள் வேறு மாதிரியாக இருந்தன. குற்றவியல் நடவடிக்கைகளில் இந்திய இளைஞர்களின் எண்ணிக்கை குறைவாகவே இருந்தன. ஆனால் 1980 ஆம் ஆண்டுகளில் அப்பாவி இந்திய தோட்டப் பாட்டாளி வர்கத்தினர் ஈவு இறக்கம் இல்லாமல் தோட்டப் புறங்களில் இருந்து எவ்விதமான மாற்று திட்டங்களும் இல்லாமல் வலுக்கட்டாயமாக நகர்ப்புறங்களுக்கு விரட்டியடிக்கப்பட்ட துயர சரித்திரத்தின் விளைவுகளில் ஒன்றுதான் நம் சக இந்திய இளைஞர்கள் இன்று குற்றச் செயல்களில் ஈடுபட்டு வரும் அவலம்.