துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்துவதில் பிரச்னை இல்லை: நன்சி

1nancyகடந்த திங்கள்கிழமை துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்ட  ஐவரின் குடும்பத்தார் விரும்பினால் ஒரு மரண விசாரணை நடந்தும்படி கேட்டுக்கொள்ளலாம் என பிரதமர்துறை அமைச்சர் நன்சி சுக்ரி கூறினார்.

குற்றவாளிகளே ஆனாலும் அவர்களின் உரிமையை அரசாங்கம் ஒதுக்கித் தள்ளாது என்றாரவர்.

“இப்போது அது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். அது முடிந்ததும் சட்டத்துறை தலைவர் அலுவலகத்துக்கு அவர்கள் மனு தாக்கல் செய்யலாம்.

“மரண விசாரணை நடத்துவதில் எந்தப் பிரச்னையுமில்லை”.

அச்சம்பவத்தின்போது உண்மையில் நடந்தது என்னவென்பதைத் தெரிந்துகொள்ள மரண விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டிருப்பது குறித்து கருத்துரைத்தபோது அமைச்சர் இவ்வாறு கூறினார்.