அதிகாரத்துவச் சட்டத்தின் கீழ் டாக்டர் மகாதீர் மீது குற்றம் சாட்டப்பட வேண்டுமல்லவா ?

mahathir“இன்னும் ரகசியமான அந்த பசிபிக் பங்காளித்துவ ஒப்பந்த (TPPA) விவரங்கள்  அந்த முன்னாள் பிரதமருக்கு எப்படிக் கிடைத்தன ? இந்த நாட்டிலுள்ள  மற்றவர்களைப் போன்று அவரும் பொது மக்களில் ஒருவர் தானே ?”

டாக்டர் மகாதீர்: TPPA குறித்து ரகசியமாக இருப்பதை நிறுத்திக் கொள்ளுங்கள்

ஆயிஷா: பசிபிக் பங்காளித்துவ ஒப்பந்தத்தில் (TPPA) உள்ள 29 பகுதிகளையும்  தாம் வாசித்து விட்டதாக முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் சொல்கிறார்.  அது எப்படி முடியும் ? அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவுடன் அவருக்கு நேரடித்  தொடர்பு இருக்குமோ ?

சாதாரண மக்களுக்கு கிடைக்காத TPPA ஒப்பந்த முழு விவரம்
அரசாங்கத்திலிருந்து ஒய்வு பெற்ற அந்த முதியவருக்கு TPPA ஒப்பந்தம்
முழுமையாக கிடைத்தது ?

கேஎஸ்என்: மகாதீருக்கும் பிரதமர் நஜிப் ரசாக்கிற்கும் சிறிய எளிய கேள்வி.  இன்னும் ரகசியமான அந்த பசிபிக் பங்காளித்துவ ஒப்பந்த (TPPA) விவரங்கள்  அந்த முன்னாள் பிரதமருக்கு எப்படிக் கிடைத்தன ? இந்த நாட்டிலுள்ள  மற்றவர்களைப் போன்று அவரும் பொது மக்களில் ஒருவர் தானே ?

பலர் சொல்வதைப் போல மலேசியாவுக்கு இன்னும் அவர் தான் அதிகாரப்பற்றற்ற  பிரதமரோ ?

ஜோக்கர்: அந்த ஒப்பந்தம் அதிகாரத்துவ ரகசியச் சட்டத்தின் கீழ்
வைக்கப்பட்டுள்ளதா ? அதனை வாசித்ததற்கும் பொது மக்களுக்கு அது குறித்து  கருத்துக் கூறியதற்கும் சட்டத்துறைத் தலைவர் (ஏஜி) அவர் மீது வழக்குத்  தொடுப்பாரா ?

கதை வேண்டாம்: அந்த TPPA பற்றி நமது அரசாங்கம் எதுவும் சொல்ல
மறுப்பதால் அந்த ஒப்பந்தம் தொடர்பான பேச்சுக்களிலிருந்து விலகிக் கொண்ட  தாய்லாந்திடமும் இந்தோனிசியாவிடமும் அதன் விவரங்களைக் கேட்க வேண்டும்.

கெட்டிக்கார வாக்காளர்: டாக்டர் மகாதீர் யாருடைய நலனைப் பாதுகாக்க  முயலுகிறார் ? சுயேச்சை வாணிக உடன்படுகளின் நோக்கமே போட்டியை  அதிகரிப்பதாகும். சந்தைக்குள் எளிதாக நுழைவதாகும்.

கிண்டல்: TPPA-யின் வலிமையை புரோட்டோன் தாங்கிக் கொள்ள முடியாது என  டாக்டர் மகாதீர் சொல்ல வருகிறாரா ?

சோகமான மலேசியன்: TPPA புரோட்டோனுக்குப் பாதகமாக இருக்கும். அந்த  ஒப்பந்தம் மூலம் மலேசியா நன்மை அடையும் போது ஏன் ஒரே ஒரு  நிறுவனத்துக்கு மட்டும் முன்னுரிமை கொடுக்க வேண்டும் ?

புரோட்டோன் பெட்ரோனாஸ் அல்ல. நமக்கு புரோட்டோன் உயிர் வாழ வேண்டிய  அவசியமில்லை.

என்ன காரணம்: டாக்டர் மகாதீர் நீங்கள் ஏன் புகார் செய்கின்றீர்கள் ? மலேசிய  அரசாங்கம் தனது ஒப்பந்தங்களில் ஒரு போதும் வெளிப்படையாக இருந்ததில்லை.  முழு இருட்டடிப்புடன் ஒப்பந்தங்கள் கையெழுத்தாக வேண்டும் என்ற உங்கள்  சித்தாந்தத்தை நடப்பு அரசாங்கம் பின்பற்றுகின்றது.

குழப்பம் இல்லாதவன்: என்ன கபட நாடகம் ! சுயேச்சை மின் உற்பத்தி
நிறுவனங்களுடன் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தங்கள், டோல் கட்டண
ஒப்பந்தங்கள் பற்றி இது வரை யாருக்கும் தெரியாது. அதனை  என்னவென்று சொல்வது ?

 

TAGS: