தேசியக் கொடி ஜாலுர் கெமிலாங்கின் விலை ஒரு பாக்கெட் சிகரட் விலையை விடக் குறைவாக இருந்த போதிலும் அதனைப் பறக்க விடுவதற்கான ஆர்வம் மக்களிடையே குறைந்து வருகின்றது என அரசாங்கத்துக்கான சமூக விவகார, பண்பாட்டு ஆலோசகர் ராயிஸ் யாத்திம் கூறுகிறார்.
தேசியக் கொடியைப் பறக்க விடுவது நாட்டுப் பற்றைக் காட்டுவதற்கான ஒரு வழி என்பதால் ஆர்வம் குறைந்து வரும் நிலை வருத்தமளிப்பதாக உள்ளது என அவர் சொன்னார்.
மக்களிடையே குறிப்பாக நகரங்களில் வாழும் மக்களிடையே அத்தகைய உணர்வுகள் குறைவாக இருப்பது தான் முக்கியப் பிரச்னை என்றார் ராயிஸ்.
அவர் அனைத்துலக இஸ்லாமிய பல்கலைக்கழகத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பின்னர் நிருபர்களிடம் பேசினார்.
இவனை எல்லாம் ஏன் இன்னும் பதவியில் வைத்துக்கொண்டு மக்கள் வரி பணத்தை விரையம் செய்கிறார்களோ தெரியவில்லை……
தேசியக் கொடியை மக்கள் பறக்கவிடாததை எண்ணி அரசாங்கம்தான் வெட்கப்பட வேண்டும். பூமிபுத்ரா எனவும், புக்கான் பூமிபுத்ரா என்றும், பிரித்தாளும் கொள்கையை அம்னோ அரசு என்று கைவிடுகிறதோ, அப்போதுதான் நாட்டுப் பற்று மீது மக்களுக்கு மரியாதை ஏற்படும்.
ஏதொ 1 இனம் சுகமாக வாழ வுலைக்கும் அரசாங்கம்.ஏன் எல்லாரிடமும் எதிர் பார்க்கிறது,கொடியை பரக்க விட.