டீசல் எண்ணெய் சிந்தியதால் சிலாங்கூர் மாநிலத்தின் பல பகுதிகளில் ஏற்பட்ட நீர் வினியோக தடங்கல் கட்டுப்பாட்டில் இருக்கிறது என்று சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் எலிசபெத் வோங் கூறுகிறார்.
தற்போதைய நிலவரப்படி, டீசல் எண்ணெய் ஆற்றில் கலப்பது தடுக்கப்பட்டுள்ளது.
ஆற்றில் காணப்படும் டீசல் எண்ணெய்யின் அளவு மிகக் குறைவாகவே உள்ளது. சுத்தப்படுத்தும் பணி முடிவுற்றவுடன் இன்றிரவு மணி 8.00 அளவில் வழக்கமான நிலையை அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று எலிசபெத் மேலும் கூறினார்.
இவனுங்களே டீசலை கலந்து விட்டு இப்ப வந்து நல்ல பெயரு வாங்குரானுங்கலாம் ,போங்கடா SYBAS
இவ்வளவு நாட்களாக, மாதங்களாக, வருடமாக கையூட்டு வாங்காமலா இவர்கள் லைசன்ஸ் இல்லாத இந்த கம்பெனிக்கு இடம்கொடுத்து வைத்திருந்தார்கள்.