-டாக்டர் சேவியர் ஜெயக்குமார், செப்டெம்பர் 3, 2013.
இரு தினங்களுக்கு முன்பு நடைபெற்ற ம.இ.காவின் தேசியத் தலைவருக்கான வேட்புமனு தாக்கலின் போது போட்டியின்றி ம.இ.காவின் தேசியத் தலைவராக ஏகமனதாகத் தேர்ந்தெடுக்கப் பட்ட டத்தோஸ்ரீ பழனிவேலுக்கு எனது வாழ்த்துகள்.
இந்திய சமுதாயம் எல்லாவற்றிலும் தோல்விக்கண்டு நிற்கும் இவ்வேளையில், சமுதாய வெற்றிக்குப் பாடுபட வேண்டியவர்கள் பொன்னான காலத்தைச் சச்சரவுகளில் ஈடுபட்டு வீணாக்கக் கூடாது.
அவரின் வெற்றிக்குப்பின் ஆற்றிய உரையில் ம.இ.காவின் சொத்துகளைப் பட்டியலிட்டிருந்தார். ஆக, ம.இ.காவுக்கு இருக்கும் சொத்துகளே போதுமானது. கடந்த காலத்தில் நிகழ்ந்துள்ள சொத்துபறிப்பு, சுரண்டல் கொள்கைகளுக்கு எல்லா வட்டத்திலும் விடை கொடுக்கப்பட வேண்டும். அதனை ம.இ.கா தலைவர் தேசிய நிலையிலிருந்து தொடக்கி வைத்தால் கட்சிக்கு நன்மை.
தனி மனிதனிடமோ, சமுதாயத்திடமோ இருந்து எடுத்ததைத் திரும்பிக் கொடுப்பதன் வழி, நீண்ட கால நோக்கில் சமுதாயத்தின் நன்மதிப்பைச் சம்பாதிக்க இன்றைய தேசியத் தலைவர் வழியமைக்க வேண்டும். சமீபத்தில் ம.இ.காவின் தலைமைத்துவத் தேர்தல் களத்தில் மைக்கா விவகாரம் குறித்து ம.இ.கா உறுப்பினர்கள் எப்படித்தாக்கிக் கொண்டனர் என்பதும் ஏன் என்பதும் இன்றைய தேசியத் தலைவருக்கு நன்றாகவே தெரியும்.
எப்பிங்ஹாம் தமிழ்ப்பள்ளியில் நிலம்
ஆகவே, இன்றைய தலைவர் எப்பிங்கம் தமிழ்ப்பள்ளியின் 3 ஏக்கர் நிலத்தை தமிழ்ப்பள்ளியிடம் திரும்ப ஒப்படைத்து, தான் நேர்மையானவர், நம்பிக்கைக்கு பாத்திரமானவர் என்பதை நாட்டு மக்களுக்கும் அவர் கட்சி உறுப்பினர்களுக்கும் காட்ட வேண்டும். ஐயப்ப பக்தரான அவர், அதனை செய்வார் என்று சமுதாயம் பெரிதும் எதிர்பார்க்கிறது. அவர் அப்படி செய்தால் 2016க்கு பின்புங்கூட பதவியிலிருக்க வாய்ப்புள்ளது.
ம.இ.கா அந்த நிலத்தைப் பள்ளியிடம் திரும்ப ஒப்படைத்தால், அது செலுத்திய நிலப் பிரிமியத்தை மாநில அரசாங்கம் திரும்ப வழங்க, எல்லா ஏற்பாடுகளையும் செய்ய நாங்கள் தயாராகவுள்ளோம்.
அதே போல் மனிதாபிமான மற்ற ரீதியில் தோட்டத் தொழிலாளர்களின் குடியிருப்புகளிலிருந்தும், வேலையிலிருந்தும் விரட்டி 400 தொழிலாளர்களையும், அவர்களின் பிள்ளைகளின் எதிர்காலத்தைச் சூறையாடிய அரக்கனுக்குத் துணை நின்ற பாவத்தைக் கழுவ வேண்டிய பொறுப்பும் இன்றைய தேசியத் தலைவருக்கு இருக்கிறது.
அந்த 400 முன்னாள் தோட்டத் தொழிலாளர்கள் இன்று குடியிருக்க வீடு கூட இல்லாமல் கூடாரத்தில் பரிதவிக்கின்றனர். மாநில அரசாங்கத்தின் மூலம் நாங்கள் அவர்களுக்கு நிலத்தை வழங்கி விட்டோம். அவர்களுக்கான வீடுகளைக் கட்ட புத்தரா ஜெயா ஹோல்டிங்ஸை வற்புறுத்த வேண்டிய மிக அவசரப் பணியும் உங்களுடையது என்பதனைக் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.
போட்டியின்றி நீங்கள் பெற்ற வெற்றி கட்சியில் உங்கள் பலத்தைக் காட்டுகிறது. ஆகவே பள்ளி நிலத்தைத் திரும்ப ஒப்படைக்க, நீங்கள் முடிவு எடுத்தால் கட்சியில் எந்த எதிர்ப்பும் இருக்காது, மாறாகப் போற்றப் படுவீர்கள்.
அதே போன்றே டெங்கில் தாமான் பெர்மாத்தா வீட்டு விவகாரம் குறித்துப் பலமாக, பகிரங்கமாகப் பிரதமருக்குக் குரல் கொடுக்காலாம். அப்படிச் செய்தால் எந்த அமைச்சரும் உங்களை அமைச்சரவையை விட்டு வெளியே போ என்று சொல்ல மாட்டார்கள்.
அவர்களும் உணர்துள்ளானர் டெங்கில் தாமான் பெர்மாத்தா குடியிருப்பாளர்கள் எப்படி அரசாங்கத்தால் ஏமாற்றப் பட்டுள்ளனர் என்பதனை. ஆகவே ஒரு நல்ல தலைவனின் வெற்றி என்பது அவனுடைய நாட்டின் அல்லது சமூகத்தின் வெற்றியாக இருக்க வேண்டும். குறைந்தது, இதனையாவது தனது வெற்றிக்கு பரிசாக இந்திய சமுதாயத்திற்கு இன்றைய ம.இ.கா வின் தேசியத் தலைவர் வழங்க வேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
நிலத்தை திருப்பி கொடுப்பாரா நம் இனத்தின் “நம்பிக்கை நட்சத்திரம்”??
சேவியர் செய்தி யாவும் நன்று ஆமாம் ஒரு கிறிஸ்துவாக இருந்து கொண்டு பழனிவேலுக்கு ஐயப்ப சாமிய ஒப்பீடு ஒப்பாரி ஏன்? மத மரபில் மரியாதை வேண்டும். எப்பிங்கம் தமிழ் பள்ளி நிலத்தை பிடுங்கி தர மந்தரி புசாருக்கு mandate power இல்ல என்று சொல்ல வரீங்களா.? போய் படிங்கயா ?
சேவியரை கேக்கிறேன் லேம்ப பிருங்கி முன்னாள் தோட்டா மக்களின் 64 வீடுகள் பிறகு 64 லோட் நிலங்கள் பிரித்து தராத மாநில மந்திகளின் கதை என்ன ஆச்சி? நில நிறுவன தூபங்கள் தூசிய போனதோ? தோட்டமக்களின் பாவம் பல் இலிகிறது.
பெயரைக்குறிப்பிடாமல் Anonymous எல்லாம் எழுதலாம் அதில் நீதி இருக்க வேண்டும். சேவியர் ஆட்சிக்குழுவில் இருக்கும் பொழுது ஆயிரக்கணக்கான இந்து ஆலயங்களுக்கு நிதி கொடுத்தார், அன்று அவர் கிரிஷ்துவராக தெரியவில்லை. ஆனால் திருடியதை திரும்ப கொடுங்க என்று சொன்ன, அவர் ஐயப்பன் பக்தர் என்று சொல்லக்கூடாதுனு சொல்லுறீங்க. அவர் ஆட்சியிலிருக்கும் போது ஆலயங்களை சமூக சேவை மையமாக இருக்க வேண்டும் என்று பணம் மட்டும் இல்ல நிலமும் தந்தார். சிமஞ்சியிலுள்ள சுப்பரமணியர் கோவிலுக்கு பல முறை போய் வந்துள்ளோன். அந்த கோவில் தலைவர் பக்கா ம.இ.கா பக்தர், 25 ஆண்டுகளுக்கு முன் நிலத்துக்கான பிரிமியம் கட்டி அவர் பார்க்காத ம.இ.கா தலைவர்களே இல்லை, அது எப்படி,ஒரு மகாலிங்கம், சுப்பரமணியம், சாமி, முருகன், கோபாலகிருஷணன், சிவலிங்கம் என்ற நமது கடவுலுங்க பெயரை சுமந்துக்கொள்ளும் தலைவர்களுக்கு இல்லாத அக்கறை சேவியருக்கு, அவரு எப்படி அந்த ஒரு ஏக்கர் நிலத்துக்கு பட்டா வாங்கி தந்தார்.
யோவ்… ஐயப்ப பக்தராக இருந்தால் உமக்கென்ன? முருகன் பக்தராக இருந்தால் உமக்கென்ன? கேற்க வந்த கேள்வியை ஒழுங்காய் கேள் மாமனிதா….
யாரு சொன்னனு பாக்காத மேன், என்ன சொன்ன கவனி, டெங்கில 400 இந்தியகாரன் குடும்பத்துக்கு வீடு இல்ல, அவன் அவதிப்படுறான், அதை கவனிக்க எவனுக்கும் நேரமில்லை ஐம்பனு இழுக்கதே, பழனி வேலு இழுக்காதேனு, சொல்லுரே. திருந்துங்கலா!
இப்போது ம.இ.கா.வில் நம்பிக்கைக் குரியவராக ஜி.பழனிவேலு போற்றுப்படுகிறார். சேவியர் குறிப்பிட்ட குற்றச்சாட்டுக்கள் களையப்பட வேண்டும். தலைவன் என்னும் கம்பீரத்தோடு அவர் செயல்பட வேண்டும். அப்படி என்ன தான் செய்திடுவார்கள்? தலையை வாங்கி விடுவார்களா? தலைவா! உங்கள் பலத்தைக் காட்டுங்கள்!
எப்பிங்க்ஹம் தமிழ் பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்க முன்னாள் தலைவர் என்ற முறையில் நான் முழு மனதுடன் ஆதரிக்கிறேன்.ம இ கா எடுத்துக்கொண்ட 3 ஏக்கர் நிலத்தை மீண்டும் ஒப்படைக்க வேண்டும்.எம் ஐ இ டி , எய்ம்ஸ் ஆகியவை ம இ காவின் சொத்து , ஆகவே டத்தோ ஸ்ரீ சாமிவேலு ஒப்படைக்க வேண்டும் என்று இன்று டத்தோ ஸ்ரீ பழனிவேலு இன்று போராட தொடங்கி விட்டார்.ஆதே போல் ஏழை தமிழ் பள்ளி நிலத்தையும் மிண்டும் பள்ளி இடமே ஒப்படைக்க வேண்டும்.தமிழ் பள்ளி நிலத்தை சுருட்டி கொள்ளையடிக்க பழனிவேலு முயலக் குடாது.தாய் மொழி , தமிழில் பெசத்தேரியாட இவரை தலைவராக எற்றுக்கொண்ட ம இ காவினரும் 3 ஏக்கர் நிலத்தை மிண்டும் ஒப்படைக்க வேண்டும்.பலனிவேலும் ம இ காவினரும் தமிழுக்கும் ,தமிழ் பள்ளிக்கும் துரோகம் செய்யக் கூடாது என்று மானமுள்ள தமிழன் என்ற முறையில் s k suppiah உரிமையோடு இக்கோரிக்கையை முன் வைக்கிறேன்.டாக்டர் சேவியர் ஜெயக்குமாருக்கு எனது முழு ஆதரவை தெரிவித்துக்கொள்கிறேன்.
ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு, ஜயப்ப பக்தர் என்று சொன்ன திருட்டு கூட்டம்னு அர்த்தமா? இல்லையே நீதியான, ஒரு கடவுலுக்கு உள்ளப்பூர்வமாக தன்னை புணிதப்படுத்தி மனதில் எந்த அலுக்கும் இன்றி செயல் படுபவர்கள். தெய்வத்துக்கு பயந்தவர்கள். ஆக, ஒரு அரசியல் வாதியாக அவர் கொடுக்க மறுப்பதை ஒரு ஐயப்பன் பக்தனாக சிந்தித்து, ஒரு தூய்மையான மனிதனாக திருப்பி கொடு. நீ சமுதாயத்தை ஏமாற்றினால், தமிய்ப்பள்ளியை ஏமாற்றினால் உனக்கு ஐயப்பனின் அருள் கிட்டாது, நீ போடுவது வெளி வேசமாகவே இருக்கும் என்று திட்டாமல், ஐப்பன் மேல் ஆணையாக சொல், அது பள்ளி சொத்துதானே, அப்படியானால் அதனை திரும்ப ஒப்படைத்துவிடு என்று மிக நாகரீகமாக சேவியர் கூறியுள்ளார். அவருக்கு என் பாராட்டுகள், கோவில் கொடியவர்களின் கூடாரமில்லை ”பராசக்தி” அப்படித்தான் ம.இ.கா அரசியல் தலைமைத்துவத்தை அயோக்கியர்களின் கூடாரமாக்கி விடாதீர்கள் அதனால் இந்தியர்களுக்குத்தான் தீமை என்கிறார் டாக்டர் சேவியர். அருமையான கருத்து. இந்த சமுதாயத்துக்கு தொடர்ந்து வழிக்காட்டுங்கள் ஐயா!
அதெப்படி திருப்பிக் கொடுக்க முடியும். நானும் என் சக ம இ கா நண்பர்களும் என்ன போக்கனாவா???? எனது முன்னாள் தலைவர் காட்டிய வழியில் செல்வதே நல்ல சேவகனுக்கு மரியாதை…
sk suppaiyah ம இ கா தலைவராக இருந்து கொண்டு பழனிக்கு ஆப்பு வைக்க வேண்டாம்.
டாக்டர் நீங்க கொஞ்சம் பொறுங்க.! இப்பதான் பழனி தப்பித்தோம் பிழைத்தோம் என தலை தப்பி வந்து உள்ளார் இன்னும் தலைமைப் பீடத்தில் அமரவே இல்லை அதற்குள் வம்புக்கு இழுத்தா எப்படி.?
தமிழ் பள்ளியில் படிக்காத ஒருவர்….தன் பிள்ளைகளை கூட தமிழ் பள்ளியில் சேர்க்காத ஒருவர்….. தமிழ் மொழியும் ..தமிழ் பள்ளியை பற்றி பேசுவதற்கு என்ன அருகதை இருக்கிறது…
சாமி சிரம்பான் அவர்கள் என் எதிர்ப்பை விளங்கி கொள்ளுங்கள் ..மத சிந்தனை மனிதரை கடவுள் பேர் வைத்து அரசியல் ஆக்க வேண்டாம்.நில சிக்கல் அரசியல் ஐயப்பன் இந்து மதம். ஒட்டு மொத ஐயப்பன் இந்துவையும் கேவலபடுத்துவது ஆகாது. என்றுதான் சொல்ல வரேன்.நம்ப தப்புக்கு நம்ப அப்பனை இழுக்க கூடாது. தனிப்பட பழனிவேலை ஏறுங்கள்.துப்புங்கள் .
அவர் ஆசை அப்படி என்றல் நமக்கும் வெறும் தோசை சாப்பிட முடியும் என்று அடையலாம் இடுகிறார்..ஒகேய்தான் okey lah சரக்கு தானே முக்கியம் தடம் தடையல்ல பாதை சரி சரக்கு போய சேரும்.
திரு anonymous அவர்களே வணக்கம், டாக்டர் சேவியரின் அறிக்கையை நான் மீண்டும்-மீண்டும் படித்தேன் அதில் ஐப்பன் பக்கத்தரை அவமதிக்கும் எந்த கருத்தும் இல்லை. நானும் ஒரு ஐயப்பன் பக்தரே, அவர் மிக தெளிவாக குறிப்பிட்டுள்ளார் இறைவன் மீது நம்பிக்கை வைப்பவர்களுக்கு மக்கள சேவை மகேசன் சேவை என்று. டெங்கில் தாமான் பெர்மாத்தா மக்களும், எப்பிங்கம் மக்களும் இந்தியர்கள்தான் பெரும் பகுதி இந்துக்களே, மேலும், சகோதரி\ சகோதர கமால் முனியும் மிக அருமையாக விளக்கி எழுதியுள்ளார் அதனையும் கவனிப்பது நல்லது. ஒரு குற்றவாளி நீதிமன்றத்தில் பகவத்கீதை மீது சத்தியம் செய்தால் அது எப்படி இந்துகளை அவமதிப்பதாக கொள்ள முடியும்? பிரிஸ்தானா தேசிய ப்பள்ளி மாணவர்கள் உடைமாற்றும் இடத்தில் உணவு உட்கொள்ள சொன்ன ஆசிரியரை கண்டித்த பலர்- புனித ரமலான் மாதத்தில் பாவம் செய்வதாக இட்டு காட்டியிருந்தனர்- அவர்களில் பலர் இஸ்லாமியர்கள் அல்ல, அவர்களை யாரும் இஸ்லாமிய மத்ததை நிந்தனை செய்துவிட்டதாக ஏசவில்லை. ஆக, தெய்வதிருமகன் பழனிவேலிடமிருந்து ஐப்பன் மனங்குளிரும் மக்கள் சேவை வேண்டும் என்று எதிர்பார்ப்பதில் தவறு இல்லை.
சாமிவேலு எந்த சாமி பக்தரும் இல்லை. அதனால்தான் குண்டர் கும்பலையே சாமியாக்கி விட்டார். பழனிவேலு நிலைமை வேறு. ஐயப்ப பக்தர். மனதில் நல்லது கெட்டது பயம் இருக்கும். அதனால் நல்லது செய்ய வேண்டும் என்று ஒரு உணர்வு இருக்கும். தான் தோன்றித் தனம் இருக்காது. அவர் மூலம் இந்த சமுதாயம் பயன் அடையும் என்று நம்புவோம்.
கமல் முனி…உங்கள் கருத்து மிக அற்புதம்…..