சபா ஆர்சிஐ: இன்று மகாதிர் சாட்சியம் அளிக்கிறார்

Mahathir-Project IC2சபாவில் அந்நியர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டது சம்பந்தமாக நடந்து வரும் அரச விசாரணை ஆணையத்தின் முன்பு இன்று முன்னாள் பிரதமர் மாகாதிர் முகமட் சாட்சியமளிக்கிறார்.

அந்த ஆணையத்தின் விசாரணைக்கு நிர்ணயிக்கப்பட்ட காலம் முடிவிற்கு வரவிருக்கும் வேளையில் மகாதிர் சாட்சியமளிக்கிறார்.

அந்நியர்களுக்கு அடையாள அட்டை வழங்கியதில் மலேசியாவின் பிரதமராக 22 ஆண்டுகாலம் பதவி வகித்த மகாதிர் நேரடியாக சம்பந்தப்பட்டிருந்தார் என்று கூறப்படவில்லை என்றாலும், சாபாவில் சட்டவிரோத குடியேறிகளுக்கு குடியுரிமை வழங்குவதற்கென்று “புரஜெக்ட் எம்” என்று இருந்ததாக ஆர்சிஐயிடம் பல சாட்சிகள் கூறியுள்ளனர்.

மகாதிரின் முன்னாள் உதவியாளர் அசிஸ் சம்சுடினும், முன்னாள் துணை உள்துறை அமைச்சர் மெகாட் ஜூனிட் அயுப்பும் இதில் முக்கியப் பங்காற்றியிருந்ததாக விசாரணை ஆணையத்திடம் கூறப்பட்டுள்ளது.

சாபாவில் அம்னோ நுழைவதற்கு வழிவகுக்கும் நோக்கத்துடன் இந்தத் திட்டத்தை மகாதிர் பிரதமராக இருந்த 1990களில் அமல்படுத்தப்பட்டதாக குற்றம் சாட்டப்படுகிறது.

TAGS: