மலேசியத் திரைப்படங்களில் மிகுந்த சர்ச்சைக்குள்ளான படம் ‘தாண்டா புத்ரா’ என்பதில் ஐயமில்லை. சர்ச்சையின் காரணமாகவே பரவலான விளம்பரமும் கிடைத்தது அப்படத்துக்கு.
ஓர் ஆண்டுக்கு மேலாக வெளியிடாமல் வைத்திருந்து இறுதியில் ஆகஸ்ட் 29-இல், திரையிடப்பட்ட அப்படம், முதல் வாரத்தில் நல்ல வசூலைக் கண்ட 10 படங்களின் வரிசையில் 6-வது இடத்தில் இருந்தது. ஆனால், இரண்டாவது வாரத்தில் அந்த இடத்தைத் தக்கவைத்துக்கொள்ள அதனால் முடியாது போயிற்று.
நேற்று, சினிமாஆன்லைன் வெளியிட்டிருந்த (செப்டம்பர் 5- செப்டம்பர் 11) நல்ல வசூலைப் பெற்ற படங்களின் வரிசையில் அதன் பெயர் இல்லை.
மறுபுறம் உள்ளூர் தயாரிப்பான ‘KL Zombi’திரைப்படம் இரண்டாவது இடத்தைப் பெற்று வசூலில் சக்கைப் போடு போட்டுக்கொண்டிருக்கிறது.
அதனால் என்ன…. தண்டா புத்ரா 2 இல் பெரிய budget போட்டு இன்னும் காசு பண்ணலாம். எவன் என்னா கேக்கிறது. RM 4 மில்லியன் போட்டு RM 400,000 கிடைச்சதே பெரிய விஷயம்.
பாஞ்ச் டைலாக் எதுவும் இல்லையோ ?
இந்த படதுல நயன்தார ஒரு டான்சு ஆடியிருந்த விழா
கண்டிருக்கும் .பாவம் என்ன செய்வது
செரியா சொன்னீங்க…….!!!!!
ஐயோ..இனவாதமா பேசாதீங்க.. நாமதான் எல்லாத்தையும் இனவாதமா பார்க்குறோமாம்.. உண்மையிலே அப்படியெல்லாம் இல்லையாம்.. அமைச்சர் சொல்றார்..
இந்த TANDAS PUTERA வின் படச்சுருளை [reels] யாராவது தூக்கி கழிவறைக் குழிக்குள் எரிந்துவிடப் போகிறார்கள். கவனம். கழிவையின் குழி அடைத்துக்கொள்ளப் போகிறது.