சிலாங்கூரின் நீர் விநியோகத் தொழில் ஆண்டு இறுதிக்குள் திருத்தி அமைக்கப்படும்

khalidமாநில நீர் விநியோகத் தொழிலைத் திருத்தி அமைக்கும் விவகாரம் டிசம்பர் 31-க்குள் முடிவு செய்யப்படும் எனக் கூட்டரசு அரசாங்கம் சிலாங்கூர் அரசுக்கு உறுதி அளித்துள்ளது.

அதன் தொடர்பில் மாநில அரசு முன்வைத்த வாதங்களும் உண்மைகளும் கவனத்தில் கொள்ளப்பட்டிருப்பதாக எரிபொருள், பசுமைத் தொழில்நுட்பம், நீர்வள அமைச்சர் மெக்சிமஸ் ஒங்கிலி செப்டம்பர் 9-இல் அனுப்பி வைத்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இதனைத் தெரிவித்த சிலாங்கூர் மந்திரி புசார், அப்துல் காலிட் இப்ராகிம் (வலம்), நீர் நிர்வாகத்தை மாநில அரசுக்கே திருப்பிக் கொடுக்க முடிவு செய்துள்ள அரசாங்கத்துக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார்.