அரசு தலைமை வழக்கறிஞர், அரசு தரப்பு வழக்கறிஞர் அதிகாரப் பிரிவினை மற்றும் பிரதமரின் பதவிக்காலக் கட்டுப்பாடு: நாடாளுமன்றத்தில் மசோதாக்கள் தாக்கல்

அரசு தலைமை வழக்கறிஞர் (AG) மற்றும் அரசு தரப்பு வழக்கறிஞர் (PP) ஆகியோரின் அதிகாரங்களைப் பிரிப்பதற்கான மசோதாவும், பிரதமரின் பதவிக்காலத்தை இரண்டு தவணைகளாகக் கட்டுப்படுத்துவதற்கான மசோதாவும் இன்று மக்களவையில் முதல் வாசிப்பிற்காகத் தாக்கல் செய்யப்பட்டன.

சட்டம் மற்றும் நிறுவன சீர்திருத்தத்துறை அமைச்சர் அஸாலினா ஒத்மான் சையத், இந்த மசோதாக்கள் முறையே ‘அரசியலமைப்பு (திருத்த) மசோதா 2025’ மற்றும் ‘அரசியலமைப்பு (திருத்த) (எண். 2) மசோதா 2026’ ஆகியவற்றின் கீழ் அறிமுகப்படுத்தப்பட்டதாகத் தெரிவித்தார்.

இந்த இரண்டு மசோதாக்களின் இரண்டாம் வாசிப்பும் தற்போதைய நாடாளுமன்றக் கூட்டத்தொடரிலேயே நடைபெறும்’ என்று அஸாலினா கூறினார்.

இந்த இரண்டு மசோதாக்களும் நிறைவேற்றப்படுவதற்கு நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை தேவை; அதாவது, மொத்தம் உள்ள 222 நாடாளுமன்ற உறுப்பினர்களில் குறைந்தது 148 பேர் இதற்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டும்.

-fmt