கிள்ளான் விபத்தில் 2 பெண்கள் உயிரிழந்த வழக்கில் முதியவர் தனக்கு எதிரான குற்றச்சாட்டை மறுத்து விசாரணை கோரினார்

அலட்சியமாக வாகனத்தை ஓட்டி, வோங் நியோக் சிம் (வயது 62), வோங் நியோக் ஃபோங் (வயது 57) ஆகிய சகோதரிகளின் மரணத்திற்கு காரணமானதாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை 75 வயதான ஆங் கிம் லாய் மறுத்து, விசாரணை கோரியுள்ளார்.

அங் கிம் லாய் (Ang Kim Lai) என்பவர் தனது எஸ்.யு.வி (SUV) ரக வாகனத்தை அலட்சியமாக ஓட்டி, வாங் நியோக் சிம் (Wong Nyok Sim) மற்றும் வாங் நியோக் ஃபோங் (Wong Nyoke Fong) ஆகியோரின் மரணத்திற்கு காரணமானதாகக் குற்றம் சாட்டப்பட்டார்.

கடந்த புதன்கிழமை அன்று கவனக்குறைவாக வாகனம் ஓட்டி இரு சகோதரிகளின் மரணத்திற்குக் காரணமானதாகக் கூறப்படும் குற்றச்சாட்டை, 75 வயது முதியவர் ஒருவர் இன்று இங்குள்ள மஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் மறுத்து விசாரணை கோரினார்.

மஜிஸ்திரேட் ஏ. கார்த்தியாயினி முன்னிலையில் இந்த குற்றச்சாட்டு மாண்டரின் மொழியில் வாசித்துக் காட்டப்பட்டதைத் தொடர்ந்து, ஓய்வூதியதாரரான ஆங் கிம் லாய் (Ang Kim Lai) தன் மீதான குற்றச்சாட்டை மறுத்தார்.

கடந்த மே 15 அன்று இரவு 7.30 மணியளவில், இங்குள்ள ஜாலான் பெக்கான் பாருவில் (Jalan Pekan Baru) தனது விளையாட்டுப் பயன்பாட்டு வாகனத்தை (SUV) கவனக்குறைவாக ஓட்டி, வாங் நியோக் சிம் (Wong Nyok Sim, 62) மற்றும் வாங் நியோக் போங் (Wong Nyoke Fong, 57) ஆகிய இருவரின் மரணத்திற்குக் காரணமானதாக ஆங் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

1987ஆம் ஆண்டு சாலைப் போக்குவரத்துச் சட்டத்தின் பிரிவு 41(1)-இன் கீழுள்ள இக்குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், ஐந்து முதல் 10 ஆண்டுகள் வரையிலான சிறைத்தண்டனை,  ரிம 20,000 முதல் ரிம 50,000 வரையிலான அபராதம் மற்றும் ஓட்டுநர் உரிமம் இடைநீக்கம் ஆகிய தண்டனைகள் விதிக்கப்பட வழியுண்டு.

குற்றத்தின் தீவிரத்தன்மையைக் கருத்தில் கொண்டு, துணை அரசு வழக்கறிஞர் நூர் நாடியா சியுஹாதா ரோஸ்லி ரிம 15,000 பிணைத் தொகையாகப் பரிந்துரைத்தார்.

இருப்பினும், ஐந்து பிள்ளைகளின் தந்தையான ஆங், உயர் இரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளதால் அதற்கான தொடர் சிகிச்சைகள் தேவைப்படுவதைக் சுட்டிக்காட்டி, அவருக்குக் குறைந்தபட்ச பிணை வழங்குமாறு அவரது வழக்கறிஞர் டோங் குவான் லிங் மேல்முறையீடு செய்தார்.

இதனை ஏற்ற நீதிமன்றம், ஆங்கிற்கு ரிம 10,000 பிணைத் தொகையை அனுமதித்ததோடு, இந்த வழக்கு முடியும் வரை அவரது ஓட்டுநர் உரிமத்தை இடைநீக்கம் செய்யவும் உத்தரவிட்டது. மேலும், இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணைக்காக (Mention) ஆகஸ்ட் 4ஆம் தேதியை நீதிமன்றம் நிர்ணயித்துள்ளது.