பெட்டாலிங் ஜெயா நாடாளுமன்ற உறுப்பினர் லீ சியான் சுங் கட்சியின் மத்திய தலைமைத்துவக் குழுவிலிருந்து இன்று விலகியதற்கு பிகேஆர் தகவல் பிரிவுத் தலைவர் பாமி பட்சில் வருத்தம் தெரிவித்துள்ளார்.
தொடர்புத் துறை அமைச்சருமான கூறுகையில், கட்சியின் வழிகாட்டுதல் குறித்த மாறுபட்ட கருத்துக்களைப் பகிர்வதற்கு லீ இந்தத் தலைமைத்துவக் குழுவை ஒரு தளமாகப் பயன்படுத்தியிருக்க வேண்டும் என்றார்.
முன்னாள் புக்கிட் லாஞ்சான் சட்டமன்ற உறுப்பினர் எலிசபெத் வோங் உட்பட மாறுபட்ட கருத்துக்களைக் கொண்ட உறுப்பினர்களும் இக்குழுவில் இடம்பெற்றுள்ளனர் என்று அவர் குறிப்பிட்டார்.
தலைமைத்துவக் குழு கூட்டங்களின் போது, அவர் (வோங்) பெரும்பாலும் கட்சித் தலைவர் அல்லது பிற தலைவர்களின் கருத்துக்களிலிருந்து முற்றிலும் மாறுபட்ட கருத்துக்களையே வழங்குவார்,” என்று இன்று நடைபெற்ற தனது அமைச்சகத்தின் செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறினார்.
அவர் ஒரு காலத்தில் வேறு குழுவைச் சேர்ந்தவராக இருந்தபோதிலும், தனது கருத்துக்களை வெளிப்படுத்துவதன் மூலம் எப்போதும் தனது கொள்கைகளை நிலைநிறுத்தினார். மேலும் கட்சி சரியான பாதையில் செல்வதை உறுதிப்படுத்த இக்குழுவை ஒரு தளமாகப் பயன்படுத்தினார்.
லீயும் அதையே செய்திருக்க வேண்டும் என்று அவர் கூறினார்.
மேலும், தலைமைத்துவக் குழுவிலிருந்து விலகியதற்கான தனது முடிவு குறித்து பெட்டாலிங் ஜெயா வாக்காளர்களுக்கும், குறிப்பாக பிகேஆர் உறுப்பினர்களுக்கும் லீ விளக்கமளிக்க வேண்டும் என்றும் பாமி கூறினார்.
முன்னதாக இன்று, கட்சியின் மிக உயரிய முடிவெடுக்கும் அமைப்பான இக்குழுவிலிருந்து விலகுவதாக லீ அறிவித்தார்; இருப்பினும் தான் பிகேஆர் உறுப்பினராகத் தொடர்வதோடு, நாடாளுமன்றம் கலைக்கப்படும் வரை நாடாளுமன்ற உறுப்பினராகத் தனது பணியைத் தொடரப்போவதாகவும் அவர் தெரிவித்தார்.
நாம் எந்தப் பிரச்சினையையும் விவாதிக்க முடியும். மனம் இருந்தால் மார்க்கம் உண்டு,” என்று அவர் கூறினார்.
-fmt
























