ஜாலான் அம்பாங்கிலுள்ள பவிலியன் எம்பசி குடியிருப்புப் பகுதியின் ஒரு பிரிவிலிருந்து கத்தியைக் காட்டி மிரட்டிய நபர்கள் ரொக்கப் பணம், நகைகள் மற்றும் ஆடம்பரக் கடிகாரங்களைக் கொள்ளையடித்துச் சென்றனர்.
பவிலியன் எம்பசியில் பிற்பகல் 2 மணி முதல் 3 மணிக்குள் இந்தத் கொள்ளை சம்பவம் நடந்ததாக வாங்சா மாஜு காவல் துறைத் தலைவர் அன்னாஸ் சுலைமான் தெரிவித்தார்.
நேற்று ஜாலான் அம்பாங் பகுதியில் உள்ள ஒரு குடியிருப்பு வளாகத்தில், முகமூடி அணிந்த கத்திகளுடன் வந்த ஒரு குழுவினர், சீன நாட்டைச் சேர்ந்த ஒருவரிடம் இருந்து கிட்டத்தட்ட ரிம 3 மில்லியன் மதிப்பிலான பணம், நகைகள் மற்றும் ஆடம்பரக் கைக்கடிகாரங்களை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
வாங்சா மாஜு காவல் நிலையத் தலைவர் அன்னாஸ் சுலைமான் கூறுகையில், இந்தக் கொள்ளை சம்பவம் பவிலியன் எம்பஸி குடியிருப்பில் நேற்று பிற்பகல் 2 மணி முதல் 3 மணி வரை நடைபெற்றதாக தெரிவித்தார்.
“கொள்ளையர்கள் பாதிக்கப்பட்டவரின் கைத்தொலைபேசியையும் சேதப்படுத்தியதுடன், அவரது கடவுச்சீட்டையும் எடுத்துச் சென்றுள்ளனர்,” என்று அன்னாஸ் தனது அறிக்கையில் தெரிவித்தார். இந்தச் சம்பவத்தில் யாருக்கும் கடுமையான காயங்கள் ஏற்படவில்லை என்றும் அவர் கூறினார்.
சந்தேக நபர்களைத் தேடும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளதாக அன்னாஸ் தெரிவித்தார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக தகவல் தெரிந்தவர்கள் வாங்சா மாஜு காவல் நிலையத்தை 03-9289 9222, கோலாலம்பூர் காவல்துறை அவசர உதவி எண்ணை 03-2115 9999 அல்லது அருகிலுள்ள காவல் நிலையத்தைத் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
























