நாடு முழுவதும் அத்தியாவசியப் பொருட்களின் விலைகளைக் கட்டுப்படுத்தவும், அதிகப்படியான லாபம் ஈட்டுவதைத் தடுக்கவும் அரசு நிறுவனங்களுக்கு இடையே வலுவான ஒருங்கிணைப்பு மற்றும் பயனுள்ள அமலாக்கத்தை உறுதி செய்ய வேண்டும் என்று பிரதமர் அன்வார் இப்ராஹிம் அழைப்பு விடுத்துள்ளார்.
இன்று தமது தலைமையில் நடைபெற்ற, இந்த ஆண்டிற்கான வாழ்க்கைச் செலவினம் தொடர்பான தேசிய ஆக்ஷன் கவுன்சிலின் இரண்டாவது கூட்டத்தில் அன்வார் இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.
2027ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தின் கீழ், மக்களின் வாழ்க்கைச் செலவினச் சுமையைக் குறைப்பதற்கான முன்மொழியப்பட்ட திட்டங்கள் மற்றும் உடனடி நடவடிக்கைகள் குறித்து இக்கூட்டத்தில் கவனம் செலுத்தப்பட்டதாக அவர் கூறினார்.
நாடு முழுவதும் அத்தியாவசியப் பொருட்களின் விலைகளைக் கட்டுப்படுத்தவும், அதிகப்படியான லாபம் ஈட்டுவதைத் தடுக்கவும் உள்நாட்டு வர்த்தகம் மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சு மேற்கொண்ட அமலாக்க நடவடிக்கைகளின் முன்னேற்றம் குறித்தும் நான் ஆய்வு செய்தேன், என்று அவர் தனது முகநூல் பதிவில் தெரிவித்துள்ளார்.
பணவீக்க அழுத்தங்களை உடனுக்குடனும் திறம்படவும் கையாள்வதை உறுதி செய்வதற்காக, உலகளாவிய புவிசார் அரசியல் மாற்றங்கள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலை மற்றும் விநியோகத்தில் அவற்றின் தாக்கம் ஆகியவற்றை அரசாங்கம் தொடர்ந்து கண்காணிக்கும் என்றும் அன்வார் கூறினார்.
-fmt























