மானியமற்ற எரிபொருட்களின் விலைகள் அனைத்தும் குறையவுள்ளன.

மானியமற்ற RON95 பெட்ரோலின் விலை லிட்டருக்கு 40 சென் குறைக்கப்பட்டு ரிம 3.87 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு 25 சென் குறைக்கப்பட்டு ரிம 4.87 ஆகவும் விற்பனை செய்யப்படும்.

அனைத்து மானியமற்ற எரிபொருட்களின் விலைகளும் நாளை முதல் குறைக்கப்படுவதாக நிதி அமைச்சு இன்று மாலை அறிவித்துள்ளது.

மானியமற்ற RON95 பெட்ரோல் மற்றும் டீசலின் விலைகள் முறையே 40 சென் மற்றும் 25 சென் குறைக்கப்பட்டு, லிட்டருக்கு ரிம 3.87 மற்றும் ரிம 4.87 என விற்பனை செய்யப்படும்.

RON97 பெட்ரோலின் விலை 50 சென் குறைக்கப்பட்டு, லிட்டருக்கு ரிம 4.20 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

BUDI95 திட்டத்தின் கீழ் வழங்கப்படும் RON95 பெட்ரோல் தொடர்ந்து லிட்டருக்கு ரிம 1.99க்கும், BUDI Diesel திட்டத்தின் கீழ் வழங்கப்படும் டீசல் லிட்டருக்கு ரிம 2.10க்கும் விற்பனை செய்யப்படும்.

மானிய விலையிலான பெட்ரோல் கட்டுப்பாட்டுத் திட்டத்தின் (SKPS) கீழ் வழங்கப்படும் பெட்ரோல் லிட்டருக்கு ரிம 2.05 என்ற விலையிலும், மானிய விலையிலான டீசல் கட்டுப்பாட்டுத் திட்டத்தின் (SKDS) கீழ் வழங்கப்படும் டீசல் லிட்டருக்கு ரிம 2.15 என்ற விலையிலும் தொடர்ந்து விற்பனை செய்யப்படும்.

இந்த விலைகள் நவம்பர் 18ஆம் தேதி வரை அமலில் இருக்கும்.

உலகளாவிய நிச்சயமற்ற சூழ்நிலைகளால் பொதுமக்களும் வர்த்தகத் துறையினரும் பாதிக்கப்படுவதைத் தடுக்கும் வகையில், மத்திய அரசு தொடர்ந்து மானியங்களை வழங்கிப் பாதுகாக்கும் என்று அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

“வாழ்க்கைச் செலவு அதிகரிப்பின் சுமையைக் குறைக்க, அடுத்த ஆண்டு எரிபொருள் மானியங்களுக்காக ரிம 40 பில்லியனைச் செலவிட அரசாங்கம் எதிர்பார்க்கிறது. இது 2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது,” என்றும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.