வீட்டுக் காவலில் வைப்பது தொடர்பான நிபந்தனைகள் குறித்து தனக்குத் தெளிவாகத் தெரியவில்லை – நஜிப்பின் வழக்கறிஞர்

இருப்பினும், முன்னாள் பிரதமரைப் பார்ப்பதற்கு வருகையாளர்கள் அனுமதி கோரி விண்ணப்பிக்க வேண்டும் என்று ஷஃபி அப்துல்லா நம்புகிறார்.

முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக்கின் வீட்டுக்காவல் நிபந்தனைகள் அல்லது விதிகள் இன்னும் தம்மிடம் பகிரப்படவில்லை என்று வழக்கறிஞர் ஷஃபி அப்துல்லா இன்று செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

மலேசிய மேனாள் பிரதமர் நஜீப் ரசாக்கின் வீட்டுக்காவல் நிபந்தனைகள் தொடர்பாக அவரது வழக்கறிஞர் ஷஃபி அப்துல்லா கருத்து தெரிவித்துள்ளார்.

நஜீப் ரசாக்கிற்கு வழங்கப்பட்டுள்ள வீட்டுக்காவல் நிபந்தனைகள், குறிப்பாக அவரது குடும்ப உறுப்பினர்கள் அவருடன் இணைந்து வாழ அனுமதிக்கப்படுவார்களா என்பது குறித்து தமக்கு உறுதியாகத் தெரியவில்லை என்று அவரது வழக்கறிஞர் முகமது ஷஃபி அப்துல்லா தெரிவித்துள்ளார்.

வீட்டுக்காவலின் முழுமையான விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் இதுவரை தமக்கு வழங்கப்படவில்லை என்று ஷஃபி கூறினார்.

இங்குள்ள உயர்நீதிமன்ற வளாகத்திற்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய அவர், “எங்களுக்கு இது பற்றி முழுமையாகத் தெரியவில்லை. எங்களுக்கு எதுவும் தெரியாது,” என்று கூறினார்.

இருப்பினும்,  முன்னால் அம்னோ (UMNO) தலைவரான நஜீப்பைச் சந்திக்க வரும் பார்வையாளர்கள், சந்திப்பிற்கான முன்அனுமதி பெற வேண்டி இருக்கும் என்று ஷஃபி கருதுகிறார்.

முன்னதாக இன்று, நஜீப் ரிம 50 மில்லியன் (RM50 million) அபராதத்தைச் செலுத்தியவுடன் அவரை விடுவிக்க வேண்டும் என பிறப்பித்திருந்த முந்தைய உத்தரவை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது. மாறாக, எஸ்.ஆர்.சி இன்டர்நேஷனல் (SRC International) வழக்கில் நஜீப்பின் எஞ்சிய சிறைத்தண்டனையை வீட்டுக்காவலில் அனுபவிக்க அனுமதித்து புதிய உத்தரவைப் பிறப்பித்தது.

எஸ்.ஆர்.சி இன்டர்நேஷனல் நிதியில் ரிம 42 மில்லியன் சம்பந்தப்பட்ட அதிகார துஷ்பிரயோகம், நம்பிக்கை மோசடி மற்றும் பணமோசடி ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் நஜீப்பின் தண்டனையை கூட்டாட்சி நீதிமன்றம் உறுதி செய்ததை அடுத்து, ஆகஸ்ட் 2022-இல் அவர் சிறையில் அடைக்கப்பட்டார். அவருக்கு 12 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் ரிம 210 மில்லியன் அபராதமும் விதிக்கப்பட்டிருந்தது.

ஜனவரி 2024-இல், அப்போதைய மாமன்னர் அல்-சுல்தான் அப்துல்லா சுல்தான் அகமத் ஷா, பேரரசரின் மன்னிப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக நஜீப்பின் சிறைத்தண்டனையை பாதியாகக் குறைத்ததுடன், அவரது அபராதத்தையும் ரிம 50 மில்லியனாகக் குறைத்தார்.

இந்த ஆண்டு செப்டம்பரில், தற்போதைய மாமன்னர் சுல்தான் இப்ராஹிம், நஜீப்பிற்கு மேலும் ஒரு நிபந்தனைக்குட்பட்ட மன்னிப்பை வழங்கினார். அதன்படி, ரிம 50 மில்லியன் அபராதத்தைச் செலுத்துவதோடு பிற நிபந்தனைகளுக்கு உட்பட்டு, ஆகஸ்ட் 23, 2028 வரை தனது எஞ்சிய தண்டனைக்காலத்தை வீட்டுக்காவலில் அனுபவிக்க அவருக்கு அனுமதி அளிக்கப்பட்டது.