தீபாவளியை முன்னிட்டு கல்லூரிகளில் இணையவழி வகுப்புகள்

தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, நவம்பர் 5 முதல் 13 வரை அரசுப் பல்கலைக்கழகங்கள், பாலிடெக்னிக்குகள் மற்றும் சமூகக் கல்லூரிகளில் இணையவழி அல்லது கலப்புமுறை வகுப்புகளை நடத்த உயர்கல்வி அமைச்சு அனுமதி வழங்கியுள்ளது.

இதன் மூலம் இந்து மாணவர்களும் விரிவுரையாளர்களும் தங்கள் சொந்த ஊர்களுக்குச் சென்று குடும்பத்தினருடன் தீபாவளியைக் கொண்டாட வசதியாக இருக்கும். இந்த ஏற்பாடு அந்தந்தக் கல்வி நிறுவனங்களின் பாடத்திட்டத் தேவைகளுக்கு உட்பட்டது.