அரசியல் முக்கியத்துவத்தை பெர்சத்து இழந்துவிட்டதாகத் தெரிகிறது – கியான் மிங்

சனிக்கிழமை நடைபெற்ற மலாக்கா மாநிலத் தேர்தல் முடிவுகளின் அடிப்படையில், பெர்சத்து கட்சி தனது அரசியல் முக்கியத்துவத்தை இழந்துவிட்டதாகத் தெரிகிறது என்று டிஏபி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஓங் கியான் மிங்  தெரிவித்துள்ளார்.

தேர்தல் முடிவுகள் குறித்த தனது ஆய்வில், 2021-ஆம் ஆண்டுத் தேர்தலில் பெர்சத்து வெற்றி பெற்ற சுங்கை உடாங் மற்றும் பெம்பான் ஆகிய இரண்டு மாநிலச் சட்டமன்றத் தொகுதிகளையும் இம்முறை அக்கட்சி இழந்துவிட்டதாகவும், அவ்விரு தொகுதிகளிலும் முறையே 9.7 விழுக்காடு மற்றும் 11.5 விழுக்காடு வாக்குகளை மட்டுமே பெற்றுள்ளதாகவும் ஓங் சுட்டிக்காட்டியுள்ளார்.

அக்கட்சி தனது வைப்புத் தொகையைத் தக்கவைத்துக் கொண்ட ஒரே தொகுதி பந்தாய் குண்டோர் (Pantai Kundor) மட்டுமே. அங்கு, அத்தொகுதியைப் பூர்வீகமாகக் கொண்டவரும், சுகாதார அமைச்சின் ஓய்வுபெற்ற மூத்த அதிகாரியுமான அஸ்மா சமாத் வேட்பாளராக நிறுத்தப்பட்டிருந்தார், என்று அவர் கூறினார்.

எதிர்வரும் பொதுத் தேர்தலை முன்னிட்டு, பெர்சத்து கட்சியுடன் தேர்தல் கூட்டணி அமைத்துக் கொள்வதற்கான காரணத்தை இது பக்காத்தான் ஹராப்பானுக்கு வெகுவாகக் குறைத்துவிடும், என்று அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

அதோடு ஒப்பிடுகையில், பெர்சாமா கட்சி சிறப்பான போட்டியை வெளிப்படுத்தி, பெம்பான் தொகுதியில் 22.5 விழுக்காடு மக்கள் வாக்குகளைப் பெற முடிந்தது என்றும், இது பெர்சத்துவை விட பெர்சாமாவை விரும்பும் பக்காத்தான் ஹராப்பான் வாக்காளர்களைத் தன் பக்கம் ஈர்க்க முடியும் என்பதைக் காட்டுவதாகவும் ஓங் கூறினார்.

பெர்சாமா தலைவர் ரஃபிசி ரம்லி, டிஏபி உள்ளிட்ட பக்காத்தான் ஹராப்பான் கூட்டணிக்கு எதிராகத் தாக்குதல்களைத் தொடுப்பதற்குத் தேர்தல் பிரசார மேடையை முழுமையாகப் பயன்படுத்திக் கொண்டார்.

தேசிய விவகாரங்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கும் பொதுத் தேர்தலில், பக்காத்தான் ஹராப்பான் கூட்டணியிடமிருந்து கூடுதல் வாக்குகளைப் பெறுவதற்குப் பெர்சாமா கட்சி தன்னை ஒரு வலுவான நிலையில் நிலைநிறுத்திக் கொண்டுள்ளது, என்று அவர் கூறினார்.

‘கெலுவார் செகெஜாப்’ வலையொலியின் அண்மைய அத்தியாயத்தில் பேசிய ஓங், பிகேஆர் கட்சியிலிருந்து பிரிந்து உருவான பெர்சாமா கட்சி, எதிர்வரும் 16-ஆவது பொதுத் தேர்தலில் மலாய்க்காரர் அல்லாத வாக்காளர்களின் அதிகப்படியான வாக்குப்பதிவால் பயனடையக்கூடும் என்று தெரிவித்திருந்தார்.

பெர்சாமா போன்ற பிற கட்சிகளை ஆதரிக்கத் தாங்கள் தயாராக இருக்கிறோம் என்ற செய்தியைப் பக்காத்தான் ஹராப்பானுக்கு உணர்த்துவதற்காக, கிள்ளான் பள்ளத்தாக்கு வாக்காளர்கள் பெருந்திரளாக வெளியே வந்து வாக்களிக்கக் கூடும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

தேசிய விவகாரங்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கும் பொதுத் தேர்தலில், பக்காத்தான் ஹராப்பான் கூட்டணியிடமிருந்து கூடுதல் வாக்குகளைப் பெறுவதற்குப் பெர்சாமா கட்சி தன்னை ஒரு வலுவான நிலையில் நிலைநிறுத்திக் கொண்டுள்ளது.

‘கெலுவார் செகெஜாப்’ வலையொலியின் அண்மைய அத்தியாயத்தில் பேசிய ஓங், பிகேஆர். கட்சியிலிருந்து பிரிந்து உருவான பெர்சாமா கட்சி, எதிர்வரும் 16-ஆவது பொதுத் தேர்தலில் மலாய்க்காரர் அல்லாத வாக்காளர்களின் அதிகப்படியான வாக்குப்பதிவால் பயனடையக்கூடும் என்று தெரிவித்திருந்தார்.

பெர்சாமா போன்ற மாற்றுக் கட்சிகளை ஆதரிக்கத் தாங்கள் தயாராக இருக்கிறோம் என்ற செய்தியைப் பக்காத்தான் ஹராப்பானுக்கு உணர்த்துவதற்காக, கிள்ளான் பள்ளத்தாக்கு வாக்காளர்கள் “பெருந்திரளாக வெளியே வந்து வாக்களிக்கக் கூடும்” என்றும் அவர் குறிப்பிட்டார்.

பெம்பான் தொகுதியில் நடைபெற்ற நான்கு முனைப் போட்டியில், வாவாசான்  கட்சியின் டாக்டர் யாட்சில் யாகூப் 11,881 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்ற நிலையில், பெர்சத்து  கட்சியின் ரபாயி அப் ஹமீத் 2,109 வாக்குகளை மட்டுமே பெற்றுத் தோல்வியடைந்தார். பெர்சாமா கட்சியின் சொலெஹின் சாலே 4,140 வாக்குகளையும், சுயேச்சை வேட்பாளர் அப்துல் ஹலீம் சையத் 274 வாக்குகளையும் பெற்றனர்.

பந்தாய் குண்டோர் தொகுதியில், அம்னோவின் துமினா காடி 8,864 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்ற நிலையில், பெர்சத்துவின் அஸ்மா 6,112 வாக்குகளைப் பெற்றுத் தோல்வியைத் தழுவினார்.

 

 

 

-fmt