செயலில் உள்ள பாதிப்புகளின் அடிப்படையில் 16 சிவப்பு மண்டலங்கள் உள்ளன

மலேசியாவில் செயலில் உள்ள கோவிட்-19 பாதிப்புகளின் எண்ணிக்கையை மாவட்டங்களின் அடிப்படையில் சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ளது. செயலில் உள்ள பாதிப்புகளால் வகைப்படுத்தப்படும் போது தற்போது 16 சிவப்பு மண்டல பகுதிகள் உள்ளன என்பதை வெளிப்படுத்தியுள்ளது. முன்னதாக, மொத்த கோவிட்-19 நேர்மறை பாதிப்புகளின் அடிப்படையிலான சிவப்பு மண்டலத்தை மட்டுமே சுகாதார அமைச்சு…

குறை கூறுவதை நிறுத்தி விட்டு, தொற்றுநோயை கையாளும் முயற்சியில் ஈடுபட…

கோவிட்-19 பாதிப்புக்கு தீர்வு காண PH அரசாங்கத்தின் நடவடிக்கை குறித்து பேசுகையில் முன்னாள் சுகாதார அமைச்சர் டாக்டர் சுல்கிப்லி அகமட், "ஷெரட்டன் நகர்வு” நடவடிக்கைகளும், பிரதமர் முகிதீன் யாசின் தனது அமைச்சரவையை நியமிக்க எடுத்து கொண்ட நேரமும், தொற்றுநோயை கையாளும் கவனத்தை திசைத் திருப்பிவிட்டது என்று கூறியுள்ளார். முன்னாள்…

சபா மருத்துவக் கிளஸ்டர்: மூன்று மருத்துவமனைகளைத் தாக்கியுள்ளது, 31 பேர்…

சபாவில் உள்ள மருத்துவ ஊழியர்களின் கிளஸ்டர் மூன்று மருத்துவமனைகளை பாதித்துள்ளது. இதனால் இதுவரை 31 நோய்த்தொற்றுகள் உள்ளன என அறியப்பட்டுள்ளது. குயின் எலிசபெத் 2 மருத்துவமனை (Queen Elizabeth 2 Hospital), லிகாஸ் பெண்கள் மற்றும் குழந்தைகள் மருத்துவமனை (Likas Women and Children's Hospital) மற்றும் கெனிங்காவ்…

“அந்நிய தொழிலாளர்கள் மீது பெரிய அளவிலான பிணிப்பாய்வு பரிசோதனையைத் தொடங்குவோம்”…

சுகாதார அமைச்சு நாட்டிலுள்ள வெளிநாட்டு சமூகத்தின் மீது பெரிய அளவிலான கோவிட்-19 சோதனையை மேற்கொள்ளும் என்று கூறியுள்ளது. "நாங்கள் சிங்கப்பூரிடமிருந்து கற்றுக்கொள்கிறோம்... நம் நாட்டு அந்நிய தொழிலாளர்கள் மீது பெரிய அளவிலான பிணிப்பாய்வு பரிசோதனையைத் தொடங்குவோம்" என்று சுகாதார இயக்குநர் ஜெனரல் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா கூறினார்.…

பாக்காத்தான் அரசு தப்லீக் கிளஸ்டரைத் தடுக்கத் தவறிவிட்டது – ஆதாம்…

மலேசியாவில் கோவிட்-19 பாதிப்பின் இரண்டாவது அலைக்கு காரணமாக இருந்த கோலாலம்பூர் ஸ்ரீ பெட்டாலிங் மசூதியின் தப்லீக் கூட்டத்தை பாக்காத்தான் அரசாங்கம் கட்டுப்படுத்த தவறிவிட்டது என்று சுகாதார அமைச்சர் டாக்டர் ஆதாம் பாபா கூறினார். அதைக் குறைக்க முடிந்திருந்தால், மலேசியா ஒரு சிறிய எண்ணிக்கையிலான தொற்றுநோய்களை மட்டுமே எதிர்கொண்டிருந்திருக்கும் என்று…

கோவிட்-19: புதிய நோய்த்தொற்றுகள் 54 ஆக குறைந்தது, 3,000க்கும் மேற்பட்டவர்கள்…

நாட்டில் புதிய கோவிட்-19 நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை குறைந்து இன்று 54 மட்டுமே பதிவாகியுள்ளன. மொத்த பாதிப்புகள் இப்போது 5,305 ஆக உள்ளன. இதற்கிடையில், இன்று 135 நோயாளிகள் மருத்துவமனையிலிருந்து வெளியேற்றப்பட்டனர். இது மொத்த குணமடைந்தவர்களின் எண்ணிக்கையை 3,102 அல்லது மொத்த பாதிப்புகளில் 58.5 சதவீதமாகக் கொண்டு வந்துள்ளது. இன்று…

காலீத்: மற்ற நாடுகளில், நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவை மீறும் அமைச்சர்கள்…

நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவை மீறிய துணை சுகாதார அமைச்சர் நூர் அஸ்மி கசாலி, ஒரு சிறந்த உதாரணத்தை வெளிபடுத்த தவறிவிட்டதாக அம்னோ துணைத் தலைவர் முகமட் காலீத் நோர்டின் விமர்சித்துள்ளார். மற்ற நாடுகளில் இதுபோன்ற விதிகளை மீறிய அரசாங்க தலைவர்கள் ராஜினாமா செய்துள்ளதாக அவர் கூறினார். "அதுவும் ஒரு…

நடமாட்டக் கட்டுபாடு உத்தரவை மீறும் அரசியல் பிரமுகர்கள் மீது நடவடிக்கை…

நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவை மீறுவதன் மூலம் யாரும் சட்டத்தை மீற முடியாது என்று பாதுகாப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி கூறியுள்ளார். கூட்டம் கூடி, நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவை மீறிய "உயர்மட்ட நபர்கள்" பற்றி கேட்டபோது அவர் இவ்வாறு கூறினார். "நான் குறிப்பிட்ட படி, யாரும் சட்டத்தை மீற முடியாது.…

எதிர்க்கட்சியை எதிர்கொள்ள முகிதீன் பயப்படுகிறார் – தெரசா கோக்

முதல் நாடாளுமன்ற அமர்வு ஒரு நாள் மட்டுமே நடைபெறும் என்று மின்னஞ்சல் அறிவிப்பைப் பெற்ற எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர் என்று செபுத்தே எம்.பி. தெரசா கோக் தெரிவித்தார். இதுவரை 86 இறப்புகளைப் பதிவு செய்துள்ள கோவிட்-19 பரவலை எதிர்த்து நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவை அமல்படுத்தியதால், இந்த அமர்வு மார்ச்…

சிவப்பு மண்டலமாக வகைப்படுத்தப்பட்ட பகுதிகள் குறைந்து வருகின்றன

பாதிப்பு தொடங்கியதிலிருந்து 40க்கும் மேற்பட்ட கோவிட்-19 பாதிப்புகளை பதிவு செய்ததற்காக சுமார் 28 மாவட்டங்கள் சிவப்பு மண்டல பகுதிகளாக அறிவிக்கப்பட்டன. இப்போது இதில் குறைந்தது 11 பகுதிகளில் பல நோயாளிகள் குணமடைந்துள்ளனர். சுகாதார அமைச்சினால் தினசரி வெளியிடப்பட்ட தரவுகளின் படி, நான்கு சிவப்பு மண்டலங்களில், 10 அல்லது அதற்கும்…

திறப்பதா இல்லையா? பட்டறைகள் மற்றும் பாரம்பரிய மருந்துக் கடைகளின் குழப்பம்

நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவின் போது விலக்கு வழங்கப்பட்ட போதிலும், பெரும்பாலான வாகன பட்டறை நடத்துனர்கள் கடையைத் திறக்க இன்னும் தயாராக இல்லை என்றே தெரிகிறது. தங்கள் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டிருந்தால், கோவிட்-19 சிகிச்சை செலவுகளை முதலாளிகள் ஏற்க வேண்டும் என்ற அரசாங்கத்தின் வழியுறுத்தலினால் குழப்பமடைந்துள்ளதாக தெரிவித்துள்ளார் மலேசிய கார் பட்டறை…

கோவிட்-19: புதிய பாதிப்புகள் 69 மட்டுமே!

மார்ச் 18 அன்று நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவு நடைமுறைப்படுத்தப்பட்டதிலிருந்து, இன்று 69 பாதிப்புகள் என மிகக் குறைவான கோவிட்-19 தினசரி பாதிப்புகளை பதிவாக்கி மலேசியா மீண்டும் சாதகமான வளர்ச்சியைக் காட்டியுள்ளது. குணமடைந்த மொத்த தினசரி பாதிப்புகளின் எண்ணிக்கை 201 ஆகும். இது இன்று பதிவு செய்யப்பட்டுள்ள புதிய பாதிப்புகளை…

‘எதிர்க்கட்சி தொகுதிகளுக்கு உணவு கூடைகள் எங்கே?’

எதிர்க்கட்சி நாடாளுமன்றத் தொகுதி மக்களுக்கு வாக்குறுதியளிக்கப்பட்ட உணவு கூடைகளை விநியோகிப்பதை விரைவுபடுத்த வேண்டும் என்று மகளிர், குடும்ப மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சர் ரினா ஹருனை கேட்டுக் கொண்டுள்ளார் செகாம்பூட் நாடாளுமன்ற உறுப்பினர் ஹன்னா யோஹ். “நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவின் மூன்றாவது மற்றும் நான்காவது வாரங்களிலும், சமூக நலத்துறையின்…

SPAN தலைவர் பதவியிலிருந்து சார்லஸ் சாண்டியாகோ நீக்கப்பட்டார்

தேசிய நீர் சேவை ஆணையத்தின் Suruhanjaya Perkhidmatan Air Nasional (SPAN) தலைவராக சார்லஸ் சாண்டியாகோவின் சேவை நிறுத்தப்பட்டது. மற்ற அனைத்து ஆணையர்களின் சேவைகளும் நிறுத்தப்பட்டன என்று டிஏபி எம்.பி. சார்லஸ் சாண்டியாகோ கூறினார். அவரின் பதவி நீக்கம், ஏப்ரல் 10 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வந்ததாக…

ஏப்ரல் 23 அன்று ரமலான் பிறை பார்க்கப்படும்

மலேசியா முழுவதும் முஸ்லிம்களின் நோம்பின் தொடக்கத்தைக் குறிக்கும் வகையில் ரமலான் பிறை ஏப்ரல் 23 வியாழக்கிழமை அன்று பார்க்கப்படும். இது, தேர்ந்தெடுக்கப்பட்ட 15 பகுதிகளில் நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவு அமலாக்கத்தில் உள்ள போது பார்க்கப்படும். அதே இரவில், வானொலி மற்றும் தொலைக்காட்சியில், நோன்பைத் தொடங்கும் தேதியை அறிவிக்கப்படும் என்றும்…

வோங் கா வோ Seda-விலிருந்து நீக்கப்பட்டார்

கிழக்கு பேராக் நாடாளுமன்ற உறுப்பினர் வோங் கா வோ, தேசிய கூட்டணியின் (பி.என்.) புதிய அரசாங்கத்தால் நிலையான எரிசக்தி மேம்பாட்டு ஆணையத்தின் (செடா) Pihak Berkuasa Pembangunan Tenaga Lestari (Seda) தலைவர் பதவியில் இருந்து அதிகாரப்பூர்வமாக நீக்கப்பட்டுள்ளார். "எரிசக்தி மற்றும் இயற்கை வள அமைச்சரின் அலுவலகத்தில் இருந்து…

கோவிட்-19: கோத்தா கினாபாலு சமீபத்திய சிவப்பு மண்டல பகுதியாக வகைப்படுத்தப்பட்டது

சபாவின் கோத்தா கினாபாலு மாவட்டம், 28வது கோவிட்-19 சிவப்பு மண்டல பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்றைய நிலவரப்படி, கோத்தா கினாபாலுவில் 42 நேர்மறையான கோவிட்-19 பாதிப்புகள் பதிவாகியுள்ளன என்று சுகாதார அமைச்சு கூறியுள்ளது. சபாவில் உள்ள 42 கோவிட்-19 நோயாளிகளில் இருவர் இறந்துவிட்டதாகவும், 18 பேர் குணமடைந்துள்ளதாகவும் சபா சுகாதார…

1.2 மில்லியன் பயனர்களுக்கு நீர் விநியோக தடை

கிள்ளான் பள்ளத்தாக்கின் ஏழு பகுதிகளில் 1.2 மில்லியன் பயனர்களை பாதிக்கும் சுமார் 1,292 பகுதிகளில் தற்போது திட்டமிடப்படாத நீர் விநியோக தடங்கல் ஏற்பட்டுள்ளது என்று சிலாங்கூர் மாநில நீர் விநியோக நிறுவனம் (Pengurusan Air Selangor) இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. பிரதான நீர்த்தேக்கங்களில் குறைந்த அளவு இருப்பதால்…

கோவிட்-19: கெடா, பெர்லிஸ் மற்றும் பினாங்கு ஆகியவை பச்சை மண்டல…

புதிய பாதிப்புகள் எதுவும் பதிவு செய்யப்படாவிட்டால், தீபகற்பத்தின் மூன்று வடக்கு மாநிலங்கள் கோவிட்-19 இன் பச்சை மண்டலமாக மாறக்கூடும் என்று சுகாதார இயக்குநர் ஜெனரல் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தார். இதற்கு, கெடா, பெர்லிஸ் மற்றும் பினாங்கு ஆகியவை 14 நாட்களுக்கு எந்தவொரு நேர்மறையான பாதிப்பிலிருந்தும் விடுபட…

நூர் ஹிஷாம்: இந்த அங்கீகாரம் நாட்டுக்கு சொந்தமானது

சீனா குளோபல் டிவி நெட்வொர்க் (சிஜிடிஎன்)/China Global TV Network (CGTN) தனக்கு அளித்த பாராட்டுகளை, கோவிட்-19 பாதிப்பை சமாளிப்பதற்கான நாட்டின் கூட்டு முயற்சிகளின் பிரதிபலிப்பு என்று விவரித்துள்ளார் சுகாதார இயக்குநர் ஜெனரல் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா. "இந்த அங்கீகாரம் எனது வேலைக்கு கிடைத்தது அல்ல. இது…

நிபந்தனைகளை மீறிய 4 நிறுவனங்களின் அங்கீகாரத்தை ரத்து செய்தது MITI

இன்றுவரை, அனைத்துலக வாணிபம் மற்றும் தொழில்துறை அமைச்சு (MITI) நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ள நிபந்தனைகளை மீறுவதாகக் கண்டறியப்பட்ட நான்கு நிறுவனங்களுக்கு எதிரான ஒப்புதல்களை ரத்து செய்துள்ளது. MITI விதித்த நிபந்தனைகளை மீறியதாக புகார் அளிக்கப்பட்ட சுமார் 35 நிறுவனங்களுக்கு எதிராக விசாரணை நடந்து வருவதாக அதன் அமைச்சர்…

பொருளாதாரம் தொடர்பான முடிவுகள் சுகாதார அமைச்சு ஈடுபாட்டுடன் எடுக்கப்படுகின்றன –…

நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவின் போது, சேவைகள் இயங்குவது உட்பட, எடுக்கப்பட்ட அனைத்து பொருளாதார முடிவுகளும், சுகாதார அமைச்சின் (MOH) ஈடுபாட்டுடன் எடுக்கப்படுகின்றன என்று அனைத்துலக வாணிபம் மற்றும் தொழில்துறை அமைச்சர் அஸ்மின் அலி கூறினார். இரண்டு வாரங்களுக்கு முன்பு நடைபெற்ற, ‘பொருளாதாரம் மற்றும் தொழிலாளர் சந்தையில் COVID-19 பாதிப்பு’…

LRT மற்றும் MRT நிலையங்களில் போலிஸ், பாதுகாப்பு படை வீரர்கள்…

எல்.ஆர்.டி மற்றும் எம்.ஆர்.டி நிலையங்களில் கூடல் இடைவெளியை கட்டுப்படுத்த, அமலாக்கப் பணியாளர்களை பணியில் அமர்த்த, மலேசிய காவல்துறையுடன் கலந்துரையாடுவார் என்றார் பாதுகாப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாகோப். பல பொது போக்குவரத்து நிலையங்களில் ஏற்படும் நெரிசல் குறித்து தான் அறிவதாக அவர் கூறினார். "எல்.ஆர்.டி மற்றும் எம்.ஆர்.டி நிலையங்களில்…