அம்னோ உறுப்பினர்களைக் கொண்டு மட்டும் தேர்தல் வெற்றியை உறுதிப்படுத்த முடியாது

அம்னோ, 3.4 மில்லியன் பேரைக் கட்சி உறுப்பினர்களாக்கி இருப்பதை வைத்து பொதுத் தேர்தலில் வெற்றி உறுதி என்று அதிகப்படி நம்பிக்கை கொண்டுவிடக்கூடாது. தேர்தல்  வெற்றிக்கு உறுப்பினர்தொகை பெரிதாக இருப்பது மட்டும் போதாது  என்று அம்னோ தகவல் பிரிவுத் தலைவர் அஹ்மட் மஸ்லான் கூறினார். “(ஏனென்றால்) 12மில்லியன் வாக்காளரில் நான்கில்…

பக்காத்தான் வெளிநடப்பு; மசோதாமீதான வாக்களிப்பில் கலந்துகொள்ளாது

அமைதிப் பேரணி சட்டமுன்வரைவு இன்று விவாதத்துக்கு வந்தபோது பக்காத்தன் ரக்யாட் எம்பிகள் மக்களவையிலிருந்து வெளிநடப்புச் செய்தனர். அவர்கள் அதன்மீதான வாக்களிப்பிலும் கலந்துகொள்ள மாட்டார்கள். ஒரு முக்கியமான சட்டமுன்வரைவு மீதான விவாதத்தின்போது அவைத் தலைவர் -கட்சிக்கு ஒருவராக- மூன்று பக்காத்தான் ரக்யாட் எம்பிகளுக்கு மட்டுமே பேசுவதற்கு அனுமதி அளித்ததை அவர்களால்…

உரிமைக்கான ஊர்வலத்தில் ஆயிரத்துக்கு மேற்பட்டோர் கலந்துகொண்டனர்

மலேசிய வழக்குரைஞர் மன்ற உறுப்பினர்களும் ஆதரவாளர்களும், இன்றிரவு மக்களவையில் வாக்களிப்புக்கு விடப்படும் என்று எதிர்பார்க்கப்படும் அமைதிப் பேரணி மசோதாவுக்கு எதிர்ப்புத் தெரிவிப்பதற்காக இன்று நாடாளுமன்றத்தை நோக்கி அணிவகுத்துச் சென்றார்கள். ஆயிரத்துக்கு மேற்பட்டோர் கலந்துகொண்ட அவ்வூர்வலம் பகல் 12.19க்குத் தொடங்கியது. வழக்குரைஞர்கள் ஊர்வலம் செல்லும் வழியில் கருப்பு உடை அணிந்த…

மனித உரிமை அமைப்பு: வழக்குரைஞர் பேரணியை அனுமதிப்பீர்

பன்னாட்டு மனித உரிமை அமைப்பு ஒன்று, இன்று வழக்குரைஞர்கள் நடத்தத் திட்டமிட்டுள்ள ஊர்வலம் தங்குதடையின்றி நடைபெற அனுமதிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது. நியு யோர்கில் தளம்கொண்டுள்ள அந்த மனித உரிமை கண்காணிப்பு அமைப்பு, வழக்குரைஞர்கள் “உரிமைக்கான ஊர்வலம்”  வழி சில கருத்துகளைத் தெரியப்படுத்த விரும்புகிறார்கள் என்று கூறியது. “அமைதிப்…

அரசாங்கம் பொதுக் கூட்ட மசோதாவுக்கு திருத்தங்களை முன்மொழிகிறது

2011ம் ஆண்டுக்கான அமைதியான பொதுக் கூட்ட மசோதாவுக்கான திருத்தங்களை இன்று பிற்பகல் சமர்பிக்கும். அந்த மசோதா மீது குழு நிலையில் விவாதங்கள் நிகழும் போது அவை தாக்கல் செய்யப்படும். அந்த மசோதாவில் திருத்தங்கள் செய்யப்படும் என சட்டத்துறைக்குப் பொறுப்பான அமைச்சர் நஸ்ரி அப்துல் அஜிஸ் கடந்த சனிக்கிழமை அறிவித்திருந்தார்.…

கேஎல் போலீஸ்: ‘உரிமைக்கான ஊர்வலம்’ சட்டவிரோதமானது

மலேசிய வழக்குரைஞர் மன்றம் இன்று ஏற்பாடு செய்துள்ள சட்டவிரோத ‘உரிமைக்கான ஊர்வல’த்தில் கலந்துகொள்வோர்மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கோலாலம்பூர் போலீஸ் தலைவர் முகம்மட் சாலே எச்சரித்துள்ளார். அதற்கு போலீஸ் சட்டத்தின்கீழ் அனுமதி பெற வேண்டும். வழக்குரைஞர் மன்றம் அனுமதிக்கு விண்ணப்பம் செய்யவில்லை என்று சாலே தெரிவித்ததாக சீன நாளேடான…

பூமலையில் வழக்குரைஞர்கள் குவிகிறார்கள்

மலேசிய வழக்குரைஞர் மன்ற உறுப்பினர்களும் ஆதரவாளர்களும், இன்றிரவு மக்களவையில் வாக்களிப்புக்கு விடப்படும் என்று எதிர்பார்க்கப்படும் அமைதிப் பேரணி மசோதாவுக்கு எதிர்ப்புத் தெரிவிப்பதற்காக பூமலையில் குவியத் தொடங்கியுள்ளனர். Read More

அம்னோ பொதுப் பேரவை இன்று பிற்பகல் தலைவர் செய்தியுடன் தொடங்குகிறது

2011ம் ஆண்டு அம்னோ பொதுப் பேரவை, இன்று பிற்பகல் பேரவைக்கு முந்திய மன்றக் கூட்டத்துடன் தொடங்குகிறது. அந்தக் கூட்டத்தில் கட்சித் தலைவர் நஜிப் அப்துல் ரசாக் பேராளர்களுக்கு முக்கியமான செய்தியை வழங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 13வது பொதுத் தேர்தலுக்கு அம்னோ தயாராவதற்கு மிக முக்கியமான செய்தியாக தலைவர் உரை…

குழப்பம் ஏதுமில்லை, பிரதமருடைய நோக்கம் தெளிவானது

'போலீசாருக்கு விருப்பம் போல் முடிவு செய்யும் உரிமை, மக்கள் உரிமை- அந்த இரண்டு கோட்பாடுகளில் எதற்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் ?' அமைதியான பொதுக் கூட்ட மசோதா மீது எழுந்த 'குழப்பத்தை' நஜிப் தெளிவுபடுத்துகிறார் மஞ்சித் பாட்டியா: பிரதமர் நஜிப் ரசாக் சொல்கிறார்: நாங்கள் உலகம் முழுவதையும் சார்ந்த…

“ஆக்கிரமிப்பு” இயக்கம் நாடாளுமன்றத்தை தட்டுகிறது

உலகளவிலான ஆக்கிரமிப்பு இயக்கத்தை நாடாளுமன்றத்தின் வாசலுக்குக் கொண்டுவர ஓர் ஆர்வலர்கள் குழு திட்டமிட்டுள்ளது. நாளை (நவம்பர் 29) தொடங்கவிருக்கும் அமைதியாக கூடுதல் சட்ட மசோதா 2011 மீதான விவாதத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்பது அதன் நோக்கமாகும். நாடாளுமன்ற ஆக்கிரமிப்பு இயக்கம் என்று பெயரிடப்பட்டுள்ள அக்குழுவினர், மக்களை நாளை (செவ்வாய்க்கிழமை) காலை…

மகாதிர்: அரேபிய வசந்தம் மலேசிய கரையை வந்தடையாது

மத்தியக் கிழக்கு பாணியிலான சமீபகால கிளர்ச்சி மலேசியாவுக்கு பரவும் சாத்தியம் இல்லை என்று முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகமட் கூறுகிறார். ஏனென்றால், பிரதமர் நஜிப்பின் தலைமையிலான மக்களின் தேவையறிந்து செயல்படுவதற்கு கடுமையாக உழைத்து வருகிறது என்று செய்தியாளர்களிடம் இன்று கூறினார். "மக்களின் பிரச்னைகள் மீது அரசாங்கம் கவனம்…

பக்கத்தானுடன் கூட்டு: அலியாஸ் எம்டியுசியை பிரநிதிக்கவில்லை

தொழிலாளர் சட்டங்களுக்கு முன்மொழியப்பட்டிருக்கும் திருத்தங்களுக்கு எதிராக அரசாங்கத்துடன் "போர் தொடுக்க" தயாராக இருப்பதாகக் கூறப்படுவதை மலேசிய தொழிற்சங்க காங்கிரஸ் (எம்டியுசி) மிகத் தீவிரமாக மறுத்துள்ளது. "இந்த அறிக்கையில் நிச்சயமாக உண்மை இல்லவே இல்லை. அது காங்கிரஸ்சின் அதிகாரப்பூர்வமான கொள்கையைப் பிரதிநிதிக்கவில்லை", என்று அக்காங்கிரஸ்சின் தலைமைச் செயலாளர் அப்துல் ஹாலிம்…

மோதலாமா, நோர் முகமட்?

ஐந்து நெடுஞ்சாலைகள் ஒப்பந்தங்கள் மீதான மாற்றங்கள் குறித்து பிரதமர்துறை அமைச்சர் நோர் முகமட் யாகோப் கூறியிருந்த கருத்துகள் பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங் அவரை பொதுமேடை விவாதத்திற்கு வருமாறு சவால் விட தூண்டியுள்ளது. இரு நெடுஞ்சாலைகள் ஐந்து ஆண்டுகளுக்கு சாலைக் கட்டண உயர்த்தாமல் இருப்பதற்கு  ஈடாக கட்டணம்…

அமைதியாகக் கூடுதல் தொடர்பில் நிலவும் குழப்பத்தைத் தீர்க்க நஜிப் விளக்கம்

அமைதிப்பேரணி மசோதா கொடூரமானது என்று கூறப்படுவதை மறுத்த பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், எல்லாரும் குறைகூறுவதைப்போல் அல்லாமல் முன் அறிவிப்பு கொடுத்துவிட்டுக் கூட்டங்களைக் குறுகிய காலத்தில்கூட நடத்த முடியும் என்றார். “அமைதிக்கான கூடுதல் மசோதா இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. வரையறுக்கப்பட்ட இடங்களில் ஒன்றுகூடுவதாக இருந்தால் போலீசிடம் தெரிவித்து விட்டால் போதும், அடுத்து…

பினாங்கில் அமைதியாகக் கூடுதல் மசோதாவுக்கு எதிராக அமைதியாக நடந்த கண்டனக்கூட்டம்

நேற்று பினாங்கில் அமைதியாகக் கூடுதல் மசோதவை எதிர்க்கும் ஒரு கூட்டம் நடைபெற்றது.போலீசார் தலையீடின்றி அது அமைதியாக நடந்து முடிந்தது. மசோதாவுக்கு எதிர்ப்புத் தெரிவிக்க  மனித உரிமைக் குழுவான சுவாராம் ஏற்பாடு செய்த அந்நிகழ்வு பினாங்கின் புகழ்பெற்ற பேச்சாளர் மூலையில் நடைபெற்றது. மாநில ஆட்சிக்குழு உறுப்பினர்கள், முனிசிபல் கவுன்சிலர்கள் (எம்பிபிபி),…

ஷாரிஸாட் அம்னோ பொதுப் பேரவையில் என்எப்சி மீது விளக்கமளிப்பார்

அம்னோ மகளிர் தலைவி ஷாரிஸாட் அப்துல் ஜலில்,  என்எப்சி என்ற தேசிய விலங்குக் கூட நிறுவனத்தில் தமது ஈடுபாடு குறித்த குற்றச்சாட்டுக்களுக்குப் புதன்கிழமை அம்னோ பொதுப் பேரவையில் பதில் அளிப்பார். "அந்தப் பிரச்னை விவாதிக்கப்படுவதில் எந்தப் பிரச்னையும் இல்லை," என ஷாரிஸாட் நிருபர்களிடம் கூறினார். அந்த விவகாரம் மீது…

டாக்டர் மகாதீர்: விவேகமான வாக்காளர்கள் அரசாங்கத்துக்குத் தலைவலியைக் கொடுக்கின்றனர்

அரசாங்கம் நடப்பு சூழ்நிலைக்கு ஏற்ப தன்னை மாற்றிக் கொண்டு புத்திசாலிகளாக இருக்கும் வாக்காளர்களைச் சமாளிக்க வேண்டும் என முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் கூறியிருக்கிறார். "இன்றைய கால கட்டத்தில் நாம் மிகவும் புத்திசாலிகளான எதிர்த்தரப்பை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. நீங்கள் செய்வதில் தாங்கள் மகிழ்ச்சி அடையவில்லை என்றால் உங்களைக்…

நஸ்ரி: வழக்குரைஞர் மன்றம் மக்களைப் பிரதிநிதிக்கவில்லை

2011ம் ஆண்டுக்கான அமைதியான பொதுக் கூட்ட மசோதா மீது வழக்குரைஞர் மன்றத் தலைவர் லிம் சீ வீ தெரிவித்துள்ள கருத்துக்களை மக்களுடைய எண்ணங்களைப் பிரதிநிதிக்கவில்லை என்று சட்டத் துறைக்கு பொறுப்பான அமைச்சர் முகமட் நஸ்ரி அப்துல் அஜிஸ் கூறுகிறார். அந்த மசோதாவை ஆய்வு செய்வதற்கு நாடாளுமன்றத் தேர்வுக் குழு…

நஜிப் அம்னோவிடம் சொல்கிறார்: திருந்துக அல்லது ஒர் அரபு எழுச்சியை…

அம்னோ சீர்திருத்த முயற்சிகளை ஏற்றுக் கொள்ள வேண்டும் அல்லது அரபு எழுச்சி பாணியிலான புரட்சியை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் இன்று அந்தக் கட்சியிடம் மன்றாடியிருக்கிறார். "நீங்கள் நீண்ட காலத்துக்கு எத்தகையை இடையூறும் இல்லாமல் ஆட்சியில் இருந்து விட்டால் அரசியலில் உங்களை யாரும் அசைக்க…

அபிம்: பொதுக் கூட்ட மசோதா மேலோட்டமானது; தவறாகப் பயன்படுத்தப்படுவதற்கு நிறைய…

2011ம் ஆண்டுக்கான அமைதியான பொதுக் கூட்ட மசோதாவை எதிர்க்கும் அமைப்புக்களுடன் அபிம் என்ற முஸ்லிம் இளைஞர் இயக்கமும் சேர்ந்து கொண்டுள்ளது. பொதுக் கூட்டங்களுக்கு "வசதி செய்து கொடுக்க" போலீசுக்கு அந்த மசோதா வழங்கும் அதிகாரங்கள் "மிகவும் மேலோட்டமானவை", அவை "தவறாகப் பயன்படுத்தப்படுவதற்கு நிறைய வாய்ப்புக்கள்" உள்ளதை அதன் தலைவர்…

பிஎன்னைத் தோற்கடிக்க பக்காத்தான் மிகவும் சிரமப்பட வேண்டியிருக்கும்

“நீண்ட காலம் ஒரு கட்சியே ஆட்சியில் இருந்தால் அது, யாரும் நம்மைத் தொட முடியாது என்ற துணிச்சலில் தன்னைப் பேணியாக மாறிவிடும்.நடப்பு அரசாங்கத்தின் நிலையும் அதுதான்.”      வெற்றிபெறும் நோக்கில் செய்யப்பட்டுள்ள தொகுதிப் பிரிப்பு அம்பலப்படுத்தப்பட்டது மஞ்சிட் பாட்யா: பணி ஓய்வுபெற்றவரான இங் சாக் இங்கூன், அம்னோ/பிஎன்…

பொதுக் கூட்ட மசோதாவை எதிர்க்குமாறு பிகேஆர், கெரக்கானைக் கேட்டுக் கொண்டுள்ளது

பிஎன் உறுப்புக் கட்சியான கெரக்கான், தனது கொள்கை அறிக்கையை உண்மையாக பின்பற்றி பொதுக் கூட்ட மசோதாவுக்கு எதிரான நிலையைக் கடைப்பிடிப்பதில் பக்காத்தான் ராக்யாட் சகாக்களுடன் இணைந்து கொள்ள வேண்டும். இவ்வாறு பத்து பிகேஆர் எம்பி தியான் சுவா கேட்டுக் கொண்டுள்ளார். "கெரக்கான் எபி-க்கள் இந்த சவாலை ஏற்றுக் கொண்டு…

எம்டியூசி முதலாவது (நாட்டுப் பற்று) கல்லை வீசட்டும்

"பிஎன் மலேசியர்களை ஏமாற்றி விட்டது. எம்டியூசி-யும் பாதிக்கப்பட்டுள்ளது. ஆகவே நாட்டுக்குச் சரியானதைச் செய்ய அது இப்போது உதவ வேண்டும்." எம்டியூசி பக்காத்தானுடன் ஒப்பந்தம் செய்து கொள்ள முன்வருகிறது அனவைருக்கும் நியாயம்: வேலைs சட்டத்தில் அரசாங்கம் கொண்டு வந்துள்ள திருத்தங்கள் அம்னோ சேவகர்கள் மேலும் பணம் பண்ணுவதற்கு வழி வகுக்கும் என்பதால்…