உலகளவிலான ஆக்கிரமிப்பு இயக்கத்தை நாடாளுமன்றத்தின் வாசலுக்குக் கொண்டுவர ஓர் ஆர்வலர்கள் குழு திட்டமிட்டுள்ளது. நாளை (நவம்பர் 29) தொடங்கவிருக்கும் அமைதியாக கூடுதல் சட்ட மசோதா 2011 மீதான விவாதத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்பது அதன் நோக்கமாகும்.
நாடாளுமன்ற ஆக்கிரமிப்பு இயக்கம் என்று பெயரிடப்பட்டுள்ள அக்குழுவினர், மக்களை நாளை (செவ்வாய்க்கிழமை) காலை மணி 11.00 லிருந்து மூன்று நாள்களுக்கு தொடர்ந்து நாடாளுமன்றத்தின் முன் கூடுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இக்குழுவினர் – கோலாலம்பூர் மக்கள் மன்றம் – டத்தாரான் ஆக்கிரமிப்பு இயக்கத்தை நடத்துகிறவர்கள். இம்மன்றம் கடந்த ஆகஸ்ட் மாதத்திலிருந்து பல நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளது.