மோதலாமா, நோர் முகமட்?

ஐந்து நெடுஞ்சாலைகள் ஒப்பந்தங்கள் மீதான மாற்றங்கள் குறித்து பிரதமர்துறை அமைச்சர் நோர் முகமட் யாகோப் கூறியிருந்த கருத்துகள் பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங் அவரை பொதுமேடை விவாதத்திற்கு வருமாறு சவால் விட தூண்டியுள்ளது.

இரு நெடுஞ்சாலைகள் ஐந்து ஆண்டுகளுக்கு சாலைக் கட்டண உயர்த்தாமல் இருப்பதற்கு  ஈடாக கட்டணம் வசூலுக்கும் சலுகையை இரு ஆண்டுகளுக்கு நீட்டித்திருப்பதின் மூலம் குவான் எங் தமது இரட்டைக் கொள்கையை காட்டி விட்டார் என்று நோர் முகம்மட் கூறியுள்ள குற்றசாட்டினால் குவான் எங் சினமடைந்துள்ளார்.

இக்குற்றச்சாட்டை பல்வேறு புள்ளிவிபரங்களோடு முற்றிலும் நிராகரித்த அவர், நோர் முகமட் அளித்துள்ள தகவலின்படி அவர்கள் செய்துள்ள மாற்றங்கள் மக்களுக்கு நன்மை பயக்கும் என்பதில் அவருக்கு நம்பிக்கை இருக்குமானால், அவர் என்னுடம் விவாதம் செய்யத் தயங்கக்கூடாது. அப்போதுதான், செய்யப்பட்டுள்ள மாற்றங்கள் மக்களுக்கு எவ்வாறு பயன் அளிக்கிறது என்பதை அவர்கள் தெரிந்து கொள்ள முடியும் என்றார்.

TAGS: