பிஎன் ஆதரவாளர்களிடமும் நியாயமாக நடந்து கொள்வதாக குவான் எங் வாக்குறுதி

முதலமைச்சர் லிம் குவான் எங், தமது பினாங்கு மாநில அரசாங்கம், ஞாயிற்றுக் கிழமை தேர்தலில் பிஎன் -னுக்கு ஆதரவு அளித்தவர்கள் உட்பட மாநிலத்தில் உள்ள எல்லா குடி மக்களிடமும் நியாயமாக நடந்து  கொள்ளும் என வாக்குறுதி அளித்துள்ளார். பினாங்கு மாநில முதலமைச்சராக இரண்டாவது தவணைக் காலத்துக்கு இன்று பதவி உறுதிமொழி…

பண அரசியலை எதிர்த்து குவான் எங் துணைவியார் மொட்டை அடித்துக்கொண்டார்

இன்று காலை பினாங்கு பராமரிப்பு அரசின் முதலமைச்சர் லிம் குவான் எங்கின் துணையார் பெட்டி சுயு-வும் பக்காத்தான் ரக்யாட் ஆதரவாளர்கள் சிலரும், பண அரசியலுக்கு எதிர்ப்புத் தெரிவித்து தங்கள் தலைகளை மொட்டை அடித்துக்கொண்டனர். பினாங்கின் புகழ்பெற்ற கெக் லொக் சி ஆலயத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட பக்காத்தான் ஆதரவாளர்கள், தலைவர்கள்…

இனவாத அரசியல் பினாங்கை பக்காத்தான் இழப்பதற்கு வழி வகுக்கக் கூடும்…

பினாங்கு மாநிலத்தில் 'இனவாத அரசியல்' காரணமாக வாக்குகள் திசை மாறி அதனால் பக்காத்தான் ராக்யாட்  அந்த மாநில அரசாங்கத்தை இழக்கக் கூடிய அபாயம் உள்ளதாக அதன் பராமரிப்பு அரசாங்க முதலமைச்சர்  லிம் குவான் எங் எச்சரித்துள்ளார். பக்காத்தான் தோழமைக் கட்சிகளில் ஒன்றான பிகேஆர் போட்டியிடும் பாயான் பாருவில் அந்த…

பினாங்கில் குவான் எங்-தெங் போட்டி இல்லை

பினாங்கு பிஎன் தலைவர் தெங் சாங் இயோவின் கோமாளித்தனங்களால் எரிச்சலடைந்த டிஏபி தலைமைச் செயலாளர் லிம் குவான் எங், அவருக்கு எதிராக பாடாங் கோத்தாவில் போட்டியிடும் எண்ணத்தைக் கைவிட்டிருக்கிறார். தெங் “சர்க்கஸ் கோமாளி”போல் நடந்துகொண்டிருக்கிறார் என்று லிம் கூறினார். எனவே, “இனியும் இந்த ஆட்டத்தில் ஈடுபட ஆர்வமில்லை”, என்றாரவர்.…

த ஸ்டாரிடம் பேசுவதற்கே அஞ்சுகிறார் முதலமைச்சர்

பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங், மசீச-வுக்குச் சொந்தமான த ஸ்டார் நாளேட்டிடம் பேசுவதென்றாலே பயப்படுகிறார். “நான் சொல்வதைத் திரித்துப் போட்டு விடுகிறார்கள்.அதுதான் த ஸ்டாரிடம் பேசவே பயமாக இருக்கிறது. “முந்திய நிகழ்வுக்குப் பின்னர், இனி எழுத்துப்பூர்வமாகத்தான் அவர்களுடன் தொடர்புகொள்வோம்-அதில் பிரச்னை வராது. தேர்தல்வரை இந்நிலை தொடரும்”. நேற்று…

லிம் குவான் எங்-கை களங்கப்படுத்த இன்னொரு முயற்சி

'லிம் குவான் எங் & சியோங் யின் பான் ரகசிய ஒலிப்பதிவு' என்னும் தலைப்பில் ஒர் ஒலிப்பதிவை மசீச ஆதரவு  Souminews இணையத் தளம் யூ டியூப்-பிலும் முக நூலிலும் வெளியிட்டதைத் தொடர்ந்து பினாங்கு முதலமைச்சர்  அலுவலகத்தில் பாதுகாப்பு குறித்த விசாரணை நடத்தப்பட்டது. ஆனால் அது பினாங்கு முதலமைச்சருக்கும்…

லிம் குவான் எங்: ஆடம்பர வாழ்க்கை முறைகளைப் பின்பற்றும் தலைவர்களை…

ஊழலைத் தடுப்பதற்கு டிஏபி ஆறு நடவடிக்கைகளைப் பரிந்துரை செய்கிறது என அதன் தலைமைச் செயலாளர் லிம் குவான் எங் அறிவித்துள்ளார். அந்த எல்லாத் துறைகளிலும் பிஎன் தோல்வி கண்டுள்ளதாக அவர் இன்று மலாக்கா மாநில டிஏபி மாநாட்டில் கூறினார். சொத்துக்களைப் பகிரங்கமாக அறிவிப்பதை நடைமுறையாக்குவது முதலாவது நடவடிக்கை என…

குவான் எங்: கணக்கறிக்கையை இன்றே தாக்கல் செய்க

பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங், தலைமைக் கணக்காய்வாளர் (ஏஜி) அறிக்கையை இன்றைய நாடாளுமன்றக் கூட்டத்திலேயே தாக்கல் செய்ய வேண்டுமாய் கூட்டரசு அரசாங்கத்தைக் கேட்டுக்கொண்டிருக்கிறார். அது வெளியிடப்பட்டால் மாநிலங்கள் அவற்றின் கணக்கறிக்கைகளை வெளியிட வசதியாக இருக்கும் என்றாரவர். மாநில அரசுகளின் கணக்கறிக்கை அந்தந்த அரசுகளிடம் ஆகஸ்ட் 30-இலேயே கொடுக்கப்பட்டு…

குவான் எங்: பினாங்கின்மீது நஜிப்புக்கு அன்பு இல்லை

2013 பட்ஜெட்டில் பினாங்கு புறக்கணிக்கப்பட்டிருப்பதாக முதலமைச்சர் லிம் குவான் எங் சாடியுள்ளார். “பினாங்குக்கு எதுவும் இல்லை என்பதைப் பார்க்கையில் எரிச்சலாக இருக்கிறது”, என்று லிம் இன்று செய்தியாளர் கூட்டமொன்றில் கூறினார். டிஏபி தலைமைச் செயலாளருமான லிம், கடந்த பட்ஜெட்டில் பினாங்குக்கு 200 பேருந்துகள் கொடுப்பதாகக் கூறிய வாக்குறுதியைக்கூட நஜிப்…

லிம் குவான் எங்-கின் ‘இனவாத’ கருத்து எஸ்டிபிஎம் சோதனைத் தேர்வுப்…

ஜோகூர் மாநில அளவில் நடத்தப்பட்ட எஸ்டிபிஎம் சோதனைத் தேர்வுகளில் காணப்பட்ட கேள்வி ஒன்றுக்கு முக்கிய மலாய் நாளேடுகளை ஏற்றுக் கொள்ள வேண்டாம் என பினாங்கில் உள்ள பள்ளிக்கூடங்களுக்கு முதலமைச்சர் லிம் குவான் எங் விடுத்த எச்சரிக்கை 'இனவாதம், இனங்களுக்கு இடையில் ஒருங்கிணைப்புக்குத் தடையாக இருக்கிறது' என வருணிக்கும் பதில்…

லிம் குவான் எங்: பக்காத்தான் பொதுத் தேர்தலில் வெற்றி பெற…

அடுத்த பொதுத் தேர்தலில் வெற்றி பெறுவதற்கு பக்காத்தான் ராக்யாட் குறித்த மூன்று மாயைகளைப் போக்குவதற்கு தமது கட்சி உதவ வேண்டும் என டிஏபி தலைமைச் செயலாளர் லிம் குவான் எங் கூறியிருக்கிறார். பக்காத்தான் கொள்கைகள் நாட்டை நொடித்துப் போகச் செய்து விடும் என்பது முதலாவது மாயை ஆகும் என…

லிம் குவான் எங்: பெர்க்காசா என் படத்தை எரித்ததை என்னவென்று…

மெர்தேக்கா தினத்துக்கு முந்திய நாளன்று நிகழ்ந்த கொண்டாட்டங்களின் போது பிரதமர் நஜிவ் அப்துல் ரசாக்கின் படத்தை சில தனிநபர்கள் மிதித்ததை டிஏபி கண்டிக்கிறது. அதனை ஏற்றுக் கொள்ளவில்லை. என்றாலும் தமது அலுவலகத்துக்கு வெளியில் தமது படத்தை மிதித்து எரியூட்டிய பெர்க்காசா உறுப்பினர்கள் மீது பிஎன் ஏன் எந்த நடவடிக்கையும்…

சாபா கட்சித்தாவல்: குவான் எங்கைச் சாடுகிறது கெராக்கான்

பினாங்கு கெராக்கான் சாபாவில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் கட்சி மாறியிருப்பதன் தொடர்பில் முதலமைச்சர் லிம் குவான் எங் தம் நிலைப்பாட்டினைத் தெளிவுபடுத்த வேண்டும் என்று அறைகூவல் விடுத்துள்ளது. இப்படிப்பட்ட கட்சித்தாவலை ஆதரிப்பதாக லிம் இதுவரை எவ்வித அறிகுறியும் காட்டவில்லை என்று குறிப்பிட்ட மாநில கெராக்கான் மனித உரிமை மற்றும் சட்ட…

“நான் சொய் லெக் அல்ல” என்கிறார் லிம்

பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங், முன்னாள் ஊழியர் ஒருவரை லிம்-மின் மனைவி பெட்டி சியூ தாக்கியதாக அண்மையில் எழுந்த குற்றச்சாட்டுக்கள் மீது தமது மௌனத்தைக் கலைத்துள்ளார். ஒருவருடைய நடத்தைக்கு களங்கம் கற்பிக்கும் பிஎன், மசீச நடவடிக்கைகளின் விளைவே அந்தக் குற்றச்சாட்டு என லிம் சொன்னார். தமக்குத் தொடர்புகள் இருந்ததாகக்…

லிம் குவான் எங்: போலீசார் என்னை பெர்க்காசாவிடமிருந்து பாதுகாக்கத் தவறி…

பொது இடங்களில் தம்மை அடிக்கடி அச்சுறுத்தும் பெர்க்காசா தீவிரவாதிகளிடமிருந்து தம்மை பாதுகாக்க போலீஸ் மீண்டும் தவறி விட்டதாக பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங் கூறியிருக்கிறார். நேற்று தெலுக் பாகாங் சந்தைக் கூடத்தில் நிகழ்ந்த சம்பவம் பற்றிக் குறிப்பிட்ட போது அவர் அவ்வாறு சொன்னார். போலீசார் மிகவும் தாமதமாக…

குவான் எங் தமது பத்திரிக்கை சுதந்திர நடவடிக்கைகளை பட்டியலிடுகிறார்

பக்காத்தான் ராக்யாட் புத்ராஜெயாவைக் கைப்பற்றுமானால் நடப்பு ஊடகச் சூழ்நிலையை அது விடுவிக்கும் என்பதற்கு உத்தரவாதம் ஏதுமில்லை என CIJ என்ற சுதந்திர இதழியல் மய்யம் கூறியுள்ளதை டிஏபி நிராகரித்துள்ளது. 2008ம் ஆண்டு பதவிக்கு வந்த பக்காத்தான் மாநில அரசுகளும் ஊடகங்கள் சம்பந்தப்பட்ட வரையில் பிஎன் -னைப் போன்ற 'பண்புகளையே'…

“இன, சமய உணர்வுகளை தூண்ட முயலும்” அம்னோவைத் தோற்கடிக்க லிம்…

பாயான் முத்தியாரா பள்ளிவாசல் நில விவகாரத்தில் "இன, சமய உணர்வுகளைத் தூண்டி விட" முயலும் பினாங்கு அம்னோவுக்கு எதிராக தீவிரமாக எதிர்த் தாக்குதல் தொடுக்க பினாங்கு மாநில அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. அந்தப் பிரச்னையில் மலாய் முஸ்லிம் சமூகத்திடம் அம்னோ கூறும் பொய்களை மக்களிடம் விளக்குவதற்காக டிஏபி, பாஸ், பிகேஆர்…

“கணக்காளராகும் முயற்சியில் தோற்றுப்போனவன் நான்”, குவான் எங்

பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங், ஆஸ்திரேலியாவில் பொருளாதாரத்திலும் கணக்கியலிலும் பட்டம் பெற்றவர். ஆனாலும் ஒரு கணக்காளராகும் முயற்சியில் அவருக்குக் கிடைத்தது தோல்விதான். பட்டம் பெற்றதும் தம்முடன் படித்தவர்களுக்கு எல்லாம் வேலை கிடைத்துவிட்டது. ஆனால், தமக்கு மட்டும் வேலை கிடைப்பது குதிரைக் கொம்பாக இருந்ததென லிம் (வலம்) குறிப்பிட்டார்.…

மோதலாமா, நோர் முகமட்?

ஐந்து நெடுஞ்சாலைகள் ஒப்பந்தங்கள் மீதான மாற்றங்கள் குறித்து பிரதமர்துறை அமைச்சர் நோர் முகமட் யாகோப் கூறியிருந்த கருத்துகள் பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங் அவரை பொதுமேடை விவாதத்திற்கு வருமாறு சவால் விட தூண்டியுள்ளது. இரு நெடுஞ்சாலைகள் ஐந்து ஆண்டுகளுக்கு சாலைக் கட்டண உயர்த்தாமல் இருப்பதற்கு  ஈடாக கட்டணம்…

லிம்: அம்னோ “கறை படிந்த கிழவர்கள்” கட்சி

பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங், தமது புதல்வர் சம்பந்தப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுக்கள் மீது அம்னோவின் அதிகாரத்துவ இணைய ஊடகத்தை சாடியுள்ளார். "நீண்ட முடி முதல் போதைப் பொருள் பிரச்னைகள் வரை குவான் எங் தமது வார்த்தைகளை சுழற்றுகிறார்" ( Dari Rambut Panjang ke Gejala Dadah,…