பினாங்கு மாநிலத்தில் ‘இனவாத அரசியல்’ காரணமாக வாக்குகள் திசை மாறி அதனால் பக்காத்தான் ராக்யாட் அந்த மாநில அரசாங்கத்தை இழக்கக் கூடிய அபாயம் உள்ளதாக அதன் பராமரிப்பு அரசாங்க முதலமைச்சர் லிம் குவான் எங் எச்சரித்துள்ளார்.
பக்காத்தான் தோழமைக் கட்சிகளில் ஒன்றான பிகேஆர் போட்டியிடும் பாயான் பாருவில் அந்த “கறை படிந்த ஆட்டத்தை” தமது எதிரிகள் நடத்திக் கொண்டிருப்பதாக அவர் சொன்னார்.
வாக்காளர்கள் பக்காத்தான் கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்ட அவர், போட்டியிடும்
வேட்பாளர்களுடைய இன பின்னணி அடிப்படையில் மட்டும் வாக்களிக்க வேண்டாம் எனக் கேட்டுக்
கொண்டார்.
“சீன வேட்பாளர் ஒருவர் நாட்டின் குடிமக்களை விற்பவராக இருந்தால் அவருக்கு வாக்களிப்பதால் என்ன
பயன் ? நாம் சரியான மதிப்பீட்டின் அடிப்படையில் வாக்களிக்க வேண்டும், இன அடிப்படையில் அல்ல,” என
டிஏபி தலைமைச் செயலாளருமான லிம் சொன்னார்.
“எடுத்துக்காட்டுக்கு இன வம்சாவளி வேறுபாடு இல்லாத ஊழல், இனவாதம் ஆகியவற்றுக்கு எதிராக நாம்
போராடுகிறோம். ஆகவே தூய்மையான வேட்பாளர்களுக்கு வாக்களிப்பதே நல்லது.”
‘இனத்தை அடிப்படையாகக் கொண்ட அந்தப் பிரச்சாரம் மக்கள் மீது ஒரளவு தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது எங்களுக்குத் தெரியும். பாயான் பாருவில் எந்தத் தொகுதியையும் இழக்க நாங்கள் விரும்பவில்லை. அதனால் நாங்கள் மிகவும் கவனமாகச் செயல்படுகிறோம். இடங்களை இழப்பதால் மாநில அரசாங்கத்தை நாம் இழக்கக்
கூடிய சூழ்நிலையையும் ஏற்படுத்தலாம்.”
பாயான் பாருவில் தீர்க்கப்படாத பல பிரச்னைகள் இருப்பது தமக்குத் தெரியும் எனக் கூறிய லிம் மக்கள்
வாக்குகளைச் செலுத்தும் போது ‘பெரிய தோற்றத்தை’ பார்க்க வேண்டும் என்றார்.
பக்காத்தான் கீழ் மாநில அரசாங்கத்தை வைத்துக் கொள்ள விரும்புகின்றனரா, நல்ல, தூய்மையான
தலைவர்களுக்கு வாக்களிக்க விரும்புகின்றனரா என்பதை மக்களே முடிவு செய்ய வேண்டும் என்றும் அவர்
குறிப்பிட்டார்.
79,307 வாக்காளர்களைக் கொண்ட பாயான் பாரு கலப்பு இனத் தொகுதியாகும். அதில் 49 விழுக்காடு சீனர்கள், 39 விழுக்காடு மலாய்க்காரர்கள், 11 விழுக்காடு இந்தியர்கள். பல இனங்களைப் பிரதிநிதித்த பிகேஆர் தலைவர்கள் கடந்த முறை அங்கு வெற்றி பெற்றனர்.
இந்த முறையும் அதே போன்று பாயான் பாரு நாடாளுமன்றத் தொகுதியில் சிம் சூ சின்-னையும் பத்து மாவ்ங் சட்டமன்றத் தொகுதியில் அப்துல் மாலிக் காசிமையும் பத்து உபான் சட்டமன்றத் தொகுதியில் டி ஜெயபாலனையும் பந்தாய் ஜெர்ஜாக் சட்டமன்றத் தொகுதியில் ரஷிட் ஹாஸ்னோரையும் பிகேஆர் களமிறக்கியுள்ளது.
அவர்கள் அனைவருக்கும் எதிராக சீன வேட்பாளர்களை பிஎன் போட்டியில் நிறுத்தியுள்ளது.
நமது பிரதமர் இன்று வரை பல அரசியல் வன்முறை பற்றி வாய் திறந்து கண்டித்ததே இல்லை. ‘தண்ட புத்ரா’ என்ற இனவாத படத்தை கல்லூரிகளில் கள்ள தனமாக திரையிட்டு இளம் மாணவ சமூகட்டினரிடையே ‘இன வெறுப்பு’ என்ற நஞ்சை விதைப்பதில் காட்டும் உண்மையான அக்கறையை, இன வெறியன் பெரகாச ஜுல்கிப்லி, இப்ராகிம் அலி போன்ற வெறியர்களை விடாப்புடியாக வேட்பாளர்களாக அறிவிப்பதில் காட்டும் அக்கறையை, வன்முறைகளை கண்டிப்பதில் காட்டவில்லை. நல்ல ‘சத்து மலேசியா’ பிரதமர்!! அனைத்து இந்தியர்களும் அந்த மக்கள்சக்தி கோடிஸ்வர தனேந்திரன், கூறிய ‘ஆண்டவன் தந்த வரப்பிரசாதம்’ நஜிப்கு (அல்டுனியா கொலைவழக்கு குற்றசாட்டு, ச்கோர்பேனே நீர்மூழ்கி ஊழல் புகழ்) ஒட்டுக்களை அள்ளி குவித்து பெருமை கொள்வோம்!!
மக்கள் நடு தெருவுக்கு வர விரும்பினால் தாரளமாக ( BN NUKKU ) வாக்களிக்கலாம்