இன்று காலை பினாங்கு பராமரிப்பு அரசின் முதலமைச்சர் லிம் குவான் எங்கின் துணையார் பெட்டி சுயு-வும் பக்காத்தான் ரக்யாட் ஆதரவாளர்கள் சிலரும், பண அரசியலுக்கு எதிர்ப்புத் தெரிவித்து தங்கள் தலைகளை மொட்டை அடித்துக்கொண்டனர்.
பினாங்கின் புகழ்பெற்ற கெக் லொக் சி ஆலயத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட பக்காத்தான் ஆதரவாளர்கள், தலைவர்கள் முன்னிலையில் அந்நிகழ்வு நடைபெற்றது.
“இது கட்சி ஏற்பாடு செய்த நிகழ்வல்ல. பண அரசியலை எதிர்கும் கட்சி ஆதரவாளர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வு”, என்று தலையை முழுக்க மொட்டை அடித்துக்கொண்ட சியு கூறினார்.
என்ன yb..!இப்படியா செய்வது….வாழ்த்துக்கள் yb,துணைவி அவர்களே….
நமக்கு வேண்டியது சுத்தமான நேர்மையான ஆட்சி, ஊழல் ஆட்சியல்ல, ஊழலில் மிதந்தவர்கள் அவ்வளவு சுலபமாக தோல்வியை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். ஆயினும் பாக்காதான் வெல்வது உறுதி.
வேண்டுதலா இருக்குமோ?