எம்டியூசி முதலாவது (நாட்டுப் பற்று) கல்லை வீசட்டும்

“பிஎன் மலேசியர்களை ஏமாற்றி விட்டது. எம்டியூசி-யும் பாதிக்கப்பட்டுள்ளது. ஆகவே நாட்டுக்குச் சரியானதைச் செய்ய அது இப்போது உதவ வேண்டும்.”

எம்டியூசி பக்காத்தானுடன் ஒப்பந்தம் செய்து கொள்ள முன்வருகிறது

அனவைருக்கும் நியாயம்: வேலைs சட்டத்தில் அரசாங்கம் கொண்டு வந்துள்ள திருத்தங்கள் அம்னோ சேவகர்கள் மேலும் பணம் பண்ணுவதற்கு வழி வகுக்கும் என்பதால் பக்காத்தான் ராக்யாட் அந்த ஏற்பாட்டுக்கு ஒப்புக் கொள்ள வேண்டும். அத்துடன் தொழிலாளர்களை விநியோகம் செய்யும் எல்லா அனுமதிகளும் அம்னோ சேவகர்களுக்கே கொடுக்கப்படும் என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

எம்டியூசி-யுடன் பக்காத்தான் இணைந்து வேலை  செய்து ஊழல் மலிந்த பிஎன் அரசாங்கத்தை வீழ்த்துவதற்கு இதுவே தக்க தருணம்.

அடையாளம் இல்லாதவன்_4182: தொழிற்சங்க உறுப்பினர்களாக இருந்தாலும் இல்லாவிட்டாலும் “அனைத்து மலேசியர்களுக்கும் மலேசியா” என்ற கோட்பாட்டைப் பின்பற்றுவோம். பிஎன் மலேசியர்களை ஏமாற்றி விட்டது. அதற்கான காரணங்களும் நமக்குத் தெரியும். எம்டியூசி-யும் பாதிக்கப்பட்டுள்ளது. ஆகவே நாட்டுக்குச் சரியானதைச் செய்ய அது இப்போது உதவ வேண்டும்.

உற்பத்தித் திறன், சம்பளம், நியாயமான வேலை நிபந்தனைகள் ஆகியவற்றில் எம்டியூசி உண்மை நிலைக்கு ஏற்ப நடந்து கொள்ள வேண்டும். பிகேஆர் வழங்கும் முழு ஒப்புதல் காரணமாக எல்லாம் சரியாகி விடாது.

நாம் மலேசியாவை மீண்டும் எழுப்ப வேண்டும். அப்போதுதான் அந்நிய முதலீடுகள் நாட்டுக்குள் வரும். அதனால் வேலை வாய்ப்புக்கள் உருவாகும். நியாயமான நிபந்தனைகளை பிகேஆர் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

சேதமடைந்துள்ள நம் நாட்டைக் காப்பாற்றுவதற்கு எம்டியூசி முதலாவது (நாட்டுப் பற்று) கல்லை வீசட்டும்.

கொள்கை வகுப்பாளர்களுக்கு மலேசியா ஒரு நாடு என்ற முறையில் இது வரையில் இரண்டாம் பட்சமே. தேசியக் கருவூலத்தை தங்களுக்குள் பங்கு போட்டுக் கொள்வதற்கே அவர்கள் முன்னுரிமை அளிக்கின்றனர்.

மாற்றம்: எம்டியூசி அடைந்துள்ள கவலை குறித்து நான் அனுதாபப்படுகிறேன். ஆனால் அதும் சூழ்நிலைக்கு ஏற்ப தன்னை மாற்றிக் கொள்ள வேண்டிய நேரம் வந்து விட்டதாக நான் எண்ணுகிறேன்.

வேலைச் சட்டம் காலத்துக்கு ஒவ்வாததாகி விட்டது. தொழில் துறை வடிவமைப்பில் ஏற்பட்டுள்ள மாற்றங்களுக்கு ஏற்ப அது இப்போது இல்லை. அரசியல் கட்சிகள், வேலை வாய்ப்புக்கள் கிடைப்பதை உறுதி செய்ய தொழிலாளர் தேர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கொள்கைகளில் கவனம் செலுத்த வேண்டும்.

தேவையற்ற ஆய்வுப் பயணங்களுக்கு செலவு செய்யப்படும் மில்லியன் கணக்கான ரிங்கிட்டை நாம் மிச்சப்படுத்த முடியுமானால் அந்தப் பணத்தை நமது பல்கலைக்கழகங்களுக்கு ஒதுக்கலாம்.

நமக்கு நன்கு தேர்ச்சி பெற்ற தொழிலாளர்கள் தேவை. நமது பொருளாதாரம் அப்போதுதான் முன்னேற்றம் காணும். பிஎன் அரசாங்கம் ஏமாற்றி விட்டது. அதன் மீது தொழிற்சங்கங்கள் நம்பிக்கை இழந்து விட்டதில் வியப்பில்லை.

நிக் வி: அத்தகைய ஏற்பாடுகளை பக்காத்தான் ஏற்றுக் கொள்ளக் கூடாது. அவ்வாறு செய்தால் பிஎன் -னுக்கும் அதற்கும் வித்தியாசம் இல்லாமல் போகும். நியாயமான திருத்தங்களைச் செய்வதாக பக்காத்தான் வாக்குறுதி அளிக்கலாம்.

கூட்டரசு அரசாங்கத்தை அது கைப்பற்றினால் மட்டுமே மாற்றத்தைச் செய்ய முடியும். அதனைச் செய்ய பக்காத்தான் தவறி விட்டால் எம்டியூசி, தான் அவசியம் எனக் கருதும் நடவடிக்கைகளை எடுக்கலாம்.

எந்த ஒரு தரப்பும் தன்னை பிணையாக வைப்பதற்கு பக்காத்தான் அனுமதிக்கக் கூடாது.

TAGS: