மலேசிய வழக்குரைஞர் மன்ற உறுப்பினர்களும் ஆதரவாளர்களும், இன்றிரவு மக்களவையில் வாக்களிப்புக்கு விடப்படும் என்று எதிர்பார்க்கப்படும் அமைதிப் பேரணி மசோதாவுக்கு எதிர்ப்புத் தெரிவிப்பதற்காக பூமலையில் குவியத் தொடங்கியுள்ளனர்.
அவர்கள் பிற்பகல் மணி 12.30க்கு,‘உரிமைக்கான ஊர்வலம்’ என்ற பெயரில் நாடாளுமன்றம் வரை நடந்துசென்று மசோதாவுக்கு எதிர்ப்பைத் தெரிவிக்கும் மகஜர் ஒன்றை ஒப்படைக்கத் திட்டமிட்டுள்ளனர்.
காலை 11.30 அளவில் சுமார் 300 வழக்குரைஞர்கள் அங்கு கூடியிருந்தனர்.
இதனிடையே, நாடாளுமன்றத்துக்குச் செல்லும் வழியில் போலீசார் சாலைத்தடுப்புகளை அமைத்து வருகின்றனர்.
இன்னொரு நிலவரத்தில், சமூக ஆர்வலர்களைக் கொண்ட ஒரு குழு, ‘நாடாளுமன்ற ஆக்கிரமிப்பு’ திட்டமொன்றைத் தொடர்ந்து மூன்று நாள்களுக்கு நடத்தத் திட்டமிட்டு பொதுமக்களைக் காலை மணி 11-க்கு நாடாளுமன்றத்துக்குமுன் கூடுமாறு அறைகூவல் விடுத்துள்ளது.
கோலாலம்பூர் மக்கள் கூட்டமைப்பு என்று தன்னை அழைத்துக்கொள்ளும் அக்குழுதான் ‘டட்டாரானை ஆக்கிரமிக்கும்’ இயக்கத்தையும் நடத்தியது
எனவே, இன்று நாடாளுமன்றம் பரபரப்புடன் விளங்கப் போகிறது.
பூமலைக் காட்சிகள் சில: