பன்னாட்டு மனித உரிமை அமைப்பு ஒன்று, இன்று வழக்குரைஞர்கள் நடத்தத் திட்டமிட்டுள்ள ஊர்வலம் தங்குதடையின்றி நடைபெற அனுமதிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.
நியு யோர்கில் தளம்கொண்டுள்ள அந்த மனித உரிமை கண்காணிப்பு அமைப்பு, வழக்குரைஞர்கள் “உரிமைக்கான ஊர்வலம்” வழி சில கருத்துகளைத் தெரியப்படுத்த விரும்புகிறார்கள் என்று கூறியது.
“அமைதிப் பேரணி மசோதாவில் செய்யப்பட வேண்டிய திருத்தங்கள் தொடர்பில் சில ஆலோசனைகள் சொல்ல விரும்புகிறார்கள். அரசாங்கம் அதைக் காது கொடுத்துக் கேட்க வேண்டும்”, என்று அவ்வமைப்பின் ஆசியப் பகுதி துணை இயக்குனர் பில் ரோபர்ட்சன் குறிப்பிட்டார்.