‘போலீசாருக்கு விருப்பம் போல் முடிவு செய்யும் உரிமை, மக்கள் உரிமை- அந்த இரண்டு கோட்பாடுகளில் எதற்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் ?’
அமைதியான பொதுக் கூட்ட மசோதா மீது எழுந்த ‘குழப்பத்தை’ நஜிப் தெளிவுபடுத்துகிறார்
மஞ்சித் பாட்டியா: பிரதமர் நஜிப் ரசாக் சொல்கிறார்: நாங்கள் உலகம் முழுவதையும் சார்ந்த 12 சட்டங்களை ஆய்வு செய்தோம். நமது நடைமுறைகளுக்கும் அனைத்துலக நடைமுறைகளுக்கும் பொருத்தமான ஒரு சட்டத்தை நாங்கள் உருவாக்க முயற்சி செய்துள்ளோம்.”
1) தெளிவாக விளக்குங்கள்- உங்கள் நடைமுறைகள் என்ன- அவை அடிப்படை மனித உரிமைகளுக்கும் ஜனநாயக உரிமைகளுக்கும் இணையானது அல்லது ஒதுக்கப்பட்ட நாடுகளான ஈரான், சிரியா, பாஹ்ரெய்ன், சவூதி அரேபியா, சீனா, வியட்னாம், வட கொரியா போன்ற நாடுகளுக்கு இணையானது என்றால் மலேசியர்களையும் மற்றவர்களையும் முடிவு செய்ய அனுமதியுங்கள்.
2) மலேசியாவைப் போன்ற சர்வாதிகார நடைமுறைகளைக் கொண்ட ஒதுக்கப்பட்ட ஒரு நாடு எப்படி ‘அனைத்துலக நடைமுறைகளுடன்’ சமரசம் செய்து கொள்ள முடியும் ?
3) அந்த ‘அனைத்துலக நடைமுறைகள்’ யாவை என்பதைத் தெளிவாகக் கூறுங்கள்.
‘உலகம் முழுவதையும் சார்ந்த 12 சட்டங்களை மட்டுமே ஆய்வு செய்திருந்தால் நீங்கள் முழுமையாக ஆய்வு செய்திருக்க வழி இல்லை. காரணம் இந்த உலகில் மொத்தம் 196 நாடுகள் உள்ளன. நஜிப் அவர்களே நீங்கள் ஒன்று சோம்பேறியாக இருக்க வேண்டும் அல்லது முழுக்க முழுக்க பொய் சொல்லியிருக்க வேண்டும்.
சுஸாகேஸ்: பிரதமர் அவர்களே பர்மா சட்டத்தை ஆய்வு செய்தீர்களா ? இப்போது அவர்களுடைய சட்டங்கள் உங்களைக் காட்டிலும் சிறந்த ஜனநாயக அடிப்படையில் இருப்பதாக சொல்லப்படுகிறதே ? நீங்கள் உங்கள் குறிப்புக்களை சிம்பாப்வே-யுடன் ஒப்பீடு செய்திருக்க வேண்டும் என நான் நம்புகிறேன்.
எது எப்படி இருந்தாலும் சாலை ஆர்ப்பாட்டங்கள் அம்னோவின் அமைதியையும் வாழ்வு ஆதாரத்தையும் சீர்குலைத்து விடும்.
ஹாங் பாயூப்: “ஏற்கனவே போலீசாருக்கு முடிவு செய்யும் அதிகாரம் இருந்தது. புதிய சட்டத்தில் அமைதியாகக் கூடுவதற்கு குடிமக்களுக்கு உள்ள உரிமைகளுக்கு உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது. ஆகவே இது முக்கியமானதாகும்.”
நஜிப் அவர்களே தயவு செய்து சொல்லுங்கள், போலீசாருக்கு விருப்பம் போல் முடிவு செய்யும் உரிமை, மக்கள் உரிமை- அந்த இரண்டு கோட்பாடுகளில் எதற்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் ? நேரடியான பலப்பரீட்சை நிகழ்ந்தால் எது வெற்றி பெறும் ?
போலீசாரின் விருப்ப அதிகாரத்துக்கு மேலாக அமைதியாகக் கூடுவதற்கான உரிமைக்கு முழு உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளதா ?
அவ்வாறு இல்லை என்றால் நாம் பழைய சட்டத்திற்கே மீண்டும் செல்கிறோம். போலீஸ் விருப்ப அதிகாரம்-தன்மூப்பாக பயன்படுத்தப்பட்டு, காரணம் காட்ட வேண்டிய தேவை இல்லாத அல்லது முறையீடு செய்வதற்கு வழி இல்லாத உலகில் எல்லாம் ஏமாற்று வேலைகள் தான்.
ஆகவே அன்புள்ள பிரதமர் அவர்களே, இது தான் மேம்பாடா ? இது தான் அமைச்சரவையின் வாதமும் ஆய்வுமா ? எந்த அளவுக்கு நாம் முட்டாள்களாக இருக்க வேண்டும்.
அரசாங்கம் தவறுக்கு மேல் தவறாக செய்து கொண்டிருப்பதற்கு அதுவே காரணமாகவும் இருக்கலாம்.
“நான் அடுத்த வாரம் ஆர்ப்பாட்டத்துக்கு ஏற்பாடு செய்ய விரும்பினால் என்ன செய்வது ? நான் என் நோக்கத்தை இன்று பிற்பகல் அறிவிப்பு கொடுக்கிறேன். அது நிச்சயம் சம்பந்தப்பட்ட நிகழ்வுக்கு 30 நாட்களுக்குள் வருகிறது. அப்போது அரசாங்கமும் போலீசும் மிகவும் மரியாதையாக கடமை உணர்வுடன் “நிச்சயம், நல்லது அது சரி, நீங்கள் நிபந்தனைகளை பூர்த்தி செய்து விட்டீர்கள்-உத்தேச நிகழ்வுக்கு 30 நாட்களுக்குள் எந்த நேரத்திலும் நீங்கள் அறிவிப்புக் கொடுத்தால் போதும்”! என சொல்லுமா ?
சாத்தியமே இல்லை.
அந்தச் சட்டம் தொடர்பாக அரசாங்கம் செய்வதற்கு எண்ணியுள்ள விஷயங்களே மோசமானது. அதை விட மோசமானது, அவர்கள் தங்கள் நடவடிக்கைகளுக்கு கொடுக்கும் அபத்தமான, நகைப்புக்குரிய காரணங்களும் தற்காப்பு வாதங்களுமாகும். அவற்றை மக்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றும் அவர்கள் எதிர்பார்ப்பது அதை விட வேடிக்கை ஆகும்.
மக்கள் தங்களை முட்டாள்களாக மாற்றிக் கொள்ள வேண்டும் என அரசாங்கம் எதிர்பார்ப்பது தான் இங்குள்ள பிரச்னையே.
அகராதி: இங்கு குழப்பம் ஏதுமில்லை. இது மிகத் தெளிவானது. பெர்சே 2.0ன் மீது அம்னோ அளவு மீறிச் செயல்பட்டு விட்டது. அதனால் உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தை ‘ரத்துச் செய்யப் போவதாக’ அது பிரச்சாரத் தந்திரத்தை அவிழ்த்து விட்டது.
ஆனால் அம்னோ தனது தலைமைத்துவத்தில் உள்ள குண்டர்களையும் திருடர்களையும் திருப்திப்படுத்த வேண்டியுள்ளது. அதனால் பொது ஆர்ப்பாட்டங்களை ஒடுக்கவும் விசாரணை இல்லாமல் மக்களை ஜெயிலுக்கு அனுப்பவும் புதிய சட்டங்களை வகுக்க அம்னோ அவசரப்படுகிறது.
நம்மிடமிருந்து அம்னோ தொடர்ந்து திருடுவதற்கு வழி வகுப்பதே சீர்திருத்தங்கள் என்ற நாடகமாகும். நமக்குப் புரிந்து விட்டது.