மகாதிர்: அரேபிய வசந்தம் மலேசிய கரையை வந்தடையாது

மத்தியக் கிழக்கு பாணியிலான சமீபகால கிளர்ச்சி மலேசியாவுக்கு பரவும் சாத்தியம் இல்லை என்று முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகமட் கூறுகிறார்.

ஏனென்றால், பிரதமர் நஜிப்பின் தலைமையிலான மக்களின் தேவையறிந்து செயல்படுவதற்கு கடுமையாக உழைத்து வருகிறது என்று செய்தியாளர்களிடம் இன்று கூறினார்.

“மக்களின் பிரச்னைகள் மீது அரசாங்கம் கவனம் செலுத்தவில்லை என்றால், மக்கள் கிளர்ச்சி செய்வர்.

“ஆனால் மலேசியா, சுதந்திரமடைந்த காலத்திலிருந்து, மக்களுக்கு சந்தர்ப்பங்களை அளிப்பதற்கு கடுமையாக உழைத்துள்ளது…அரேபிய வசந்தம் நம்மை எப்படி தொற்றிக்கொள்ள முடியும் என்பதை என்னால் ஊகிக்க முடியவில்லை”, என்று கோலாலம்பூரில் ஒரு கருத்தரங்கில் பேசிய பின்னர் செய்தியாளர்களிடம் கூறினார்.

முன்னதாக, இதே கருத்தரங்கில் பேசிய நஜிப், அம்னோ சீர்திருத்தங்களை ஏற்றுக்கொள்ள வேண்டும், இல்லையேல் மத்திய கிழக்கின் சர்வாதிகார அரசுகள் அரேபிய வசந்தம் என்று கூறப்படும் கிளர்சியால் கவிழ்க்கப்பட்ட கதிதான் அம்னோவுக்கும் என்று கூறினார்.

TAGS: