அம்னோ உறுப்பினர்களைக் கொண்டு மட்டும் தேர்தல் வெற்றியை உறுதிப்படுத்த முடியாது

அம்னோ, 3.4 மில்லியன் பேரைக் கட்சி உறுப்பினர்களாக்கி இருப்பதை வைத்து பொதுத் தேர்தலில் வெற்றி உறுதி என்று அதிகப்படி நம்பிக்கை கொண்டுவிடக்கூடாது.

தேர்தல்  வெற்றிக்கு உறுப்பினர்தொகை பெரிதாக இருப்பது மட்டும் போதாது  என்று அம்னோ தகவல் பிரிவுத் தலைவர் அஹ்மட் மஸ்லான் கூறினார்.

“(ஏனென்றால்) 12மில்லியன் வாக்காளரில் நான்கில் ஒரு பகுதியினர்தான் அம்னோ உறுப்பினர்கள்.” இன்று கோலாலம்பூரில் வெளிநாட்டு அம்னோ மன்றத்தின் முன்னாள் உறுப்பினர்கள் ஏற்பாடு செய்திருந்த கருத்தரங்கு ஒன்றைத் தொடக்கிவைத்த பின்னர் அவர் செய்தியாளர்களிடம் இதனைத் தெரிவித்தார்.

இப்போதைக்கு 3மில்லியன் அம்னோ உறுப்பினர்கள் வாக்காளர்களாகப் பதிவு செய்து கொண்டிருக்கிறார்கள்.

அதனால் மற்ற வாக்காளர்களின், குறிப்பாக மதில்மேல் பூனையாக இருப்போரின் ஆதரவைப் பெற அம்னோ உறுப்பினர்கள் கடுமையாக பாடுபட வேண்டும்  என்றாரவர்.

“…மற்ற வாக்காளர்களையும் அணுகி அவர்கள் அம்னோவையும் பிஎன்னையும் ஆதரிக்குமாறு வலியுறுத்த வேண்டும் ”, என்றாரவர்.

-பெர்னாமா

TAGS: