புரிதல் உடன்பாட்டில் முன்னேற்றமில்லை என இண்ட்ராப் அதிருப்தி

1 mouஇண்ட்ராப் தலைவர் பி.வேதமூர்த்தி அரசாங்கப் பதவி ஏற்று 100 நாள்களுக்குமேல்  ஆகிவிட்டன ஆனால், பிஎன்னுடன் செய்துகொள்ளப்பட்ட 32-அம்ச உடன்பாட்டில், ஒரே ஒரு விசயத்தைத் தவிர்த்து,  எவ்வித முன்னேற்றமும் காணப்படாமல் இருப்பதாக இண்ட்ராப் கூறுகிறது.

பிரதமர்துறையில் ஒரு புதிய பிரிவு உருவாக்கப்பட்டது மட்டுமே ஒரு முன்னேற்றம்.

“அப்பிரிவின் தலைவரிடம் (வேதமூர்த்தி) முழு அதிகாரத்தை ஒப்படைத்தல், 2013 பட்ஜெட்டில் அதற்கான ஒதுக்கீடு, அப் பிரிவின் அமைப்புமுறையை வரையறுத்தல், நிபுணத்துவ இயக்கக் குழுவை அமைத்தல், 2014 பட்ஜெட்டுக்குத் திட்டமிடல் ஆகியவை திருப்திகரமாக இல்லை”,என்றது கூறியது.

அப்பிரிவுக்குத் தனித்து இயங்கும் அதிகாரம் இல்லை என்பதால் அப்பிரிவின் எல்லா விவகாரங்களிலும்  பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கே முடிவெடுக்க வேண்டியுள்ளது. அவருக்குப் போதுமான நேரம் இருப்பதில்லை என்பதால் அதன் பணிகள் தேங்கி நிற்கின்றன.